Quoteவிஷ்ணு மகாயக்ஞத்தில் மந்திர் தரிசனம், பரிக்ரமா மற்றும் பூர்ணாஹுதி மேற்கொண்டார்
Quoteதேசத்தின் நிலையான வளர்ச்சிக்காகவும் ஏழைகளின் நலனுக்காகவும் பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்தைக் கோரினார்
Quote"இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எந்த சக்தியாலும் அதில் வெற்றி பெற முடியவில்லை"
Quote"இந்திய சமுதாயத்தின் வலிமையும் உத்வேகமும்தான் தேசத்தின் அழியாத் தன்மையைக் காக்கிறது"
Quote"பகவான் தேவ்நாராயணன் காட்டிய பாதை அனைவரின் முயற்சியின் மூலம் அனைவரது வளர்ச்சி ஆகும் - இன்று நாடு அந்தப் பாதையில் செல்கிறது"
Quote"பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்த நாடு முயற்சிக்கிறது"
Quote"தேசியப் பாதுகாப்பாக இருந்தாலும் சரி, கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாக இருந்தாலும் சரி, குர்ஜார் சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பாதுகாப்பில் தமது பங்கை ஆற்றி வருகிறது"
Quote"கடந்த பல ஆண்டுகளின் தவறுகளை புதிய இந்தியா சரிசெய்து, அறியப்படாத நாயகர்களை

நண்பர்களே,  இந்த சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை. பகவான் ஸ்ரீ தேவநாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பும் யாத்ரீகராக வந்துள்ளேன். தேவ்நாராயண் ஜி மற்றும் ‘ஜனதா ஜனார்தன்’ இருவரையும் தரிசனம் செய்ததன் மூலம் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இங்கு வந்துள்ள மற்ற யாத்ரீகர்களைப் போலவே, தேசத்தின் நிலையான வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்காகவும் பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் ஆசீர்வாதத்தை நானும் கோருகிறேன்.

நண்பர்களே, இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல. நமது நாகரிகம், கலாச்சாரம், நல்லிணக்கம் மற்றும் ஆற்றலின் வெளிப்பாடுதான் இந்தியா. வேறு பல நாகரிகங்கள் மாறிவரும் காலத்துக்கு ஏற்ப மாற முடியாமல் அழிந்துவிட்ட நிலையில், இந்திய நாகரிகத்தின் மீள்தன்மை நீடிக்கிறது. இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எந்த சக்தியாலும் இந்தியாவை எதுவும் செய்ய இயலாது.

இன்றைய இந்தியா ஒரு மகத்தான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது. இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பயணத்தில், வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தில் இருந்து உருவாகி அனைவருக்கும் வழிகாட்டும் ஒளியாகச் செயல்படும் ஆற்றல் நீடிக்கிறது.

பகவான் ஸ்ரீ தேவ்நாராயணன் எப்போதும் சேவைக்கும் மக்கள் நலனுக்கும் முன்னுரிமை அளித்தார். மக்கள் நலனுக்கான ஸ்ரீ தேவ்நாராயணனின் அர்ப்பணிப்பையும், மனித குலத்திற்கு அவர் ஆற்றிய சேவையையும் யாரும் மறக்க இயலாது. பகவான் தேவ்நாராயணன் காட்டிய பாதை அனைவரின் ஆதரவு மூலம் அனைவரின் வளர்ச்சி.  இன்று நாடு அதே பாதையில் செல்கிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்க கடந்த 8 அல்லது 9 ஆண்டுகளில் நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பின்தங்கியவர்களுக்கு முன்னுரிம என்ற தாரக மந்திரத்துடன் செயல்படுகிறது.

ஏழைகளுக்கு தரமான உணவு தானியங்கள் கிடைப்பதில் ஒரு காலத்தில் சிக்கல் நிலவியது. இன்று, ஒவ்வொரு பயனாளியும் முழு அளவில் உணவு தானியங்களை இலவசமாகப் பெறுகிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மருத்துவ சிகிச்சை குறித்த கவலைகளை நிவர்த்தி செய்துள்ளது.  கழிப்பறை, எரிவாயு இணைப்பு மற்றும் மின்சாரம் போன்றவை தொடர்பான ஏழை மக்களின் கவலையையும் தற்போது அரசு நிவர்த்தி செய்கிறது. தற்போது வங்கிகளின் கதவுகள் அனைவருக்கும் திறந்திருக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தவர் அளவுக்கு வேறு யாருக்கும் தண்ணீரின் மதிப்பு தெரியாது. நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், 3 கோடி குடும்பங்கள் மட்டுமே தங்கள் வீடுகளில் பாதுகாப்பான குடிநீர்க் குழாய் இணைப்பு பெற்றிருந்தனர். 16 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தண்ணீருக்காக தினமும் போராட வேண்டி இருந்தது.  கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசின் முயற்சியால், இதுவரை பதினோரு கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன.  விவசாய நிலங்களுக்கு நீர் வழங்குவதற்காக நாட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரம்பரிய முறைகளை விரிவுபடுத்தினாலும் அல்லது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், ஒவ்வொரு முயற்சியிலும் விவசாயிகள் ஆதரிக்கப்படுகிறார்கள். பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டத்தின் மூலம் ராஜஸ்தான் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 15,000 கோடி ரூபாய் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

|

நண்பர்களே,

நாட்டில் கௌசேவா உணர்வு அதிகரித்து வருகிறது. கால் மற்றும் வாய் நோய்களுக்கான தேசிய அளவிலான தடுப்பூசி இயக்கம், ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் மற்றும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கால்நடைச் செல்வங்கள் நமது கிராமப்புறப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதி. அவை நமது நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.  அதனால்தான், முதன்முறையாக, கிசான் கடன் அட்டைகள், கால்நடை வளர்ப்பு பிரிவு மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோபர்தன் திட்டம் வீணாகும் கழிவுகளை செல்வமாக மாற்றுகிறது.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, பாஞ்ச் பிரான் எனப்படும் 5 உறுதி முக்கிய மொழிகளை நான் குறிப்பிட்டேன். படைப்பாற்றல் மற்றும் கொண்டாட்ட உற்சாகத்தைக் காணக்கூடிய ஒரு பாரம்பரிய நிலம் ராஜஸ்தான். இங்கு  உழைப்பில் சேவையைக் காணலாம் .  வீரம் என்பது ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. இந்த நிலம் பல தரப்புக்கும் ஏற்புடையதாக உள்ளது.

|

தேஜாஜி முதல் பாபுஜி வரை, கோகாஜி முதல் ராம்தேவ்ஜி வரை, பாப்பா ராவல் முதல் மகாராணா பிரதாப் வரை என பல ஆளுமைகளின் மகத்தான பங்களிப்பு எப்போதும் நாட்டை வழிநடத்துவதாகக் கூறினார். குறிப்பாக, குர்ஜார் சமூகத்தின் பங்களிப்பு,  இந்த சமூகம் எப்போதும் வீரம் மற்றும் தேசபக்திக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தேசிய பாதுகாப்பு அல்லது கலாச்சாரப் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், குர்ஜார் சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பங்கு வகித்து வருகிறது.  மேலும் பிஜோலியா கிசான் இயக்கத்தை வழிநடத்திய விஜய் சிங் பதிக் என்று அழைக்கப்படும் கிராந்திவீர் பூப் சிங் போன்ற குர்ஜார் சமூக ஆளுமைகளின் பங்கு அளப்பரியது. குர்ஜார் சமூகப் பெண்களின் துணிச்சல் மற்றும் பங்களிப்பும் குறைந்ததல்ல. ராம்பியாரி குர்ஜார் மற்றும் பன்னா தாய் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.  எண்ணற்ற போராளிகள் நமது வரலாற்றில் உரிய இடத்தைப் பெற முடியாமல் போனது நாட்டின் துரதிஷ்டம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்த இந்தத் தவறுகளை புதிய இந்தியா சரிசெய்து வருகிறது.

|

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, பாஞ்ச் பிரான் எனப்படும் 5 உறுதி முக்கிய மொழிகளை நான் குறிப்பிட்டேன். படைப்பாற்றல் மற்றும் கொண்டாட்ட உற்சாகத்தைக் காணக்கூடிய ஒரு பாரம்பரிய நிலம் ராஜஸ்தான். இங்கு  உழைப்பில் சேவையைக் காணலாம் .  வீரம் என்பது ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. இந்த நிலம் பல தரப்புக்கும் ஏற்புடையதாக உள்ளது.

|

நண்பர்களே, பகவான் தேவ்நாராயண் ஜி-யின் அறிவுரைகளையும் அவரது போதனைகளையும் முன்னோக்கி எடுத்துச் செல்வதில் குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்த புதிய தலைமுறையினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது குர்ஜார் சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கும். நாடு முன்னேற உதவும். ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு 21 ஆம் நூற்றாண்டின் இந்தக் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியம். இன்று முழு உலகமும் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. மேலும், உலகம் முழுவதும் இந்தியாவின் வலிமை காட்டப்பட்டுள்ளதன் மூலம் இந்த மண்ணின் போர்வீரர்களின் பெருமையும் அதிகரித்துள்ளது. இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு, உலகின் ஒவ்வொரு முக்கிய தளத்திலும் நம்பிக்கையுடன் பேசுகிறது. நமது தீர்மானங்களை செயலில் நிரூபிப்பதன் மூலம் உலகின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் வாழ வேண்டும்.

தாமரையில் தோன்றிய பகவான் தேவ்நாராயண் ஜி-யின் 1111-வது பிறந்த ஆண்டில், இந்தியா ஜி-20 தலைமைப் பதவியை ஏற்றுள்ளது. இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவச் சின்னமும் பூமியைச் சுமந்து செல்லும் தாமரையைக் குறிப்பதாக தற்செயலாக அமைந்துள்ளது. சமூக ஆற்றலுக்கும் பக்திச் சூழலுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். அனைவருக்கும் நன்றி!

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Agri and processed foods exports rise 7% to $ 5.9 billion in Q1

Media Coverage

Agri and processed foods exports rise 7% to $ 5.9 billion in Q1
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 18, 2025
July 18, 2025

Appreciation from Citizens on From Villages to Global Markets India’s Progressive Leap under the Leadership of PM Modi