இந்த பத்து ஆண்டுகள் உத்தராகண்டின் ஆண்டுகளாக இருக்கும்: பிரதமர்
நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் உத்தராகண்ட் முதலிடத்தை எட்டியுள்ளது: பிரதமர்
'எளிதாக தொழில் தொடங்குதலில்' 'சாதனையாளர்கள்' பிரிவிலும், புத்தொழில் பிரிவில் 'தலைமை' பிரிவிலும் உத்தராகண்ட் இடம் பெற்றுள்ளது: பிரதமர்
ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மத்திய அரசின் உதவி தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது: பிரதமர்
மாநிலத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. மேலும் போக்குவரத்து இணைப்பு திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றன: பிரதமர்
'துடிப்பான கிராமம்' திட்டத்தின் கீழ், எல்லையோர கிராமங்களை நாட்டின் 'முதல் கிராமங்களாக' அரசு கருதுகிறது. முன்பு இருந்தது போல் கடைசி கிராமங்களாக அல்ல: பிரதமர்
உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது-இது முழு நாடடிலும் விவாதிக்கப்படுகிறது: பிரதமர்
மாநிலத்தின் வளர்ச்சியையும் அடையாளத்தையும் வலுப்படுத்துவதற்காக மாநிலத்தின் மக்களுக்கும் மாநிலத்திற்கு வருகை தரும் யாத்ர

 உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. அதாவது, உத்தரகண்ட் அதன் 25 வது ஆண்டில் நுழைகிறது. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உத்தராகண்டின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இதில் ஒரு மகிழ்ச்சிகரமான தற்செயல் நிகழ்வு உள்ளது: நமது முன்னேற்றம் தேசிய வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க காலகட்டமான பாரதத்தின் அமிர்த  காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சங்கமம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இந்த சகாப்தத்தில் நமது பகிரப்பட்ட விருப்பங்கள் நனவாகின்றன. வரும் 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை மையமாகக் கொண்டு உத்தராகண்ட் மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் மூலம், உத்தராகண்டின் பெருமை கொண்டாடப்படும். வளர்ந்த உத்தராகண்ட் என்ற பார்வை ஒவ்வொரு குடியிருப்பாளரிடமும் எதிரொலிக்கும். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்திற்காக, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக, வெளிநாடுவாழ் இந்தியத் தலைவர் உத்தராகண்ட் சம்மேளனமும் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புலம்பெயர்ந்த நமது உத்தராகண்ட்  மக்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

உத்தராகண்ட் மக்கள் தங்கள் நம்பிக்கைகளை, விருப்பங்களை உணர, ஒரு தனி மாநிலத்திற்காக நீண்டகாலம் கடினமாக போராட வேண்டியிருந்தது. அடல் அவர்களின்  மதிப்பிற்குரிய தலைமையின் கீழ், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது இந்தப் போராட்டம் வெற்றியில் முடிந்தது. உத்தராகண்டின் படைப்புக்கு உத்வேகம் அளித்த கனவு படிப்படியாக உயிர்பெறுவதைக் காண்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தேவபூமி உத்தராகண்ட் எப்போதும் நம் அனைவர் மீதும் பிஜேபியின் மீதும் அளவற்ற அன்பையும் பாசத்தையும் பொழிந்துள்ளது. இதற்குப் பதிலாக, தேவபூமிக்கு சேவை செய்வதில் நமது அர்ப்பணிப்பால் உந்தப்பட்டு, உத்தராகண்டின் இடைவிடாத வளர்ச்சிக்கு பிஜேபி உறுதிபூண்டுள்ளது.

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்புதான் கேதார்நாத் ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு, பாபா கேதார்நாத் ஆலயத்திற்கு சென்று, அவரது காலடியில் அமர்ந்த பிறகு, இந்த தசாப்தம் உத்தராகண்டிற்கு சொந்தமானதாக இருக்கும் என்று நான் நம்பிக்கையுடன் அறிவித்தேன். அரசு எனது நம்பிக்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் நான் சொல்வது சரி என்பதை நிரூபித்துள்ளது. இன்று, உத்தராகண்ட் வளர்ச்சியில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த ஆண்டு நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் உத்தராகண்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. எளிதாக வணிகம் செய்வதில் சாதனையாளராகவும், ஸ்டார்ட்அப் தரவரிசையில் ஒரு தலைவராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், உத்தராகண்டின் வளர்ச்சி விகிதம் 1.25 மடங்கு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஜிஎஸ்டி வசூல் 14% அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டில், உத்தராகண்டின் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு  ரூ .1.25 லட்சமாக இருந்தது, இது இப்போது ரூ .2.60 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், 2014-ம் ஆண்டில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)  ரூ .1.5 லட்சம் கோடியாக இருந்தது, இப்போது அது ஏறத்தாழ இரட்டிப்பாகி ரூ .3.5 லட்சம் கோடியாக உள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் உத்தராகண்ட்  இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதையும், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி அதிகரிப்பதையும் பிரதிபலிக்கின்றன.

 

அரசின் முயற்சிகள் காரணமாக, உத்தராகண்ட் மக்களுக்கு, குறிப்பாக நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் வாழ்க்கை எளிதாகி வருகிறது. 2014-க்கு முன், உத்தராகண்டில் வீடுகளுக்கு குழாய் நீர் கிடைப்பது 5%-க்கும் குறைவாக இருந்தது. இன்று, அந்த எண்ணிக்கை 96%-க்கும் அதிகமாக உள்ளது. இதில்  முழுமையை அடைவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம். இதேபோல், 2014-க்கு முன், பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 6,000 கி.மீ கிராமப்புற சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டன. தற்போது, இச்சாலைகளின் மொத்த நீளம் 20,000 கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது. மலைகளில் சாலைகள் அமைப்பதில் உள்ள சவால்களையும் அவை எவ்வளவு அவசியம் என்பதையும் நான் நன்கு அறிவேன். பல்லாயிரக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டுவதன் மூலமும், ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்குவதன் மூலமும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் எண்ணற்ற குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளை விநியோகிப்பதன் மூலமும், ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் இலவச மருத்துவ சிகிச்சையை வழங்குவதன் மூலமும், அனைத்து வயதினருக்கும், பின்னணி கொண்ட மக்களுக்கும் எங்கள் அரசு ஒரு கூட்டாளராக செயல்படுகிறது.

நண்பர்களே,

இரட்டை என்ஜின் அரசின் நன்மைகளை உத்தராகண்டில் நாம் தெளிவாகக் காண முடியும். மத்திய அரசிடமிருந்து உத்தரகாண்ட் பெறும் நிதி உதவி கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இந்த நிர்வாக மாதிரியின் கீழ், எய்ம்ஸ் துணை மையம் மாநிலத்திற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், டேராடூன் நாட்டின் முதல் ட்ரோன் பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் தாயகமாகவும் மாறியுள்ளது. உதம் சிங் நகரில் ஸ்மார்ட் தொழில்துறை நகரியத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் உள்ளன. இன்று, உத்தராகண்ட்  முழுவதும் ரூ .2 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் திட்டம் 2026-க்குள் நிறைவடையும் பாதையில் உள்ளது, மேலும் உத்தராகண்டில் உள்ள 11 ரயில் நிலையங்கள் அமிர்த நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. டேராடூன்-தில்லி விரைவுப்பாதை திட்டம்  முடிந்ததும், இரு நகரங்களுக்கும் இடையிலான பயணம் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஆகும். சாராம்சத்தில், உத்தராகண்டில் ஒரு பெரிய வளர்ச்சி முயற்சி நடந்து வருகிறது, இது இந்த தேவபூமியின் பெருமையை மேம்படுத்துகிறது மற்றும் மலைகளில் இருந்து இடம்பெயர்வதை கணிசமாகக் குறைக்கிறது.

நண்பர்களே,

வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், பாரம்பரியத்தை பாதுகாக்கவும் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. தேவபூமியின் வளமான கலாச்சாரத்தை கௌரவிக்கும் வகையில் கேதார்நாத் தாமின் அற்புதமான, ஆன்மீக புனரமைப்பு நடந்து வருகிறது. பத்ரிநாத் ஆலய வளாக மேம்பாட்டுப்  பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மானஸ் கண்ட் மந்திர் மாலா இயக்கத்தின்  முதல் கட்டத்தில், 16 பழமையான கோவில் பகுதிகள் புத்துயிர் பெறுகின்றன. அனைத்து பருவநிலைகளிலும் உள்ள சாலை, சார் தாம் யாத்திரையை மேலும் அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளது. பர்வத்மாலா திட்டத்தின் மூலம், தண்டுவடப் பாதைகள்  மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கின்றன. மானா கிராமத்திற்கு நான் சென்றதை நினைவு கூர்கிறேன், அங்கு எல்லையில் நமது சகோதர சகோதரிகளின் அளவற்ற அன்பை அனுபவித்தேன். துடிப்பான கிராமத் திட்டம் மனாவில் இருந்தே தொடங்கப்பட்டது, எங்கள் அரசு எல்லையோர கிராமங்களை நாட்டின் கடைசி கிராமமாக கருதாமல், நாட்டின் முதல் கிராமமாக கருதுகிறது. இன்று உத்தராகண்டில் சுமார் 50 கிராமங்கள் இந்த முயற்சியின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் உத்தராகண்டில் சுற்றுலா வாய்ப்புகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன. சுற்றுலா வளரும்போது, மாநில இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, இந்த ஆண்டு ஏறத்தாழ 6 கோடி சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உத்தராகண்டுக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு, சார் தாம் யாத்ரீகர்களின் சாதனை எண்ணிக்கை 24 லட்சம்; கடந்த ஆண்டு 54 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் சார் தாம் யாத்திரையை மேற்கொண்டனர். இது உணவுவிடுதி  மற்றும் தங்குமிட உரிமையாளர்கள் முதல் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் ஜவுளி வணிகர்கள் வரை அனைவருக்கும் பயனளித்துள்ளது. கடந்த ஆண்டுகளில், 5,000 க்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

நண்பர்களே,

இன்று, உத்தராகண்ட் முடிவுகளை எடுத்து வருகிறது. கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. இது தேசத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது. ஒரு முழுமையான ஆய்வுக்குப் பின், உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது, இதை நான் மதச்சார்பற்ற சிவில் கோட் என்று குறிப்பிடுகிறேன். முழு நாடும் இப்போது பொது சிவில் சட்டம் பற்றி விவாதித்து அதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்து வருகிறது. உத்தராகண்ட் மாநில இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க மோசடி தடுப்புச் சட்டத்தையும் உத்தராகண்ட் அரசு நிறைவேற்றியது. மோசடி கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கு ஆட்சேர்ப்பு இப்போது முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் சரியான நேரத்திலும் நடத்தப்படுகிறது. இந்த துறைகளில் உத்தராகண்ட் மாநிலத்தின் வெற்றிகள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாறி வருகின்றன.

நண்பர்களே,

இன்று நவம்பர் 9 ஆம் தேதி, சக்தியின் சின்னமான ஒன்பதாம் எண் கொண்ட மங்களகரமான தேதி. இந்த சிறப்பு நாளில், ஒன்பது கோரிக்கைகளை நான் முன்வைக்க விரும்புகிறேன் - உத்தரகண்ட் மக்களுக்கு ஐந்து கோரிக்கைகள், மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு நான்கு.

நண்பர்களே,

உத்தராகண்டின் பேச்சுவழக்குகளான கார்வாலி, குமாவோனி மற்றும் ஜான்சாரி போன்றவை நம்பமுடியாத அளவிற்கு வளமானவை. அவற்றைப் பாதுகாப்பது முக்கியம். மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை பராமரிக்க எதிர்கால சந்ததியினருக்கு இந்த பேச்சுவழக்குகளை உத்தராகண்ட் மக்கள் கற்பிக்க வேண்டும் என்பதே எனது முதல் வேண்டுகோள். உத்தராகண்ட் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆழ்ந்த மரியாதைக்கு நன்கு அறியப்பட்டதாகும். இது கௌரா தேவியின் நிலம், இங்குள்ள ஒவ்வொரு பெண்ணும் மா நந்தாவின் வெளிப்பாடு. இயற்கையைப் பாதுகாப்பது மிக முக்கியம், எனவே எனது இரண்டாவது வேண்டுகோள், தாய்மார்களின் பெயரில் மரக்கன்றுகளை நடும் "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" இயக்கத்தை ஆதரிக்க வேண்டும். இந்த இயக்கம் நாடு முழுவதும் வேகம் பெற்று வருகிறது, உத்தராகண்டின் தீவிர பங்கேற்பு பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நமக்கு உதவும். 'நௌல் தாரா'வை வழிபடும் மரபு நிலைநிறுத்தப்பட வேண்டும். எனது மூன்றாவது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் நதிகள் மற்றும் நாவுலை பாதுகாக்க வேண்டும், நீர் தூய்மைக்கான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதாகும். எனது நான்காவது வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் கிராமங்களுக்கு தவறாமல் சென்று உங்கள் வேர்களுடன் இணைந்திருக்க வேண்டும், குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு, பிணைப்பை வலுவாக வைத்திருக்க வேண்டும். திவாரி வீடுகள் என்று அழைக்கப்படும் பழைய கிராம வீடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது எனது ஐந்தாவது கோரிக்கை. அவற்றைக் கைவிடாதீர்கள்; அதற்கு பதிலாக, வருமானத்தை ஈட்டுவதற்காக அவற்றை தங்குமிடங்களாக மாற்றுங்கள்.

நண்பர்களே,

உத்தராகண்டில் சுற்றுலா வேகமாக வளர்ந்து வருகிறது, நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் வருகிறார்கள். எல்லா சுற்றுலாப் பயணிகளுக்கும் எனக்கு நான்கு கோரிக்கைகள் உள்ளன. முதலாவதாக, நீங்கள் கம்பீரமான இமயமலைக்குச் செல்லும்போது, தூய்மைக்கு முன்னுரிமை அளித்து, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதை உறுதி செய்யுங்கள். இரண்டாவதாக, உங்கள் பயண பட்ஜெட்டில் குறைந்தது 5% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு செலவழிப்பதன் மூலம் "உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு" என்ற மந்திரத்தைத் தழுவுங்கள். மூன்றாவதாக, மலைகளில் போக்குவரத்து விதிகளை கடைபிடியுங்கள், ஏனெனில் பாதுகாப்பு மிக முக்கியமானது. நான்காவதாக, மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு முன் அவற்றின் பழக்கவழக்கங்கள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி அறிந்து கொண்டு ஆடைப் பழக்கத்தைக்  கடைப்பிடியுங்கள். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுவதில் உத்தராகண்ட் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். உத்தராகண்ட் மக்களுக்கான  ஐந்து கோரிக்கைகளும், பார்வையாளர்களுக்கு நான் விடுத்த நான்கு வேண்டுகோள்களும் தேவபூமியின் அடையாளத்தை கணிசமாக வலுப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

நண்பர்களே,

உத்தராகண்ட் மாநிலத்தை விரைவான வளர்ச்சிப் பாதையில் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நாட்டின் இலக்குகளை அடைவதில் நமது உத்தராகண்ட் தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என்று நான் நம்புகிறேன். உத்தராகண்ட் உருவானதன் வெள்ளி விழாவில், நான் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபா கேதார் உங்கள் அனைவருக்கும் செழிப்பை ஆசீர்வதிக்கட்டும். மிக்க நன்றி!

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi