Quote“தனது தெய்வீகக் குரலால் உலகம் முழுவதையும் சகோதரி லதா வென்றார்”
Quote"அயோத்தியின் பிரமாண்ட கோவிலுக்கு பகவான் ஸ்ரீராமர் வருகை தரவுள்ளார்"
Quote"ராமரின் ஆசீர்வாதத்துடன் கோவிலின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடப்பதைக் கண்டு நாடு பரவசம் அடைந்துள்ளது"
Quote"இது 'பாரம்பரியத்தில் பெருமை' என்பதன் வலியுறுத்தலோ, நாட்டின் வளர்ச்சியின் புதிய அத்தியாயமு் ஆகும்"
Quote"பகவான் ராமர் நமது நாகரிகத்தின் அடையாளமாகவும் மற்றும் நமது ஒழுக்கம், பண்பாடு, கண்ணியம், கடமை ஆகியவற்றில் வாழும் சித்தாந்தமாகவும் உள்ளார்"
Quote"சகோதரி லதாவின் கீர்த்தனைகள் மூலம் நமது மனம் பகவான் ராமரில் மூழ்கியது "
Quote"சகோதரி லதா பாடிய மந்திரங்கள் அவரது குரலை மட்டும் எதிரொலிக்காமல், அவரது நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் தூய்மையையும் எதிரொலித்தது"
Quote" சகோதரி லதாவின் குரல் இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் நீண்ட காலத்திற்கு இணைக்கும்"

நமஸ்காரம்!

இன்று நம் அனைவரது மரியாதைக்கும், பாசத்துக்கும் உரிய மூத்த சகோதரி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாள். தற்செயலாக நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அன்னை சந்திரகாந்தாவின் வழிபாட்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. கடுமையான தவம் செய்யும் ஒருவர் அன்னை சந்திரகாந்தாவின் அருளால் தெய்வீகக் குரலை அனுபவித்து, உணர்கிறார்கள். மூத்த சகோதரி லதா அன்னை சரஸ்வதி தேவியின் பக்தர்களில் ஒருவர். அவர் தனது தெய்வீகக் குரலால் அனைவரையும் வசீகரித்தவர். அவர் தவம் செய்தார். நாம் அனைவரும் வரம் பெற்றோம். அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கரின் சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னை சரஸ்வதி தேவியின் பிரம்மாண்டமான வீணை இசைக்கருவி இசைப் பயிற்சியின் அடையாளமாக மாறும். இந்த சதுக்கத்தில் பாயும் ஏரியின் நீரில் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட 92 வெள்ளைத் தாமரைகள் லதா மங்கேஷ்கரின் வாழ்நாளை குறிப்பதாக அமையும். இந்த புதுமையான முயற்சிக்காக யோகி தலைமையிலான அரசு, அயோத்தி மேம்பாட்டு ஆணையம், அயோத்தி மக்களை மனதார பாராட்டுகிறேன். இந்த சமயத்தில் பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கருக்கு நமது அஞ்சலியை செலுத்துவோம். அவரது மெல்லிசைப் பாடல்கள் மூலம் அவரின் வாழ்விலிருந்து நாம் பெற்ற ஆசீர்வாதங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என நான் பகவான் ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

நண்பர்களே!

சகோதரி லதாவுடனான பல அன்பான, உணர்ச்சிப்பூர்வமான நினைவுகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன. அவருடன் பேசும்போதெல்லாம், அவரின் இனிமையான குரல் என்னை மிகவும் ஈர்த்தது. சகோதரி லதா என்னிடம் பேசும்போது, “மனிதன் வயதால் அறியப்படுவதில்லை. செயல்களால் அறியப்படுகிறான். அவன் நாட்டுக்கு எவ்வளவு செய்கிறானோ, அவ்வளவு மேன்மையடைகிறான்” என்று அடிக்கடி கூறுவார். அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கரின் சதுக்கம் மற்றும் அவருடனான அனைத்து நினைவுகளும் நாட்டின் மீதான நமது கடமை உணர்வை உணர்த்த உதவும்”.

நண்பர்களே!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தபோது சகோதரி லதாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இறுதியாக, ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அவரால் நம்ப முடியவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகவும், மகிழ்ச்சியாகவும் லதா இருந்தார். சகோதரி லதா பாடிய 'மன் கி அயோத்தி தாப் தக் சூனி, ஜப் தக் ராம் நா ஆயே' என்ற பாடல் தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. அயோத்தியின் பிரம்மாண்ட கோயிலுக்கு ராமர் உடனே காட்சியளித்தது போல் இருந்தது. கோடிக்கணக்கான மக்கள் மனதில் ராமரை கொண்டு சேர்த்த சகோதரி லதாவின் பெயர் தற்போது அயோத்தியுடன் நிரந்தரமாக இணைந்துள்ளது. ராம் சரித் மானசில் “ராம் தே ஆதிக் ராம் கர் தாசா” இடம்பெற்றுள்ளது. ராமரின் பக்தர்கள் ராமரின் வருகைக்கு முன்பே வந்து விடுவார்கள் என்பது இதன் பொருள். தற்போது லதா மங்கேஷ்கரின் நினைவாக கட்டப்பட்டுள்ள சதுக்கம், ராமர் கோயில் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே வந்து விட்டது”.

  • Jitendra Kumar May 27, 2025

    🙏🙏🙏
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA May 30, 2024

    मोदी जी 400 पार
  • MLA Devyani Pharande February 17, 2024

    जय हो
  • Vaishali Tangsale February 14, 2024

    🙏🏻🙏🏻🙏🏻
  • ज्योती चंद्रकांत मारकडे February 12, 2024

    जय हो
  • Jayakumar G October 01, 2022

    jai hind jai hind🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏jai hind🙏🇮🇳
  • RSS SRS SwayamSewak September 30, 2022

    शेर कैसे बना मां दुर्गा का वाहन: तेज, शक्ति और सामर्थ्‍य मां दुर्गा का प्रतीक हैं और उनकी सवारी शेर प्रतीक है आक्रामकता और शौर्य का. आइए जानते हैं कि क्‍यों शेर मां दुर्गा का वाहन है और क्‍या है इसके पीछे की कथा? मां पार्वती का शिकार करने आया शेर एक बार देवी पार्वती घोर तपस्या में लीन थीं. उस दौरान वहां एक भूखा शेर देवी का शिकार करने के लिए वहां पहुंचा, लेकिन मां पार्वती तपस्या में इतनी डूबी थीं कि शेर काफी समय तक भूखे-प्यासे देवी पार्वती को चुपचाप निरंतर देखता रहा. देवी पार्वती को देखते-देखते शेर ने सोचा कि जब वो तपस्या से उठेंगी, तो वो उनको अपना आहार बना लेगा. लेकिन ऐसा नहीं हो सका. सालों तक भूखा बैठा रहा शेर माता के प्रभाव के चलते वह शेर भी तपस्या कर रही मां के साथ वहीं सालों चुपचाप बैठा रहा. देवी पार्वती की तपस्या जब पूर्ण हुई तो भगवान शिव प्रकट हुए और मां पार्वती को गौरवर्ण यानी मां गौरी होने का वरदान दिया. तभी से मां पार्वती महागौरी कहलाने लगीं. इसके बाद मां ने देखा कि शेर भी उनकी तपस्या के दौरान सालों तक भूखा-प्यास बैठा रहा. शेर को मिला मां दुर्गा की सवारी का वरदान शेर के इस प्रयास से मां प्रसन्न हुईं. उन्होंने सोचा कि शेर को भी उसकी तपस्या का फल मिलना चाहिए तो उन्होंने शेर को अपनी सवारी बना लिया. इस तरह से सिंह यानि शेर, मां दुर्गा का वाहन बना और मां दुर्गा का नाम शेरावाली पड़ा।।
  • Shailesh September 30, 2022

    Jay Hind
  • hari shankar shukla September 29, 2022

    नमो
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Ghana MPs honour PM Modi by donning Indian attire; wear pagdi and bandhgala suit to parliament

Media Coverage

Ghana MPs honour PM Modi by donning Indian attire; wear pagdi and bandhgala suit to parliament
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays tribute to Swami Vivekananda Ji on his Punya Tithi
July 04, 2025

The Prime Minister, Shri Narendra Modi paid tribute to Swami Vivekananda Ji on his Punya Tithi. He said that Swami Vivekananda Ji's thoughts and vision for our society remains our guiding light. He ignited a sense of pride and confidence in our history and cultural heritage, Shri Modi further added.

The Prime Minister posted on X;

"I bow to Swami Vivekananda Ji on his Punya Tithi. His thoughts and vision for our society remains our guiding light. He ignited a sense of pride and confidence in our history and cultural heritage. He also emphasised on walking the path of service and compassion."