ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிஜீ, தத்த பீடத்தின் அனைத்து முனிவர்களே, பக்தகோடி சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வாழ்த்துகள்!
தத்த பீடத்தை தரிசிக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்தது. அப்போதுதான், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்படி நீங்கள் அழைப்பு விடுத்தீர்கள். உங்கள் ஆசீர்வாதத்தை பெற நான் மீண்டும் வர வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் இன்று ஜப்பானுக்கு பயணம் செய்ய இருப்பதால் என்னால் வர முடியவில்லை. தத்தா பீடத்தின் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் நான் உடல் ரீதியாக பங்கேற்காமல் இருந்தாலும், எனது ஆன்மாவும், மனமும் உங்களிடமே இருக்கிறது.
இந்நன்னாளில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிக்கு எனது வாழ்த்துகளையும், வணக்கத்தையும் கூறிக்கொள்கிறேன். வாழ்வில் 80-வது ஆண்டு என்ற நிலை நமது கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமானது. பூஜ்ய சுவாமிகள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். சுவாமிஜியை பின்பற்றுபவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
துறவிகள் மற்றும் உன்னத மனிதர்கள் தொண்டு செய்வதற்கு பெயர் பெற்றவர்கள். மனித குலத்துக்கு தொண்டு மற்றும் சேவை செய்வதற்காக பிறந்தவர்கள் புனிதர்கள். எனவே, ஒரு துறவியின் பிறப்பும், வாழ்க்கையும் ஒரு தனிப்பட்ட மனிதரின் பயணம் மட்டுமல்ல. மாறாக, ஒரு சமுதாயத்தின் எழுச்சி மற்றும் நலனுக்கான பயணமும் அதனுடன் தொடர்புடையதுமாகும் . ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிஜீயின் வாழ்க்கை அதற்கு ஒரு சான்று. உதாரணம்.