“India's quick response during the earthquake has attracted the attention of the whole world. It is a reflection of the preparedness of our rescue and relief teams”
“India has nurtured its selflessness along with its self-sufficiency”
“Wherever there is a disaster in the world, India is found ready as a first responder”
“Wherever we reach with the 'Tiranga', there is an assurance that now that the Indian teams have arrived, the situation will start getting better”
“NDRF has built a very good reputation among the people of the country. The people of the country trust you”
“We have to strengthen our identity as the best relief and rescue team in the world. The better our own preparation, the better we will be able to serve the world”

உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!

மனித சமூகத்திற்காக மிகப்பெரிய பணியை செய்துவிட்டு நீங்கள் திரும்பி உள்ளீர்கள். உங்கள் அனைவரைக் கண்டும் நாடு பெருமை கொள்கிறது. வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என்னும் கருத்தை நமது கலாச்சாரம் கற்றுத் தந்துள்ளது. துருக்கியிலும், சிரியாவிலும் இந்த இந்திய மாண்புகளை ஒட்டுமொத்தக் குழுவும் நிரூபித்துள்ளது. மனிதாபிமானம் மற்றும் மனித உணர்வுடன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால் எந்த நாடாக இருந்தாலும் இந்தியா அதற்கு முன்னுரிமை அளிக்கும்.

நண்பர்களே,

இயற்கை பேரிடரின் போது எவ்வளவு விரைவாக உதவுகிறோம் என்பது மிகவும் முக்கியம். நிலநடுக்கத்திற்கு பிறகு எவ்வளவு விரைவாக நீங்கள் துருக்கியை சென்றடைந்தீர்கள் என்பது ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 10 நாட்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நீங்கள் அங்கு மேற்கொண்ட பணிகள் எழுச்சியூட்டுகிறது. தனது தேவைகளை நிறைவேற்றும் திறன் கொண்ட நபர், தன்னிறைவானவர் என்றும், பிறரது தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் மிக்கவர் தன்னலமில்லாதவர் என்றும் அழைக்கப்படுகிறார். இது தனி நபர்களுக்கு மட்டுமல்லாமல் நாடுகளுக்கும் பொருந்தும். கடந்த சில ஆண்டுகளில் தன்னிறைவுடன், தன்னலமற்ற அடையாளத்தையும் இந்தியா வலுப்படுத்தி உள்ளது.

நண்பர்களே,

மனிதாபிமானத்தில் இந்தியாவின் அக்கறையையும், பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உடனடியாக உதவுவதில் நமது உறுதிபாட்டையும் ஆபரேஷன் தோஸ்த் பிரதிபலிக்கிறது. உலகில்  பேரிடர்கள் ஏற்படும்போது முதலில் உதவ இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. இதர நாடுகள், இந்திய படை வீரர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது.  பேரிடர் காலத்தில் நமது மீட்பு மற்றும் நிவாரண திறனை அதிகரிக்க வேண்டும். உலகிலேயே மிகச்சிறந்த மீட்பு மற்றும் நிவாரணக் குழு என்ற நமது அடையாளத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை வணங்குகிறேன். நன்றி!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian Toy Sector Sees 239% Rise In Exports In FY23 Over FY15: Study

Media Coverage

Indian Toy Sector Sees 239% Rise In Exports In FY23 Over FY15: Study
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
January 05, 2025

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, January 26th. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.