கோரமான விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்திருப்பது குறித்து மிகுந்த வேதனையடைந்துள்ளேன். மக்களின் உயிரிழப்பு கற்பனைக்கு எட்டாத வேதனையை அளித்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது.
இந்த துயரச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு இழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்தது பாராட்டத்தக்கது. மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய வந்த ஏராளமான உள்ளூர் மக்களின் செயல் போற்றுதலுக்குரியது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடரவும், ரயில் பாதைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் ரயில்வே செயல்பட்டு வருகிறது.
இந்த சோகமான தருணத்தில் நான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்து பேசினேன். எனது வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திலிருந்து விடுபட்டு வர கடவுள் நமக்கு வலிமையை வழங்கட்டும். இது கவலையான நேரம். அனைவரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்திப்போம்.