மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் அவர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே வணக்கம்!
நண்பர்களே, இளம் ஆற்றலால் நாட்டின் வளர்ச்சி புதிய வேகத்தைப் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு செயலூக்கமான ஸ்டார்ட்அப் கொள்கை இருப்பதால், நாட்டில் சமமான விடாமுயற்சியுடன் கூடிய ஸ்டார்ட்அப் தலைமை உள்ளது என்ற உணர்வு உள்ளது. 8 வருடங்கள் என்ற குறுகிய காலத்தில், நாட்டின் ஸ்டார்ட்அப் கதை பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் எனது அரசாங்கம் அமைக்கப்பட்ட போது, ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை சுமார் 300-400 ஆக இருந்தது. இன்று சுமார் 70000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளனர். ஒவ்வொரு 7-8 நாட்களுக்கு ஒரு புதிய யூனிகார்ன் இந்த நாட்டில் உருவாகிறது.
நண்பர்களே, ஸ்டார்ட் அப்களின் பன்முகத்தன்மை அளவிட முடியாதது. 50% ஸ்டார்ட்அப்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவை. அவை பல மாநிலங்கள் மற்றும் நகரங்களை உள்ளடக்கியிருக்கின்றன. அவர்கள் 50 க்கும் மேற்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள். ஸ்டார்ட்அப்கள் நிஜ உலக பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தருகின்றனர். இன்றைய ஸ்டார்ட்அப்கள் எதிர்கால பன்னாட்டு நிறுவனங்களாக மாறும். ஸ்டார்ட்அப் பற்றிய கருத்து 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிலரிடையே விவாதிக்கப்பட்டது, இப்போது சாதாரண மக்களிடையே விவாதத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இந்த மாற்றம் தற்செயலானதல்ல, ஆனால் நன்கு சிந்திக்கப்பட்ட உத்தியின் விளைவாகும்.
நண்பர்களே, 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு, இளைஞர்களின் புத்தாக்க வலிமையில் அரசாங்கம் நம்பிக்கையை மீட்டெடுத்து, சாதகமான சூழலை உருவாக்கியது. யோசனை முதல் புதுமை வரை தொழில் முன்னேற்றத்திற்கான திட்டத்தை உருவாக்குவதன் மூலம் துறையை மேம்படுத்த மூன்று முனை அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது. இந்த உத்தியின் முதல் பகுதி, யோசனை, புதுமை, இன்குபேசன் மற்றும் தொழில் பற்றிய கருத்துகளைத் திரட்டுவது. இதற்கான செயல்முறைகள் தொடர்பான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டன. இரண்டாவது, அரசு விதிகளை தளர்த்துவது. இதன்மூலம் தேவையற்ற இடையூறுகள் அகற்றப்பட்டன. மூன்றாவதாக, ஒரு புதிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் புதுமைக்கான மனநிலையை மாற்றவும். இதைக் கருத்தில் கொண்டு, ஹேக்கத்தான் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 15 லட்சம் திறமையான இளைஞர்கள் இந்த ஹேக்கத்தான் இயக்கத்தில் ஈடுபட்டு ஸ்டார்ட்அப்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
7 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார்ட்-அப் இந்தியா தொடங்கப்பட்டது, யோசனைகளை புதுமையாக மாற்றி, தொழில்துறைக்கு அழைத்துச் செல்வதில் ஒரு பெரிய படியாகும். நாம் நாட்டின் வெற்றிக்கு புதிய உத்வேகத்தை அளிக்க வேண்டும். அதனை புதிய உச்சசத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தியா இன்று ஜி-20 நாடுகளில் வேகமாக முன்னேறி வரும் நாடாக உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இணையதள பயன்பாட்டில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல, உலக சில்லரை குறியீட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா உள்ளது. இந்த ஒன்றுபட்ட முயற்சிகளுடன், 135 கோடி மக்களின் விருப்பங்களை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மத்தியப்பிரதேச அரசுக்கும் எனது பாராட்டுகள்.