மேகாலயாவின் 50-வது மாநில உருவாக்க தினத்தன்று மேகாலயா மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநிலம் உருவாவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
3-4 தசாப்தங்கள் இடைவெளிக்குப்பின் இந்த மாநிலத்திற்கு வருகை தந்த முதலாவதாக பிரதமராக நான் இருந்தேன். இயற்கை, முன்னேற்றம், சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மை என்ற செய்தியை மேகாலயா உலகிற்கு வழங்கியுள்ளது.
நண்பர்களே, இனிய இசை மொழியால் தகவல் பரிமாற்றம் செய்யும் கிராமம், ஒவ்வொரு கிராமத்திலும் சேர்ந்திசை குழுக்கள் என்ற பாரம்பரியங்கள், கலை மற்றும் இசைத் துறைகளில் இந்த மாநிலத்தின் பங்களிப்புக்கு தலை வணங்குகிறேன். திறமைமிக்க கலைஞர்களால் மேகாலயா நிறைந்துள்ளது; ஷில்லாங் சேர்ந்திசை அமைப்பு அதனை புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்கிறது. மேகாலயாவின் அபரிமிதமான விளையாட்டுக் கலாச்சாரத்திலிருந்து நாடு புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
இயற்கை வேளாண் துறை இந்த மாநிலத்தில் சிறப்பாக வளர்ந்து வரக்கிறது. மேகாலயாவின் சகோதரிகள் மூங்கில் நெசவை மீட்டுருவாக்கம் செய்துள்ளனர்; அதன் கடின உழைப்பு விவசாயிகள் இயற்கை வேளாண்மையை மேகாலயாவின் அடையாளமாக்கி வலுப்படுத்துகிறார்கள்.
சிறந்த சாலைகள், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துத் தொடர்புக்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த மாநிலத்தின் இயற்கை வேளாண் பொருட்களுக்குப் புதிய உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தையை உத்தரவாதம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. பிரதமரின் கிராம சாலை திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களால் மேகாலயா பயனடைந்துள்ளது. இப்போது ஜல் ஜீவன் இயக்கம் 33 சதவீத வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு தந்துள்ளது. இது 2019ல் வெறும் ஒரு சதவீத வீடுகளாக இருந்தது. தடுப்பூசி கொண்டு செல்வதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்திய மாநிலங்களில் ஒன்றாக மேகாலயா இருக்கிறது.
மேகாலயா மக்களுக்குத் எனது தொடர்ச்சியான ஆதரவை எப்போதும் உண்டு. மேகாலயா அடைந்துள்ள சாதனைகள் பல, ஆனால் இன்னும் ஏராளமாக சாதிக்க வேண்டியுள்ளது. சுற்றுலா மற்றும் இயற்கை வேளாண் பொருட்களுக்கு அப்பால் மாநிலத்தின் புதிய துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதிபூண்டிருக்கிறது. நன்றி! ஜெய் ஹிந்த்!