Quote“புத்தரின் போதனைகள் ஒட்டு மொத்த உலகிற்கும் பொருந்தும், புத்தரின் தம்மா மனிதகுலத்திற்கானது”
Quote“புத்தர் ஒரு பிரபஞ்சம், ஏனெனில் இதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குவதாக புத்தர் கூறுகிறார். உச்சக்கட்ட பொறுப்புணர்வின் பலனே புத்தரின் புத்தத்துவம்”
Quote“புத்தர் இன்றைக்கும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உத்வேகம் அளிப்பவராகத் திகழ்கிறார், புத்த தம்ம சக்கரம் இந்தியாவின் மூவர்ணக் கொடியில் இடம் பெற்றிருக்கிறது, அது நமக்கு தூண்டுகோலாக திகழ்கிறது”
Quote“புத்தபிரானின் போதனையான ‘அப்பா தீபோ பவா’ இந்தியா தற்சார்பு அடைவதற்கு ஊக்கமளிக்கிறது”

நமோ புத்தயா!

உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல், உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு.ஜி.கிஷன் ரெட்டி, திரு.கிரண் ரிஜிஜூ, திரு.ஜோதிராதித்ய சிந்தியா, , இலங்கை அமைச்சர் திரு நமல் ராஜபக்சே அவர்களே, இதர இலங்கை அதிகாரிகளே, மியான்மர், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், பூடான், தென்கொரியா, இலங்கை, மங்கோலியா, ஜப்பான், சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் தூதர்களே, மரியாதைக்குரிய புத்த பிட்சுகளே!

அஸ்வின் மாத பவுர்ணமி புனித நாளில், குஷிநகரில் புத்தபிரான், அவரது நினைவுச் சின்னங்கள் வடிவில் காணப்படுகிறார். இலங்கையிலிருந்து முதல் விமானம் மூலம் மதிப்பிற்குரிய புத்த பிட்சுகள் மற்றும் நமது நண்பர்கள் குஷிநகர் வந்துள்ளனர்.

நீங்கள் இங்கு வந்திருப்பது, இந்தியா-இலங்கையிடையிலான பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடையாளம்.

|

நண்பர்களே!

அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வர் மகேந்திரனும், புதல்வி சங்கமித்திரையும் புத்தரின் போதனைகளை இலங்கையில் பரப்பினர். இதே நாளில்தான் (அஸ்வின் பவுர்ணமி) இளவரசர் மகிந்தா இலங்கையிலிருந்து திரும்பி வந்து, அந்நாடு புத்தரின் போதனைகளை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டச் செய்தியை தமது தந்தையிடம் தெரிவித்ததாக நம்பப்படுகிறது. இந்தச் செய்தி, புத்தரின் போதனைகள் ஒட்டுமொத்த உலகிற்குமானது புத்த தம்மம் மனிதகுலத்திற்கானது  என்ற நம்பிக்கையை அதிகரித்தது.

நண்பர்களே,

புத்தபிரானின் போதனைகளைப் பரப்புவதில் சர்வதேசப் புத்தமதக் கூட்டமைப்பின் பங்களிப்பு பாராட்டுகுரியது. இன்றைய தினம், புத்தபிரான் துஷித சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய மற்றொரு புனித நாள்.  எனவே அஸ்வின் பவுர்ணமி தினமான இன்று புத்தத் துறவிகள் தங்களது 3 மாத கால மழைக்கால தங்குமிடத்திலிருந்து வெளியே வருகின்றனர். அத்தகைய துறவிகளுக்குக் கடைசி விடியலைத் தந்த பெருமிதத்தை இன்று நானும் பெற்றுள்ளேன். இந்தத் தருணத்தில், சர்வதேசப் புத்தமதக் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் பொறுப்பு வகித்த திரு.சக்தி சின்ஹாவின் பங்களிப்பையும் நினைத்துப் பார்க்கிறேன். திரு.சின்ஹா அண்மையில் காலமானார். புத்தரின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை மற்றும் அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகமாக உள்ளது.

|

நண்பர்களே,

புத்தர் ஒரு பிரபஞ்சம், ஏனெனில் இதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குவதாகப் புத்தர் கூறுகிறார். உச்சக்கட்டப் பொறுப்புணர்வின் பலனே புத்தரின் புத்தத்துவம். சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றி தற்போது பேசும் உலகம், பருவநிலை மாற்றம் குறித்துக் கவலை தெரிவிக்கிறது.  புத்தரின் போதனைகளை நாம் பின்பற்றினால், ‘யார் செய்யப் போகிறார்கள்’ என்பதற்குப் பதிலாக ‘என்ன செய்ய வேண்டும்’ என்றப் பாதையை அது காட்டும். மனிதர்களின் ஆன்மாவில் வாழும் புத்தர், பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரத்தை இணைக்கிறார். புத்தரின் இந்தப் போதனையை இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளது. அறிவாற்றல், மாமனிதர்களின் சிறந்த போதனைகள் அல்லது சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிற்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை. நம்முடையது எதுவாக இருந்தாலும் அதனை ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவேதான் அஹிம்சை மற்றும் கருணை போன்ற மனித நற்பண்புகள் இயற்கையாகவே இந்தியாவின் இதயத்தில் பதிந்துள்ளது.

நண்பர்களே!

புத்தர் இன்றைக்கும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உத்வேகம் அளிப்பவராக திகழ்கிறார்.  புத்த தம்ம சக்கரம் இந்தியாவின் மூவர்ணக் கொடியில் இடம் பெற்று, நமக்குத் தூண்டுகோலாகத் திகழ்கிறது.  இன்றைக்கும் யாராவது இந்திய நாடாளுமன்றத்திற்கு சென்றால், ‘தர்ம சக்கரா பிரவார்தனைய’ என்ற வாசகத்தை நிச்சயம் காணலாம்.

புத்தபிரான் எல்லைகள் மற்றும் திசைகளைக் கடந்தவர் என்பதை குஜராத்தின் கடந்த காலம் காட்டுகிறது. குஜராத் மண்ணில் பிறந்த மகாத்மா காந்தி, புத்தரின் போதனைகளான உண்மை மற்றும் அஹிம்சை ஆகியவற்றை கடைபிடித்தவர்.

|

நண்பர்களே,

புத்தர் ஒரு பிரபஞ்சம், ஏனெனில் இதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குவதாகப் புத்தர் கூறுகிறார். உச்சக்கட்டப் பொறுப்புணர்வின் பலனே புத்தரின் புத்தத்துவம். சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றி தற்போது பேசும் உலகம், பருவநிலை மாற்றம் குறித்துக் கவலை தெரிவிக்கிறது.  புத்தரின் போதனைகளை நாம் பின்பற்றினால், ‘யார் செய்யப் போகிறார்கள்’ என்பதற்குப் பதிலாக ‘என்ன செய்ய வேண்டும்’ என்றப் பாதையை அது காட்டும். மனிதர்களின் ஆன்மாவில் வாழும் புத்தர், பல்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரத்தை இணைக்கிறார். புத்தரின் இந்தப் போதனையை இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளது. அறிவாற்றல், மாமனிதர்களின் சிறந்த போதனைகள் அல்லது சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிற்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை. நம்முடையது எதுவாக இருந்தாலும் அதனை ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவேதான் அஹிம்சை மற்றும் கருணை போன்ற மனித நற்பண்புகள் இயற்கையாகவே இந்தியாவின் இதயத்தில் பதிந்துள்ளது.

|

நண்பர்களே!

“நீங்களே உங்களுக்கு விளக்காக இருங்கள்” என்ற பொருள்படும் “அப்பா தீபோ பவா” என்ற புத்தரின் போதனை ஒருவர் தன்னைத்தானே பிரகாசமாக்கிக் கொள்ளும் போது, அவர் ஒட்டுமொத்த உலகிற்கும் விளக்காகத் திகழ்வார்.  இந்த போதனைதான் இந்தியா தற்சார்பு அடைவதற்கு உந்துசக்தியாக திகழ்கிறது. இந்த ஊக்கம்தான் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திலும் பங்கேற்கும் வலிமையை நமக்கு அளிக்கிறது. அனைவரின் முயற்சி மற்றும் அனைவரின் ஆதரவுடன், அனைவரும் முன்னேறுவோம் என்ற தாரக மந்திரத்தின் மூலம் புத்தபிரானின் போதனைகளை இந்தியா முன்னெடுத்துச் செல்கிறது. புத்தரின் போதனைகளை பின்பற்றி நாம் ஒன்றாக இணைந்து, மனித குலத்தின் நலனுக்கானப் பாதையை வகுப்போம் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

இந்த ஆசையுடன், உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிக!

பவாது சம் மங்கலம்!

நமோ புத்தயா!

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
How GeM has transformed India’s public procurement

Media Coverage

How GeM has transformed India’s public procurement
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister lauds the new OCI Portal
May 19, 2025

The Prime Minister, Shri Narendra Modi has lauded the new OCI Portal. "With enhanced features and improved functionality, the new OCI Portal marks a major step forward in boosting citizen friendly digital governance", Shri Modi stated.

Responding to Shri Amit Shah, Minister of Home Affairs of India, the Prime Minister posted on X;

"With enhanced features and improved functionality, the new OCI Portal marks a major step forward in boosting citizen friendly digital governance."