நாடு முழுவதும் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்கள், 'நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை' வெற்றிகரமாக நடைபெறத் தங்கள் நேரத்தை அர்ப்பணித்து வருகின்றனர். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த வேலைத்திட்டத்திற்கு எனது நேரத்தையும் பங்களிப்பது எனது பொறுப்பாகும். எனவே, இன்று நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், உங்கள் சேவகனாகவும், உங்களைப் போலவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன்.
நம் நாட்டில், பல அரசுகள் வந்து சென்றுள்ளன, எண்ணற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன, விவாதங்கள் நடந்துள்ளன, பெரிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அரசின் திட்டங்கள் எந்த இடையூறும் இல்லாமல் உத்தேசிக்கப்பட்ட பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதே கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்று நம்புவதற்கு எனது அனுபவமும் கவனிப்பும் வழிவகுத்தன. பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் என்றால், குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகள் கிடைக்க வேண்டும். இதற்காக அவர் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. அரசு அவரை அணுக வேண்டும். இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததால், நான்கு கோடி குடும்பங்களுக்கு, 'அனைத்து வசதிகளும் கொண்ட' வீடுகள் கிடைத்துள்ளன.
'நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை, அரசு அதிகாரிகள் மத்தியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களின் வேலையில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
''நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை'யின் சக்தியையும் தாக்கத்தையும் புரிந்து கொண்டவர்கள் வெகு சிலரே. அதிகார வர்க்க வட்டாரங்களுடன் தொடர்புடையவர்கள் அதைப் பற்றி பேசுவதைக் கேட்கும்போது, தங்கள் திருப்தியை வெளிப்படுத்தும்போது, அது என்னுள் எதிரொலிக்கிறது. கணவர் இறந்த பிறகு ஒருவர் திடீரென 2 லட்சம் ரூபாய் பெற்ற கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு சகோதரி தனது வீட்டிற்கு எரிவாயுவின் வருகை தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்று குறிப்பிட்டார்.
"நான் அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டிற்கு குடிபெயர்ந்துவிட்டேன்" என்று அவர்கள் சொல்லும் போது ஒரு நபரின் நம்பிக்கை எவ்வாறு உயரும் என்பது நம்பமுடியாதது.
''நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை' என்பது எந்த அரசியல் கட்சியின் வேலையும் அல்ல. இப்பணியில் ஈடுபடுபவர்கள் புனிதமான பணியை செய்து வருகின்றனர். அதில் பங்கேற்காதவர்கள் ஒரு வாய்ப்பை இழக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் நாட்டின் பிரதமராக இருந்தாலும், இன்று உங்களில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இன்று ''நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை'யின் ஒரு பகுதியாக மாறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் இந்த வேலையைச் செய்ததில் திருப்தி அடைகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்ய வேண்டும். அடுத்த கிராமம் அல்லது நகரத்திற்குச் செல்லும் 'யாத்திரை'யை அன்புடன் வரவேற்க வேண்டும். அனைவரும் வர வேண்டும், பயனாளிகளின் பேச்சைக் கேட்க வேண்டும், திட்டங்களால் பயனடைய அனைவரும் முன்வர வேண்டும், திட்டங்களால் பயனடைந்தவர்கள் தங்கள் வெற்றியை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நேர்மறையான கதைகளைப் பகிர்வது கூட ஒரு நல்ல சூழலை உருவாக்குகிறது. அதனால்தான் ''நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை' ஒரு பெரிய கனவு, ஒரு பெரிய தீர்மானம், இந்தத் தீர்மானத்தை நமது சொந்த முயற்சியால் நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
உங்களைச் சந்திக்கவும், உங்கள் அனுபவங்களைக் கேட்கவும் இந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த 'யாத்திரை'யை மேலும் வெற்றிபெறச் செய்ய அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். 'யாத்திரை'யில் யாரையும் விட்டு வைக்கக் கூடாது. ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் செலவிடுங்கள், ஆனால் திட்டத்தின் ஒரு பகுதியாக இருங்கள். இதற்காக, 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற உறுதியை வலுப்படுத்த உதவுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வணக்கம்!