“When we see our sisters and daughters in every sphere of society contributing to nation building along with sons, it feels like true tribute to great personalities like Shree Shree Harichand Thakur ji”
“When the government takes the government schemes to the people on the basis of SabkaSaath, Sabka Vikas, Sabka Vishwas, and when, SabkaPrayas drives the development of the nation, we move towards building an inclusive society”.
“Our constitution gives us many rights. We can protect those rights only when we perform our duties honestly”
“If anyone is being harassed anywhere, then definitely raise your voice there. It is our duty towards the society and also towards the nation”
“If someone intimidates someone with violence due to mere political opposition, then it is a violation of the rights of others. Therefore, it is our duty that if the mentality of violence, anarchy exists anywhere in the society, it should be opposed”

ஜெய் ஹரி போல்! ஜெய் ஹரி போல்! ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் 211-வது பிறந்த நாளையொட்டி அனைத்து பக்தர்கள், சாதுக்கள், கோசாய்க்கள், தலைவர்கள் மற்றும் மதுவா சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  நமஸ்காரம்!

மத்திய அமைச்சரும் அகில இந்திய மதுவா மகாசங்க அதிபதியுமான திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திரு மஞ்சுள் கிருஷ்ண தாக்கூர் அவர்களே, திருமதி சாபி ராணி தாக்கூர் அவர்களே,  திரு ரவீந்திரநாத்  பிஸ்வாஸ் அவர்களே, முக்கிய பிரமுகர்களே, இங்கு பெருமளவில் கூடியுள்ள எனது அருமை சகோதர சகோதரிகளே !

ஸ்ரீஸ்ரீ குருசந்த் தாக்கூருக்கும், கடந்த ஆண்டு ஒரகண்டியில்  மதுவா பாரம்பரியத்திற்கும் எனது பணிவை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த  அதிர்ஷ்டமாக கருதுகிறேன். தற்போது தாக்கூர்பாரி போன்ற யாத்திரை தலங்களில், தொழில்நுட்பம் வாயிலாக உங்களுடன் கலந்துரையாடி உங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நான் ஒரகண்டிற்கு சென்ற போது, அங்கு என்மீது பேரன்பு காட்டப்பட்டதுடன், ஏராளமான ஆசிகளும் கிடைத்தது.

நண்பர்களே,

மதுவா தர்மியோ மகா மேளா மற்றும் மதுவா பாரம்பரியத்திற்கு எனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு ஸ்ரீ ஹர்சந்த் தாக்கூர் தோற்றுவித்த நற்பண்புகளுக்கு எனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும் இது நல்ல வாய்ப்பாகும். இந்த நற்பண்புகள் குருசந்த் தாக்கூர் மற்றும் அன்னை போரோ-வால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சாந்தனுவின் ஒத்துழைப்பால் இந்த பாரம்பரியம் மேலும் செழித்தோங்கியுள்ளது.  தலைசிறந்த பாரம்பரியத்திலிருந்து நமது நம்பிக்கையை அர்ப்பணித்ததன் வாயிலாக ஒற்றுமை, இந்தியத்தன்மை மற்றும் நவீனத்தை பின்பற்றும் பாடங்களை நாம் அறிந்துள்ளோம்.  ஆனால், தற்போது சுயநலனுக்காக ரத்தக்களறி ஏற்படுவதையும், சமுதாயத்தை பிளவுப்படுத்த முயற்சிப்பதையும், மொழி மற்றும் மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டும் போக்கை நாம் காணும் போது ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் வாழ்க்கை மற்றும் அவரது தத்துவம் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. எனவே இந்த விழா, ஒன்றுபட்ட பாரதம், வலிமையான பாரதம் என்ற பண்பை வலுப்படுத்தும்.

சகோதர சகோதரிகளே, 

நமது கலாச்சாரம், நமது நாகரீகம் தலைசிறந்தது என நாம் அடிக்கடி கூறி வருகிறோம். இது தொடர்ச்சியைக் கொண்டது, இது பொங்கி வழியக் கூடியது, இது தனக்குத் தானே அதிகாரமளித்துக் கொள்ளும் இயற்கைத் தன்மை கொண்டதாக இருப்பது மிகவும் சிறந்தது. இது நதியைப் போன்றது, தனது பாதையை தானே வகுத்து, தானே பின்பற்றி எந்தத் தடை குறுக்கே வந்தாலும், அதனைக் கடந்து செல்லும் தன்மை கொண்டதாகும். உலகம் தற்போது பேசிவரும் பாலின முறையை ஹரிசந்த் தாக்கூர் 18-ம் நூற்றாண்டிலேயே ஒரு இயக்கமாக மேற்கொண்டுள்ளார். இது அவரது தொலைநோக்கு சிந்தனை என்ன, அவரது குறிக்கோள் என்ன என்பதை எடுத்துக் காட்டுகிறது.

சகோதர சகோதரிகளே, 

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை இந்தியா வெற்றிகரமானதாக மாற்றியுள்ள நிலையில், தூய்மை, ஆரோக்கியம்,  தாய்மார்கள் - சகோதரிகள்- புதல்விகளின் சுயமரியாதையை கவுரவிக்கும் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் சிறுமிகள் அவர்களது திறமையை உணரும் வாய்ப்பு ஏற்படும். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் என்பது கொண்ட அரசுத் திட்டங்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக உள்ளார்ந்த சமுதாயத்தை நோக்கிச் செல்ல முடியும்.

நண்பர்களே, 

ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் மற்றொரு செய்தி, சுதந்திரப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமையும்.  அவர் நமது கடமைகளை நாம் உணர்வதற்கும் வழி வகுத்துள்ளார். குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கு ஒருவர் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்ற, எவ்வாறு முயற்சிக்க வேண்டும் என்பதையும் அவர் விவரித்துள்ளார். உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பதை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும். தேசம் முதலில் என்ற கொள்கையை மாபெரும் கடமையாக மேற்கொள்ள வேண்டும், நாட்டைவிட மேலானது வேறு எதுவும் இல்லை. நமது ஒவ்வொரு பணியும் தேசம் முதலில் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்வதற்கு முன்பாக அது நமது நாட்டிற்கு பலன் அளிக்குமா என்பதை நாம் கண்டிப்பாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நண்பர்களே, 

மதுவா சமுதாயம் அதன் கடமைகளை எப்போதும் உணர்ந்திருக்கிறது. சுதந்திரப் பெருவிழாக் காலக்கட்டத்தில் புதிய இந்தியாவைப் படைப்பதற்கான உங்களது ஒத்துழைப்பு தொடரவேண்டும். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் ! மிக்க நன்றி!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi to attend Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India
December 22, 2024
PM to interact with prominent leaders from the Christian community including Cardinals and Bishops
First such instance that a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India

Prime Minister Shri Narendra Modi will attend the Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India (CBCI) at the CBCI Centre premises, New Delhi at 6:30 PM on 23rd December.

Prime Minister will interact with key leaders from the Christian community, including Cardinals, Bishops and prominent lay leaders of the Church.

This is the first time a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India.

Catholic Bishops' Conference of India (CBCI) was established in 1944 and is the body which works closest with all the Catholics across India.