பாரத் மாதா கி – ஜெய்
பாரத் மாதா கி – ஜெய்
இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநர் திரு மங்குபாய் படேல், முதல்வர் திரு ஷிவ்ராஜ் ஜி, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு. மன்சுக் மாண்டவியா ஜி, திரு. ஃபகான் சிங் குலாஸ்தே ஜி, பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகெல் ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள். மத்திய பிரதேச மாநிலத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் எங்களை ஆசீர்வதிக்க இங்கு வந்திருக்கும் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஜெய் சேவா, ஜெய் ஜோஹர். இன்று, ராணி துர்காவதி ஜியின் இந்த புண்ணிய பூமியில் உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். ராணி துர்காவதியின் காலடியில் எனது மனப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன். அவரால் ஈர்க்கப்பட்டு, 'அரிவாள் செல் அனீமியா முக்தி (ஒழிப்பு) திட்டம்' என்ற மாபெரும் பிரச்சாரம் இன்று தொடங்கப்படுகிறது. இன்று, மத்தியப் பிரதேசத்தில் ஒரு கோடி பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகளும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு முயற்சிகளிலும் முதன்மையான பயனாளிகள் நமது கோண்ட், பில் மற்றும் இதர பழங்குடி சமூகங்கள் ஆகும். உங்கள் அனைவருக்கும் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இரட்டை இயந்திர அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று ஷாதோலில் நாடு ஒரு குறிப்பிடத்தக்க தீர்வு கண்டுள்ளது. அது நமது பழங்குடி சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்வாகும். அந்த தீர்வு அரிவாள் செல் ரத்த சோகையில் இருந்து விடுதலை அளிப்பதாகும். இந்த தீர்வினால் ஒவ்வொரு ஆண்டும் அரிவாள் செல் ரத்த சோகையினால் பாதிக்கப்படும் 2.5 லட்சம் குழந்தைகள் அவர்களின் 2.5 லட்சம் குடும்பங்கள் பாதுக்கப்பட உள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியினருடன் நான் அதிக நேரம் செலவிட்டுள்ளேன். அரிவாள் செல் ரத்தசோகை போன்ற நோய்கள் பெரும் துன்பம் ஏற்படுகிறது. இதனால் நோய் பாதித்தவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது.
உலகில் அரிவாள் செல் ரத்த சோகையினால் பாதிக்கப்படுபவர்களில் ஏறக்குறைய 50 சதவீதத்தினர் நம் நாட்டில் உள்ளனர். துரதிருஷ்டவசமாக, கடந்த 70 ஆண்டுகளில் இந்த பிரச்சினையை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனை கையாளுவதற்கு உறுதியான திட்டம் எதுவுமில்லை. ஆனால் நான் குஜராத் முதல்வராக இருந்த போதிலிருந்து நீண்ட காலமாக இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இது குறித்து பழங்குடி குடும்பங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.
விடுதலை காலத்தில் அரிவாள் செல் ரத்தசோகையில் இருந்து விடுதலை பெறும் விழிப்புணர்வே முக்கிய திட்டமானது. நாடு 2047ம் ஆண்டு அதன் சுதந்திர தினத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது, நமது பழங்குடி குடும்பத்தினர் அரிவாள் செல் ரத்தசோகையில் இருந்து விடுதலை பெற்றிருப்பார்கள்.
வெளிப்படையான எந்த வித அறிகுறியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இதன் பிடியில் சிக்குவார்கள். இந்த தனிநபர்கள் அவர்களுக்கே தெரியாமல் அவர்களது குழந்தைகளுக்கும் இந்த நோயை கடத்திவிடுவார்கள். மன்சுக் பாய் ஏற்கனவே கூறியது போல், திருமணத்துக்கு முன் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது பல குடும்பங்களில் ஏற்கனவே உள்ளது. ஜாதகப் பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ, முதலில் அரிவாள் செல் ரத்தசோகை சோதனை அறிக்கை பொருந்துகிறதா என்று பார்த்து திருமணத்தை நடத்த வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு இந்நோய் பரவாமல் தடுக்க முடியும். எனவே, நான் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் இந்த சோதனைக்கு உட்படுத்தி கொள்ள கேட்டு கொள்கிறேன். சமூகம் எந்தளவு பொறுப்பு எடுத்து கொள்கிறதோ அந்தளவு அரிவாள் செல் ரத்தசோகையில் இருந்து விடுபடுவது எளிதாகும்.
இந்த நோய் தனிநபர்களை மட்டும் பாதிப்பதில்லை. குடும்பத்தில் யாராவது ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டால் அது அந்த மொத்த குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தான், இது போன்ற கொடிய நோய்களை ஒழிக்க அரசு அயராது உழைக்கிறது.
மத்தியப் பிரதேசம் வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டும், அத்துடன் ஒன்றாக இணைந்து வளர்ந்த இந்தியாவின் கனவை நிறைவேற்றுவோம். எதிர்கால சந்ததியினர் பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான எனது பெரிய விழிப்புணர்வு அரிவாள் செல் மற்றும் ஆயுஷ்மான் அட்டையாகும். எனக்கு உங்கள் ஆதரவு தேவை. நாட்டை அரிவாள் செல் ரத்த சோகையிலிருந்து விடுவித்து, நமது பழங்குடியின குடும்பங்களை இந்த இடர்களில் இருந்து விடுவிக்க வேண்டும். ஆரோக்கியத்துடனும் வளத்துடனும் இருங்கள். இந்த விருப்பத்துடன், உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
பாரத் மாதா கி - ஜெய்!
பாரத் மாதா கி - ஜெய்!
பாரத் மாதா கி - ஜெய்!
மிக்க நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்