ஸ்ரீ விட்டலாய நமஹ,
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் திரு.அஜித் பவார் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு.தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, முன்னாள் அமைச்சர் திரு. சந்திரகாந்த் பாட்டில் அவர்களே, வர்காரி துறவி திரு.முரளி பாபா குரேகர் அவர்களே, ஸ்ரீசந்த் துக்காராம் மகராஜ் சன்ஸ்தான் தலைவர் நிதின் மோரே அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே வணக்கம்.
புண்ணிய பூமியான தேஹுவில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. துறவிகளின் சத்சங்கம் மனிதப்பிறப்பில் அரிய சிறப்புரிமையாகும். துறவிகளின் பெருமையை உணர்ந்தால், கடவுளை தானாக உணர முடியும். இந்தப் புனித புண்ணிய பூமியான தேஹுவுக்கு இன்று வந்தபோது அதே உணர்வை நான் பெற்றேன். தேஹு மலைக்கோவில் பக்தியின் ஆற்றல் மையமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் கலாச்சார எதிர்காலத்தின் வழியாகும். கோவிலின் அறக்கட்டளைக்கும் இந்த ஆலயத்தை கட்டமைத்த அனைத்து பக்தர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் வாழ்ந்து வரும் மிகப்பழமையான நாகரீகங்களில் ஒன்றாக இருப்பது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகும். இதற்கான பெருமை யாரையாவது சாரவேண்டுமானால் அது துறவிகள் மற்றும் முனிவர்களின் பாரம்பரியத்துக்கு சொந்தமானதாகும். இந்தியா துறவிகளின் பூமிக்காக இருப்பதே இந்தியாவின் நிலைத்தன்மைக்கு காரணமாகும். ஒவ்வொரு யுகத்திலும் சில சிறந்த ஆன்மா நமது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் வழியை காட்டி வந்தன.