நினைவுத் தபால்தலை மற்றும் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார்
டிஜிட்டல் முறையில் இந்திய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) ஸ்டார்ட் அப்களின் தொகுப்பு மற்றும் சிறுதானியங்கள் புத்தகம் (ஸ்ரீ அன்னா) தரநிலைகளை அறிமுகப் படுத்தினார்
ஐ.சி.ஏ.ஆரின் இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவனம் உலகளாவிய சிறந்த மையமாக அறிவிக்கப்பட்டது
"உலகளாவிய சிறுதானியங்கள் மாநாடு உலகளாவிய நன்மைக்கான இந்தியாவின் பொறுப்புகளின் அடையாளமாகும்"
"ஸ்ரீ அன்னா இந்தியாவில் முழுமையான வளர்ச்சிக்கான ஊடகமாக மாறி வருகிறது. இது கிராமம் மற்றும் ஏழைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது"
"ஒரு நபருக்கு மாதந்தோறும் சிறுதானியங்கள் நுகர்வு 3 கிலோகிராமில் இருந்து 14 கிலோகிராமாக அதிகரித்துள்ளது"
"இந்தியாவின் சிறுதானியங்கள் திட்டம் நாட்டின் 2.5 கோடி சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்"
"உலகின் மீதான பொறுப்புக்கும், மனித குலத்திற்கு சேவை செய்வதற்கான உறுதிக்கும் இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது"
"நம்மிடம் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு
கண்காட்சி மற்றும் வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு அரங்கையும் பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார்
"இது சிறுதான்யங்களுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அறிகுறியாகும்" என்று அவர் கூறினார்.

சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதற்காக உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற நிகழ்வுகள் உலகளாவிய நலனுக்கு மட்டுமல்லாமல் உலக நலனில்  இந்தியாவின்  பொறுப்பின் அடையாளமாக திகழ்கிறது.  

நண்பர்களே,

இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையால் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை உலகம் கொண்டாடும் வேளையில் இந்தியாவின் பிரச்சாரம் இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படியாகும்.

பல வெளிநாடுகள் மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் கிராம பஞ்சாயத்து, கிருஷி கேந்திரங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வேளாண் பல்கலைகழகங்களின் தீவிர பங்கேற்புடன் சிறுதானியங்கள் விவசாயம், தினை பொருளாதாரம், சுகாதார நலன்கள் மற்றும் விவசாயிகளின் வருமானம் போன்ற தலைப்புகளில் அமர்வுகள் நடத்தப்படும். ஏறத்தாழ இன்று 75 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கண்காட்சியைப் பார்வையிட்டு, ஒரே இடத்தில் சிறுதானியங்கள் விவசாயம் தொடர்பான அனைத்து பரிமாணங்களையும் புரிந்து கொள்ளுமாறு பிரதிநிதிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். சிறுதானியங்கள் சார்ந்த தொழில்கள் மற்றும் விவசாயத்திற்காக ஸ்டார்ட்அப்களைக் கொண்டு வரும் இளைஞர்களின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

ஸ்ரீ அன்னா வெறும் உணவு அல்லது விவசாயம் மட்டும் அல்ல என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.   அது கிராமம் மற்றும் ஏழைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது". ஸ்ரீ அன்னா - நாட்டின் சிறு விவசாயிகளின் செழிப்புக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. ஸ்ரீ  அன்னா - கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு ஊட்டச்சத்தின் மூலாதாரம், ஸ்ரீ அன்னா - பழங்குடியின சமூகத்தின் பாராட்டு, ஸ்ரீ அன்னா - குறைந்த தண்ணீரில் அதிகப் பயிர்களைப் பெறுதல், ஸ்ரீ அன்னா - பெரியவர். ரசாயனமற்ற விவசாயத்திற்கான அடித்தளம். ஸ்ரீ அன்னா - பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் பெரும் உதவி" என்பதாகும்.

  2018 ஆம் ஆண்டில் சிறுதானியங்கள் ஊட்டச்சத்து தானியங்களாக அறிவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது முதல் ஆர்வத்தை உருவாக்குவது வரை அனைத்து நிலைகளிலும் சந்தைக்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தியாவில் 12 முதல் 13  வெவ்வேறு மாநிலங்களில் சிறுதானியங்கள் முதன்மைப் பயிராகப் பயிரிடப்படுகிறது. முன்னர் ஒரு நபர் ஒரு மாதத்திற்கு எடுத்துக் கொண்ட சிறுதானியங்கள் 3 கிலோகிராமுக்கு மிகாமல் இருந்தநிலையில், தற்போது அந்த நுகர்வு இன்று 14 கிலோவாக அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

இந்தியாவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் சுமார் 2.5 கோடி சிறு விவசாயிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மிகக் குறைந்த நிலத்தையே வைத்திருந்தாலும் பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொண்டனர். இந்தியாவின் சிறுதானியங்கள் இயக்கம் ஸ்ரீ அன்னாவுக்கான பிரச்சாரம் - நாட்டின் 2.5 கோடி விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகு 2.5 கோடி சிறு விவசாயிகள் சிறுதானியங்கள் பயிரிடுவதில் அரசு அக்கறை செலுத்துவது இதுவே முதல்முறை ஆகும். பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மூலம் சிறுதானியங்கள் தற்போது கடைகளுக்கும் சந்தைகளுக்கும் சென்றடைகிறது. ஸ்ரீ அன்னா சந்தைக்கு ஏற்றம் கிடைக்கும்போது இந்த 2.5 கோடி சிறு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரம் வலுவடையும்

உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுவது சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டிலும் பிரதிபலிக்கிறது. உலகின் மீதான கடமை உணர்வு மற்றும் மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதிக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. சர்வதேச யோகா தினத்தின் மூலம் யோகாவின் பலன்கள் உலகம் முழுவதும் சென்றடைவதை இந்தியா உறுதி செய்துள்ளது. இன்று உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்திற்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விளையும் சோளம், கம்பு, ராகி, சாமை, கங்கினி, சீனா, கோடோன், குட்கி, குட்டு போன்றவை ஸ்ரீ அன்னாவின்  உதாரணங்களாகும். சிறுதானியங்கள் இந்தியாவின் வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக இருந்தது. இந்தியா தனது விவசாய நடைமுறைகள் மற்றும் ஸ்ரீ அன்னா தொடர்பான நூற்றாண்டு அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. இந்த திசையில் ஒரு நிலையான நடைமுறையை உருவாக்க இங்குள்ள நட்பு நாடுகளின் விவசாய அமைச்சர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.  

நண்பர்களே,

சிறுதானியங்களை பாதகமான காலநிலைகளிலும் எளிதாக உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி செய்வதற்கு ஒப்பீட்டளவில் குறைந்த நீரே தேவைப்படுவதால் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு இது சிறந்த பயிர் ஆகும். இரசாயனங்கள் இன்றி இயற்கை முறையில் சிறுதானியங்களைப் பயிரிடலாம். அதன் மூலம் மனிதர்கள் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.

ஒருபுறம் உணவுப் பாதுகாப்புப் பிரச்னையும், மறுபுறம் உணவுப் பழக்கவழக்கப் பிரச்னையும் உள்ளது. விளைபொருட்களில் அதிக அளவில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. ஸ்ரீ அன்னா எளிதில் வளரக்கூடியது அதன் செலவும் குறைவு மற்ற பயிர்களை விட வேகமாக சாகுபடிக்குத் தயாராகிறது.    இது ஊட்டச்சத்து நிறைந்தது, சுவையில் சிறப்பு, நார்ச்சத்து அதிகம், உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும், வாழ்க்கைமுறை தொடர்பான நோய்களைத் தடுக்க உதவுகிறது.

நாடு உணவு பதப்படுத்தும் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிஎல்ஐ திட்டத்தையும் தொடங்கியுள்ளது.   சிறுதானியப் பொருட்களைத் தயாரிப்பதற்கு  பல மாநிலங்கள் தங்கள் பொது விநியோக திட்டத்தில் ஸ்ரீ அன்னாவை சேர்த்துள்ளதோடு மற்ற மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில், உணவில் ஒரு புதிய சுவை மற்றும் வகையாக மதிய உணவில் ஸ்ரீ அன்னாவை  சேர்க்க வேண்டும்.

நிறைவாக, சிறுதானியங்கள் வகைகளுக்கான பிரச்சினைகள் அனைத்தும் விரிவாகப் பேசப்பட்டு, நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடமும் தயாரிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். 

இம்மாநாட்டில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் மத்திய அமைச்சர்கள். இந்நிகழ்ச்சியில் மாநில விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், ஸ்ரீ கைலாஷ் சவுத்ரி மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
The People’s Padma: How PM Modi Redefined India’s Highest Civilian Awards

Media Coverage

The People’s Padma: How PM Modi Redefined India’s Highest Civilian Awards
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 28, 2025
January 28, 2025

Appreciation for PM Modi’s Transformative Decade of Empowerment, Innovation and Promoting Tradition