மதிப்பிற்குரிய பெருமக்களே,
வல்லுநர்களே, கல்வியாளர்களே, தொழில்துறை தலைவர்களே, கொள்கை தயாரிப்பாளர்களே, உலகம் முழுவதிலும் உள்ள எனதருமை நண்பர்களே,
வணக்கம்!
பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக் கான சர்வதேச நான்காவது மாநாட்டில் உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதே நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளார்ந்த நோக்கம் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அதனால்தான், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளோம். மேலும், உள்கட்டமைப்பு என்பது, மூலதன சொத்துக்களை உருவாக்குவதும், முதலீட்டின் மீது நீண்டகால வருவாயை உருவாக்குவதும் மட்டுமல்ல. அது, எண்களைப் பற்றியதல்ல. அது, பணம் சார்ந்ததல்ல. அது, மக்களைப் பற்றியது, அவர்களுக்கு உயர் தரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, நிலையான சேவைகளை ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் வழங்குவது. எந்த ஒரு உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயணத்திலும் மக்கள்தான் மையமாக இருக்கவேண்டும். அதை தான் இந்தியாவில் நாங்கள் செய்கிறோம். கல்வி சுகாதாரம் வரை, குடிநீர் முதல் துப்புரவு வரை, மின்சாரம் முதல் போக்குவரத்து வரை இன்னும் ஏராளமான அடிப்படை சேவை வசதிகளை இந்தியாவில் நாங்கள் அதிகரிக்கும் வேளையில், பருவநிலை மாற்றத்தையும் மிக நேரடியான வழியில் எதிர்கொள்கிறோம். அதனால் தான் எங்களது வளர்ச்சித் திட்டங்களுக்கு இணையாக, 2070-ஆம் ஆண்டுக்குள் ‘நிகர பூஜ்ஜிய’ இலக்கை எட்ட காப்-26 இல் நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்.
நண்பர்களே,
உள்கட்டமைப்பு வளர்ச்சி, பிரமிக்கவைக்கும் வழிகளில் மனித ஆற்றலை வெளிக்கொணரும். ஆனால் நமது உள்கட்டமைப்பை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பருவநிலை மாற்றம் உட்பட இந்த அமைப்புமுறைகளில் தெரிந்த மற்றும் தெரியாத சவால்கள் நிறைந்துள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை (சி.டி.ஆர்.ஐ) அறிமுகப்படுத்திய போது, எங்களது அனுபவம் மற்றும் தேவைகளின் அடிப்படையில் அது அமைந்தது. வெள்ளத்தால் ஒரு பாலம் அடித்துச் செல்லும் போது, புயல் காற்றால் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, காட்டுத் தீயால் தொலைத்தொடர்பு கோபுரம் பழுதாகும் போது, அவை ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் நேரடியாக பாதிக்கின்றன. அதுபோன்ற உள்கட்டமைப்பு பாதிப்புகளின் பலன் பல நாட்களுக்கு நீடிப்பதுடன் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே நம் முன் இருக்கும் சவால், தெளிவாக உள்ளது. நம்மிடையே நவீன தொழில்நுட்பங்களும், அறிவும் இருக்கும் வேளையில் நிலைத்திருக்கக் கூடிய வகையில் நெகிழ்திறன் உள்கட்டமைப்பை நம்மால் உருவாக்க முடியுமா?” இந்த சவாலுக்கான அங்கிகாரம், சி.டி.ஆர்.ஐ- இன் உருவாக்கத்திற்கு அடிகோலுகிறது, கூட்டணி, விரிவுபடுத்தப்பட்டிருப்பதுடன், உலகம் முழுவதிலும் இருந்து பெரும் ஆதரவு கிடைத்திருப்பதன் மூலம், இது, நாம் பகிர்ந்து கொள்ளும் விஷயம் சார்ந்தது என்பது புலப்படுகிறது.
நண்பர்களே,
இரண்டரை ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், சி.டி.ஆர்.ஐ. முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டிருப்பதோடு, மதிப்புமிக்க பங்களிப்புகளையும் அளித்துள்ளது. கடந்த ஆண்டு, காப்-26 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நெகிழ்திறன் தீவு நாடுகளுக்கான உள்கட்டமைப்பு’ என்ற முன்முயற்சி, சிறிய தீவு நாடுகளுடன் பணியாற்றும் நமது உறுதித்தன்மையின் தெளிவான வெளிப்பாடு. புயல்களின் போது மின்வெட்டு ஏற்படும் நேரத்தைக் குறைப்பதன் மூலம், மின்சார அமைப்புமுறைகளின் நெகிழ்திறனை வலுப்படுத்தும் சி.டி.ஆர்.ஐ-இன் பணிகளால் கடலோர இந்தியாவில் வசிக்கும் மக்கள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இந்தப் பணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, ஒவ்வொரு வருடமும் வெப்பமண்டல புயல்களால் பாதிக்கப்படும் சுமார் 130 மில்லியன் மக்கள் பயனடைவார்கள். நெகிழ்திறன் விமான நிலையங்கள் குறித்து உலகம் முழுவதும் உள்ள 150 விமான நிலையங்களை சி.டி.ஆர்.ஐ ஆய்வு செய்து வருகிறது. சர்வதேச இணைப்பின் நெகிழ்திறனில் பங்களிக்கும் ஆற்றலை இது பெற்றுள்ளது. சி.டி.ஆர்.ஐ- ஆல் வழிநடத்தப்படும் ‘பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு அமைப்புமுறைகளின் சர்வதேச மதிப்பீடு’, பெரும் மதிப்புமிக்க சர்வதேச அறிவை உருவாக்க உதவும். உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சி.டி.ஆர்.ஐ குழுவினர் மேலும் அதிகரிக்கக் கூடிய வகையில் ஏற்கனவே தீர்வுகளை வழங்கி வருகின்றனர். நமது உள்கட்டமைப்பு அமைப்புமுறைகளுக்கு ஒரு நெகிழ்திறன் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக அர்ப்பணிப்புள்ள தொழில் வல்லுநர்களின் உலகளாவிய இணைப்பையும் அவர்கள் உருவாக்குகிறார்கள்.
நண்பர்களே,
நமது எதிர்காலத்தை நெகிழ்திறன் வாய்ந்ததாக மாற்றுவதற்கு, இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமான ‘நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மாற்றத்தை’ நோக்கி நாம் செயல்பட வேண்டும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நமது பரவலான நடவடிக்கைகளுள் நெகிழ்திறன் உள்கட்டமைப்பும் மையப் பொருளாக செயல்படலாம். உள்கட்டமைப்பை நெகிழ்திறன் வாய்ந்ததாக நாம் மாற்றினால், நமக்காக மட்டுமல்லாமல், பல எதிர்கால தலைமுறையினருக்கும் பேரிடர்களை நாம் தடுக்கலாம். அது ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட கனவு, ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட தொலைநோக்குப் பார்வை, அதை நாம் மெய்யாக்க வேண்டும். எனது உரையை நிறைவு செய்யும் முன் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த சி.டி.ஆர்.ஐ மற்றும் அமெரிக்க நாட்டு அரசிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிய அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது நன்றி. பயனுள்ள விவாதங்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் ஏற்பட வாழ்த்துகிறேன்.
நன்றி.
மிக்க நன்றி.