விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தின் கீழ்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முன்முயற்சிகள், கல்விப் புரட்சியை ஏற்படுத்தி, உலக வரைபடத்தில் இந்திய கல்விமுறையை இடம்பெறச் செய்யும்: பிரதமர்
மாறிவரும் காலத்திற்கிடையே நாம் இருக்கிறோம், அதிர்ஷ்டவசமாக நவீன மற்றும் எதிர் காலத்திற்கு உகந்த புதிய தேசிய கல்வி கொள்கை நம்மிடையே உள்ளது: பிரதமர்
மக்களின் பங்களிப்பு இந்தியாவின் தேசிய அடையாளமாக மீண்டும் மாறி வருகிறது: பிரதமர்
பிரதமரின் கோரிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரரும் 75 பள்ளிகளுக்கு நேரில் செல்லவிருக்கிறார்கள்
கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கொள்கையின் அடிப்படையிலானவை மட்டுமல்ல, பங்களிப்பின் அடிப்படையிலானவையும் கூட: பிரதமர்
‘அனைவரின் முயற்சியுடன்', 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் வளர்ச்சி அடைவோம்’ என்ற நாட்டின் உறுதித்தன்மைக்கான தளமாக ‘வித்யாஞ்சலி 2.0’ விளங்குகிறது: பிரதமர்
அனைத்து கல்வி நடவடிக்கைகளுக்கு இடையேயான அதிசிறந்த இணைப்பாக என்-டியர் செயல்படும்: பிரதமர்
திறன் சார்ந்த கற்பித்தல், கலை ஒருங்கிணைப்பு, படைப்ப

வணக்கம்! 

முக்கியமான இந்த ஆசிரியர்களின் விழாவில், என்னுடன் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சரவை சகாக்கள், திரு.தர்மேந்திர பிரதான் அவர்களே, திருமதி.அன்னபூர்ணா தேவி அவர்களே, டாக்டர் சுபாஷ் சர்கார் அவர்களே, டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்களே, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்வித்துறை அமைச்சர்களே, புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் அவர்களே, அவரது குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களே, மரியாதைக்குரிய பள்ளி முதல்வர்களே, ஆசிரியர்களே, நாடெங்கிலும் உள்ள அன்பிற்குரிய மாணவர்களே!

இந்த விழாவின் தொடக்கமாக, தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  நாட்டின் கல்வித் துறைக்காக நீங்கள் அனைவரும் அக்கறையுடன் கூடிய முயற்சிகளை மேற்கொண்டவர்கள் என்பதோடு, நெருக்கடியான நேரத்திலும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காக ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றது மற்றும் பாராட்டத்தக்கது ஆகும்.  இந்த நிகழ்ச்சியில், மாணவர்களும் பங்கேற்றிருப்பதை திரையில் காண்கிறேன்.  ஒன்றரை அல்லது இரண்டு வருட காலத்தில்,  உங்களது முகத்தில் ஒளிமயமான வித்தியாசமான பார்வையை எண்ணால் காண முடிகிறது.  பள்ளிக்கூடங்கள் திறந்ததால் இந்த மாறுபாடு என்று கருதுகிறேன்.   நீண்ட நாட்களுக்குப் பிறகு, பள்ளிக்குச் சென்று, நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியை அளிப்பதுடன், பாடங்களைப் படிப்பதும், மாறுபட்ட அனுபவமாக இருக்கும். உற்சாகத்துடன், நீங்கள் உட்பட, நாம் அனைவரும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.  

நன்பர்களே,

ஆசிரியர்கள் விழாவையொட்டி, இன்று பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  இந்த புதிய திட்டங்கள் குறித்து, சற்றுமுன் குறும்படம் வாயிலாக நமக்கு விளக்கமளிக்கப்பட்டது.   75-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடும் வேளையில், இதுபோன்ற முயற்சிகள் முக்கியமானவை ஆகும்.   சுதந்திர தினத்தின் 100-வது ஆண்டுக்குப் பிந்தைய இந்தியாவிற்காக, நாடு தற்போது புதிய தீர்மானங்களை ஏற்றுக் கொண்டுள்ளது.   எதிர்கால இந்தியாவை வடிவமைப்பதில், இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்க உள்ளன.   வித்யாஞ்சலி-2.0, நிஷ்தா-3.0, பேசும் புத்தகங்கள் மற்றும் யுடிஎல் அடிப்படையிலான ஐஎஸ்எல்-அகராதி போன்ற புதிய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.  எஸ்.கியூ.ஏ.ஏ.எஃப் போன்ற  பள்ளிக்கூட தர மதிப்பீடு மற்றும் உத்தரவாதக் கட்டமைப்பு முறைகள், நமது கல்வி முறையை உலகளவில் போட்டியிடக் கூடியவையாக மாற்றுவதோடு மட்டுமின்றி, நமது இளைஞர்கள் எதிர்காலத்திற்கேற்ப ஆயத்தமாவதற்கும் உதவும் என நான் நம்புகிறேன்.  

நன்பர்களே,

கொரோனா காலகட்டத்திலும், நமது கல்விமுறையின் வல்லமைமைய நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தியவர்கள்.   சவால்கள் பல வந்தாலும், அவற்றுக்கு நீங்கள் அனைவரும் விரைவான தீர்வை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.  ஆன்லைன் வகுப்புகள், குழு வீடியோ அழைப்புகள், ஆன்லைன் ப்ராஜக்டுகள், ஆன்லைன் தேர்வுகள், போன்றவற்றை, இதற்கு முன்பு நாம் கேட்டதுகூட இல்லை.   ஆனால் நமது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நமது இளைஞர்கள், இவற்றை அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்டனர்!

நன்பர்களே,

இந்தத் திறமைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லவும்,  இந்த நெருக்கடியான காலத்திலும் நாம் கற்றுக் கொண்டவற்றிற்கு புதிய வழிகாட்டவும், இதுவே சரியாண தருணம் ஆகும்.   நல்விதமாக, மாற்றத்திற்கான சூழலை நாடு ஒருபுறம் பெற்றிருந்தாலும், அதேவேளையில், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்ற நவீன மற்றும் எதிர்காலத்திற்கேற்ற கொள்கைகளையும் தற்போது பெற்றிருக்கிறோம்.   சமீப காலமாக, கல்வித்துறையில் ஒன்றன்பின் ஒன்றாக புதிய முடிவுகளை நாடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  இந்த முயற்சிகளின் பின்னணியில் உள்ள பெரும் அறிஞர்களின் கவனத்தை ஈர்க்க நான் விரும்புகிறேன்.  இந்த இயக்கம், கொள்கை சார்ந்ததாக மட்டுமின்றி, பங்கேற்பு சார்ந்தது ஆகும்.  புதிய தேசிய கல்விக்  கொள்கையை உருவாக்கியது முதல், அதனை நடைமுறைப்படுத்தியது வரை, அனைத்து மட்டத்திலும், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு  முக்கியமானது ஆகும்.  நீங்கள் அனைவரும் பாராட்டுவதற்கு உரியவர்கள்.   தற்போது இந்தப் பங்களிப்பை புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்வதோடு, இதில், சமுதாயத்தையும் ஈடுபடுத்த வேண்டும். 

நன்பர்களே,

எங்களிடம் கூறப்பட்டது யாதெனில் :

व्यये कृते वर्धते एव नित्यम् विद्याधनम् सर्वधन प्रधानम् ॥

(வாயயே க்ரிதே வர்ததே ஏவ நித்யம் வித்யாதானம் ஸர்வதான ப்ரதானம்)

அதாவது, அனைத்து செல்வங்களிலும் சிறந்தது அறிவாற்றலே என்பதாகும், ஏனெனில் அறிவாற்றல் மட்டுமே, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் அதிகரிக்கக் கூடியது ஆகும்.  அறிவாற்றலின் பங்களிப்பு மட்டுமே, கற்பிப்பவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கக் கூடியது ஆகும்.   இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும், இந்த உணர்வையே பெறுவார்கள்.   யாருக்காவது எதையாவது கற்பிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியும், மனநிறைவும், வித்தியாசமான ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.   இந்த பண்டைக்கால பாரம்பரியத்தை ‘வித்யாஞ்சலி-2.0’ தற்போது புதிய விதத்தில் பலப்படுத்தும்.  ‘அனைவரின் முயற்சியால் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம்’ என்பதைப் போன்றது ‘வித்யாஞ்சலி 2.0‘.   இது ஒரு வலிமையான அமைப்பைப் போன்றது ஆகும்.  அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில், நமது சமுதாயம் மற்றும் நமது தனியார் துறையினர்,  தங்களது பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.  

நண்பர்களே, 

பழங்காலத்திலிருந்தே சமூகத்தின் கூட்டு சக்தி இந்தியாவில் இருந்து வருகிறது. நீண்ட காலமாகவே, இது நமது சமூக பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. சமூகம் ஒன்றாக இணைந்து எதையாவது செய்யும்போதுதான், விரும்பிய முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மக்களின் பங்களிப்பு இந்தியாவின் தேசிய குணமாக எவ்வாறு மாறி வருகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கடந்த 6-7 ஆண்டுகளில், மக்களின் பங்களிப்பு காரணமாக பல முக்கிய விஷயங்கள் நடந்துள்ளன. இதை யாரும் கற்பனை செய்துகூட இருக்க முடியாது. தூய்மை இயக்கம், ஏழை குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பை உறுதி செய்வது, சலுகையை கைவிடுவது அல்லது ஏழைகளுக்கு டிஜிட்டல் பரிமாற்றங்களை கற்றுக் கொடுப்பது ஆகியவைகளாக இருக்கட்டும். ஒவ்வொரு துறையிலும், இந்தியாவின் முன்னேற்றத்துக்கான சக்தி, மக்கள் பங்களிப்பு மூலம் கிடைக்கிறது. தற்போது, ‘வித்யாஞ்சலி’ தங்க அத்தியாயமாக மாறப்போகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் மற்றும் இரண்டு படி முன்னேறுவதிலும், தீவிரமாக பங்கெடுக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் விடுக்கப்படும் அழைப்பு ‘வித்யாஞ்சலி’. நீங்கள் எங்கேயாவது பொறியாளர், மருத்துவர், விஞ்ஞானி, ஐஏஎஸ் அதிகாரி அல்லது கலெக்டராக இருக்கலாம். ஆனாலும், நீங்கள் பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கலாம். அவர்களுக்கு கற்பிப்பதன் மூலம், குழந்தைகளின் கனவுகளுக்கு புதிய வழிகாட்டுதலை நீங்கள் அளிக்க முடியும். இந்தப் பணியை செய்யும் பலரை நாம் அறிவோம். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஒருவர், உத்தராகண்ட்டில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார். மருத்துவ துறையில் உள்ள ஒருவர், ஏழை குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்து அவர்களுக்கு புத்தகங்களையும் வழங்குகிறார். சமூகத்தில் உங்கள் பங்கு என்ன என்பது முக்கியம் அல்ல. இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் உங்களுக்கு கடமை மற்றும் பங்களிப்பு உள்ளது. சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில், நமது வீரர்கள் அற்புதமாக விளையாடினர். நமது இளைஞர்கள் ஏராளமானோரை ஊக்குவித்துள்ளனர். விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வீரரும் குறைந்தது 75 பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். எனது வேண்டுகோளை வீரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி. உங்கள் பகுதியில் உள்ள இந்த வீரர்களை தொடர்பு கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாட உங்கள் பள்ளிக்கு அழைக்கும்படி மதிப்பிற்குரிய ஆசிரியர்களிடம் நான் வலியுறுத்துவேன். இது நமது மாணவர்களை ஊக்குவிக்கும் மற்றும் திறமையான மாணவர்கள் பலர் விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவர்.

நண்பர்களே,

பள்ளி தர மதிப்பீடு மற்றும் உறுதி திட்டம் (S.Q.A.A.F.) மூலம், மற்றொரு முக்கியமான தொடக்கம் ஆரம்பம் ஆகியுள்ளது. தற்போது வரை, நாட்டில் உள்ள நமது பள்ளிகளில் கல்விக்கு பொதுவான அறிவியல் திட்டம் இல்லை. பொதுவான திட்டம் இல்லாமல், பாடத்திட்டம், கற்பித்தல், உள்கட்டமைப்பு, உள்ளடங்கிய நடைமுறைகள், மற்றும் நிர்வாக நடைமுறைகள் போன்ற அம்சங்களில், தரத்தை பின்பற்றுவது சிரமம். இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உள்ள மாணவர்கள், கல்வியில் சமநிலையற்ற தன்மையை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த இடைவெளியை போக்க, பள்ளி தர மதிப்பீடு மற்றும் உறுதி திட்டம் செயல்படும். இதன் மிகப்பெரிய அம்சம், இந்த திட்டத்தில் மாநிலங்கள், தங்கள் தேவைக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் பள்ளிகளும், தங்கள் சொந்த மதிப்பீடுகளை செய்து கொள்ள முடியும். உருமாற்றத்திற்கு, பள்ளிகளையும் ஊக்குவிக்க முடியும்.

நண்பர்களே,

கல்வியில் சமநிலையற்ற தன்மையை போக்க, தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு (N-DEAR) முக்கிய பங்காற்றும். வங்கித்துறையில் யுபிஐ முறை, புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கல்வி நடவடிக்கைகளுக்கும் இடையேயான சூப்பர் இணைப்பாக தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு செயல்படும். ஒரு பள்ளியில் இருந்து, இன்னொரு பள்ளிக்கு மாறவும், உயர் கல்வி மாணவர் சேர்க்கையிலும், ஒரு படிப்பில் பலமுறை சேர்ந்து வெளியேறுவதற்கும் அல்லது மாணவர்களின் மதிப்பெண்களை பதிவு செய்து வைக்கவும் தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு உதவும். அனைத்து வகை உருமாற்றங்களும், புது யுக கல்வியின் முகமாக மாறியுள்ளது மற்றும் தரமமான கல்வியில் பாகுபாட்டை முடிவு கட்டும்.

நண்பர்களே, எந்த நாட்டின் முன்னேற்றத்துக்கும்

கல்வி அனைத்தையும் உள்ளடங்கியதாக மட்டும் இருக்க கூடாது, சமஅளவில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆகையால், கல்வியின் ஒரு பகுதியாக பேசும் புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் போன்ற தொழில்நுட்பத்தை நாடு உருவாக்குகிறது. 10,000 வார்த்தைகள் அடங்கிய சைகை மொழி அகராதி அடிப்படையிலான, உலகளாவிய கற்றல் வடிவமைப்பும் (UDL) உருவாக்கப்பட்டுள்ளது. அசாமின் பிகு முதல் பரதநாட்டியம் வரை, சைகை மொழி, பல நூற்றாண்டுகளாக நமது கலை மற்றும் கலாச்சாரத்தின் அங்கமாக உள்ளது. தற்போது, முதல் முறையாக, பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சைகை மொழியை நாடு உருவாக்கி வருகிறது. அப்போதுதான், இது தேவைப்படும் அப்பாவி குழந்தைகள் பின்தங்கமாட்டார்கள். இந்த தொழில்நுட்பம், மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு புதிய உலகை உருவாக்கும். அதேபோல், நிபுன் பாரத் திட்டத்தின் கீழ், 3 முதல் 8 வயது குழந்தைகளுக்கு, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 3 வயது முதல் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு முந்தைய கட்டாய கல்வி கற்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த முயற்சிகளை நாம் நீண்ட காலத்துக்கு எடுக்க வேண்டும் மற்றும் அனைவரின் பங்கும், குறிப்பாக நமது ஆசிரிய நண்பர்களின் பங்கு மிக முக்கியம்.

நண்பர்களே,

“दृष्टान्तो नैव दृष्ट: त्रि-भुवन जठरे, सद्गुरोः ज्ञान दातुः” என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதாவது குருவிற்கு மாற்று இந்த ஒட்டுமொத்த உலகில் எவரும் இல்லை. ஒரு குரு செய்யக்கூடியதை வேறு எவராலும் செய்ய முடியாது. இளைஞர்களுக்காக கல்வித்துறையில் நாடு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் அவற்றின் கட்டுப்பாடு ஆசிரியர்களின் கைகளிலேயே உள்ளன. இந்த வேகமாக மாறிவரும் யுகத்தில் நமது ஆசிரியர்கள் புதிய அமைப்புமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் கற்றுக்கொள்ள வேண்டும். ‘நிஷ்தா’ பயிற்சி திட்டங்களிலிருந்து ஒரு சில உங்கள் முன் தற்போது எடுத்துரைக்கப்பட்டன. இந்தப் பயிற்சித் திட்டத்தின் வாயிலாக, இதுபோன்ற மாற்றங்களுக்கு நாடு தனது ஆசிரியர்களை தயார் செய்கிறது. ‘நிஷ்தா 3.0’ இந்தப் பாதையில் அடுத்த முயற்சி. இதை மிக முக்கிய நடவடிக்கையாக நான் கருதுகிறேன். திறன் சார்ந்த கற்பித்தல், கலை ஒருங்கிணைப்பு, படைப்பாற்றல் மற்றும் தீர்க்கமான சிந்தனை போன்ற புதிய வழிமுறைகளுடன் நமது ஆசிரியர்கள் அறிமுகம் ஆகும்போது இளைஞர்களை எதிர் காலத்திற்கு தகுந்தவாறு எளிதாக அவர்களால் தயார்படுத்த முடியும்.

நண்பர்களே,

இந்திய ஆசிரியர்கள் சர்வதேச தரத்தை மட்டும் எதிர்கொள்ளவில்லை, அவர்களது சிறந்த மூலதனம் அவர்களிடையே உள்ளது. அவர்களுள் இருக்கும் இந்திய கலாச்சாரம் தான் இந்த சிறப்பான சொத்து. எனது இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பிரதமராக முதல் முறை நான் பூட்டான் சென்றபோது, முன் காலத்தில் பெரும்பாலும் அனைத்து ஆசிரியர்களும் இந்தியாவிலிருந்து வந்ததாகவும், தொலைதூரப் பகுதிகளுக்கும் நடந்தே சென்றதாகவும் அரச குடும்பம் முதல் அரசு அமைப்பு வரை உள்ள அனைவரும் என்னிடம் பெருமைப்பட கூறினார்கள். இந்திய ஆசிரியர்களைக் குறிப்பிடும்போது பூட்டான் அரச குடும்பம் அல்லது ஆட்சியாளர்களின் கண்களில் பிரகாசம் தென்படும். அவர்கள் மிகவும் பெருமையாக உணர்ந்தார்கள். அதேபோல சவுதி அரேபியாவிற்கு நான் சென்றிருந்தபோது அந்நாட்டு அரசருடன் உரையாற்றுகையில் அவரும் ஓர் இந்திய ஆசிரியரின் மாணவர் என்று பெருமையுடன் கூறினார். ஒரு நபர் எத்தகைய நிலையில் இருந்தாலும் ஆசிரியர்கள் குறித்த அவரது உணர்வை நீங்கள் இதன் மூலம் அறியலாம்.

நண்பர்களே,

நமது ஆசிரியர்கள் தங்களது பணியை வெறும் தொழிலாக மட்டும் கருதுவதில்லை, அவர்களுக்கான கற்பித்தல், மனித நேயம், ஒரு புனிதமான தார்மீகக் கடமையால் குறிக்கப்படுகிறது. அதனால் தான் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே தொழில் சார்ந்த உறவுமுறை நிலைப்பதில்லை, குடும்ப உறவுமுறை தான் பின்பற்றப்படுகிறது. மேலும் இந்த உறவுமுறை, வாழ்க்கை முழுவதற்குமானது. எனவே இந்திய ஆசிரியர்கள் உலகில் எங்கு சென்றாலும் வெவ்வேறு தடங்களைப் பதிக்கிறார்கள். இதன் காரணமாக இந்திய இளைஞர்களுக்கு உலகம் முழுவதும் அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன. நவீன கல்வி சூழலியலுக்கு ஏற்ப நம்மைத் தயார் செய்து கொள்வதுடன் இந்த சாத்தியக்கூறுகளை வாய்ப்புகளாகவும் மாற்ற வேண்டும். இதற்காக நாம் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். கற்பித்தல்-கற்றல் நடைமுறைகளில் தொடர்ந்து மறுவரையறை, மறுவடிவம் செய்யப்பட வேண்டும்.

நீங்கள் இதுவரை வெளிப்படுத்திய மன உறுதி புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புதிய உந்துசக்தி அளிக்கப்பட வேண்டும். இந்த ஆசிரியர்கள் மாநாட்டை முன்னிட்டு இன்று முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நம் நாட்டில் விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்படுவதாக நான் அறிகிறேன். இந்த விஸ்வகர்மாக்கள் தான் வெவ்வேறு தலைப்புகளில் பயிலரங்கங்கள், கருத்தரங்கங்களை செப்டம்பர் 7 முதல் 17 ஆம் தேதி வரை நடத்தும் படைப்பாளிகளாவர். இதுவே மிகவும் போற்றத்தக்க முயற்சி. பல்வேறு ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்கள் நாடு முழுவதிலும் இருந்து கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும்போது விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தில் இந்த அமிர்தம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. உங்களது கூட்டு கருத்துதிர்ப்பு தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் ஏதுவாக இருக்கும். உங்களது நகரங்கள் மற்றும் கிராமங்களில் இதே போன்ற முயற்சிகளை மேற்கொள்ளுமாறு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அனைவரின் முயற்சியும் நாட்டின் இந்த புதிய பாதைக்கு வலுசேர்க்கும் என்று நான் நம்புகிறேன். அம்ருத் மஹோத்சவத்தில் நாடு மேற்கொண்டுள்ள லட்சியங்களை நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம். இத்துடன் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s organic food products export reaches $448 Mn, set to surpass last year’s figures

Media Coverage

India’s organic food products export reaches $448 Mn, set to surpass last year’s figures
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister lauds the passing of amendments proposed to Oilfields (Regulation and Development) Act 1948
December 03, 2024

The Prime Minister Shri Narendra Modi lauded the passing of amendments proposed to Oilfields (Regulation and Development) Act 1948 in Rajya Sabha today. He remarked that it was an important legislation which will boost energy security and also contribute to a prosperous India.

Responding to a post on X by Union Minister Shri Hardeep Singh Puri, Shri Modi wrote:

“This is an important legislation which will boost energy security and also contribute to a prosperous India.”