பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
கர்நாடகாவின் அனைத்து மக்களுக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகள்!
பூஜ்ய சுவாமிஜி அவர்களே, கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, முன்னாள் முதலமைச்சர் திரு எடியூரப்பா அவர்களே, மத்திய அமைச்சரவை தோழர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்!
இந்தச்சிறப்பு மிக்க நாளில் பெங்களூருக்கு வரும் வாய்ப்பைப் பெற்றுள்ளதைப் பெருமையாக நினைக்கிறேன். சமுதாயத்துக்கு வழிகாட்டிய துறவி கனகதாசர், நமது கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பங்களித்த ஒனக்கே ஒபவ்வா ஆகிய கர்நாடக மாநிலத்தின் ஒரு பெரு மகான்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.
நண்பர்களே,நிந்த இருபெரும் ஆளுமைகளை பெருமைப்படுத்தும் வகையில், நாம் பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் வளர்ச்சியையும், பாரம்பரியத்தையும் மேம்படுத்தி வருகிறோம். இன்று கர்நாடகம், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முதல் வந்தே பாரத் ரயிலைப் பெற்றுள்ளது. இந்த ரயில் சென்னையையும், இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகர் பெங்களூருவையும், பாரம்பரிய நகரமான மைசூருவையும் இணைக்கிறது. இன்று தொடங்கப்பட்ட பாரத் கவுரவ காசி தர்ஷன், கர்நாடக மக்களை அயோத்தி, பிரயாக்ராஜ், காசி ஆகிய நகரங்களுக்கு கொண்டு செல்கிறது. இன்று கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தின் இரண்டாவது முனையம் தொடங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே, நடபிரபு கெம்பே கவுடா அவர்களின் 108 அடி சிலையை திறந்து வைத்து, ஜலபிஷேகம் செய்யும் வாய்ப்பை நான் பெற்றேன். இந்தப் பிரம்மாண்டமான சிலை வருங்காலத்தில் பெங்களூருவுக்கும், இந்தியாவுக்கும் இடையறாமல் உழைப்பதற்கு நம்மை ஊக்குவிக்கும்.
சகோதர, சகோதரிகளே,
முழு உலகமும் இந்தியா மீது காட்டும் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் பலனை கர்நாடகம் அறுவடை செய்து வருகிறது. உலகமே கோவிட் தொற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கும் போது கர்நாடகாவில் நடந்த 4 லட்சம் கோடி ரூபாய் முதலீடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு, நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் கர்நாடகா முன்னிலை வகித்தது. இந்த முதலீடு தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்ல, உயிரித் தொழில்நுட்பம் முதல் பாதுகாப்பு வரையிலும் உள்ளது. இந்தியாவின் விமானம் மற்றும் விண்வெளிக் கலம் துறையில் கர்நாடகா 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்காக தயாரிக்கப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் ஏறத்தாழ 70 சதவீதம் கர்நாடகாவில் தயாரிக்கப்படுகிறது. கர்நாடகாவின் இரட்டை இயந்திர அரசு இத்தகைய அபரிமிதமான வளர்ச்சிக்கு பெருமை சேர்த்துள்ளது.
நண்பர்களே, நிர்வாகமாக இருந்தாலும் சரி, உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, இந்தியா முற்றிலும் மாறுபட்ட நிலையில் செயல்படுகிறது. பிம்(BHIM), யுபிஐ, மேட் இன் இந்தியா, 5ஜி தொழில்நுட்பம் ஆகியவை மூலம், இந்த தொலைதூர கனவை நனவாக்கியவர்களில் பெங்களூருவின் தொழில் வல்லுநர்களும் அடங்குவர். கடந்த அரசின் சிந்தனைச் செயற்பாடுகள் காலாவதியாகிவிட்டதால், 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் இவ்வாறான சாதகமான மாற்றங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. முந்தைய அரசுகள் வேகத்தை ஆடம்பரமாகவும், அபாயகரமானதாகவும் கருதின. எங்கள் அரசு இந்த போக்கை மாற்றியுள்ளது. வேகத்தை அபிலாஷையாகவும், இந்தியாவின் சக்தியாகவும் கருதுகிறோம். பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம், அனைத்துத் துறைகள் மற்றும் முகமைகளை ஒரே தளத்தில் கொண்டு வர அரசு முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட அடுக்கு தரவுகள் பல்வேறு முகமைகளுக்கு கிடைத்து வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல அமைச்சகங்கள் மற்றும் டஜன் கணக்கான துறைகள் இந்த தளத்தின் உதவியுடன் ஒன்றிணைகின்றன.இன்று, இந்தியா உள்கட்டமைப்பு முதலீட்டு திட்டத்தில் ரூ. 110 லட்சம் கோடிகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
நடபிரபு கெம்பேகவுடா அவர்கள் கண்ட கனவின்படி, பெங்களூருவின் வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த நகரத்தின் குடியேற்றம் இங்குள்ள மக்களுக்கு கெம்பேகவுடா அவர்களின் பெரும் பங்களிப்பாகும். அவரது தொலைநோக்கு பார்வையின் பலனை பெங்களூரு மக்கள் இன்னும் பெற்று வருகின்றனர். இன்று வணிகங்கள் மாறியிருந்தாலும், பெங்களூரின் வணிக உயிர்நாடியாக 'பெட்' பகுதி இன்னும் உள்ளது.
நண்பர்களே, பெங்களூரு ஒரு சர்வதேச நகரம். நாம் இதன் பாரம்பரியதைப் பாதுகாப்பதுடன், நவீன உள்கட்டமைப்பை செயுமைப்படுத்த வேண்டும். கூட்டு முயற்சியின் மூலமே, இது அனைத்தும் நடந்துள்ளது. மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகமிக்க கர்நாடக இளைஞர்கள், அன்னையர், சகோதரிகள், விவசாயிகள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.