"இந்திய வரலாற்றில் மீரட் ஒரு நகரமாக மட்டுமே இருக்கவில்லை, கலாச்சாரம் மற்றும் வலிமையின் குறிப்பிடத்தக்க மையமாக உள்ளது"
“நாட்டில் விளையாட்டு செழிக்க, இளைஞர்கள் விளையாட்டில் நம்பிக்கை வைத்து விளையாட்டை ஒரு தொழிலாகக் கொள்ள ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதுவே எனது தீர்மானமும் கனவும்”
"கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை இந்த இடங்களில் இருந்து அதிகரித்து வருகிறது"
"வளங்கள் மற்றும் புதிய பிரிவுகளுடன் வளர்ந்து வரும் விளையாட்டு சூழலியல் புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது. விளையாட்டை நோக்கி நகர்வது சரியான முடிவு என்ற நம்பிக்கையை இது சமூகத்தில் ஏற்படுத்துகிறது”
"மீரட் உள்ளூர் தொழில்களுக்காக குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பொருட்களை உலகத்தரம் மிக்கதாக மாற்றுகிறது"
“எங்கள் இலக்கு தெளிவாக உள்ளது. இளைஞர்கள் உதாரணமானவர்களாக மாறுவதோடு மட்டுமல்லாமல், அவர்களது முன்மாதிரிகளையும் அங்கீகரிக்க வேண்டும்”


பாரத் மாதா கி, ஜே!

பாரத் மாதா கி, ஜே!

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல் அவர்களே, மக்கள் செல்வாக்கும், ஆற்றலும் மிக்க முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திரு சஞ்சீவ் பல்யான் அவர்களே, வி கே சிங் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சத்யபால் சிங் அவர்களே, ராஜேந்திர அகர்வால் அவர்களே, விஜய்பால் சிங் தோமர் அவர்களே, திருமதி காந்தா கர்தான் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் சோமேந்திர தோமர் அவர்களே, சங்கீத் சோம் அவர்களே, ஜிதேந்திர சத்வால் அவர்களே, சத்யபிரகாஷ் அகர்வால் அவர்களே, மீரட் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கௌரவ் சவுத்ரி அவர்களே, முசாஃபர் நகர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வீர்பால் அவர்களே மற்றும் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளே, மீரட் மற்றும் முசாஃபர் நகரில் இருந்து வந்துள்ள எனது அருமை சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் இனிய 2022 புத்தாண்டு வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீரட்டுக்கு பயணம் செய்திருப்பது எனக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்திய வரலாற்றில் மீரட் என்பது வெறும் நகரமல்ல. கலாச்சாரத்திற்கும், பலத்திற்கும் குறிப்பிடத்தக்கதொரு மையம் ஆகும். ராமாயண, மகாபாரத காலத்திலிருந்து சமண தீர்த்தங்கரர்கள் வரையிலான நாட்டின் சமய நம்பிக்கையால் ஊக்கம் பெற்றிருப்பது மீரட். மேலும் அன்புக்குரிய ஐவர்களில் ஒருவரான பாய் தரம் சிங்காலும் சிறப்பு பெற்றது.

சிந்து சமவெளி நாகரீகம் முதல், நாட்டின் முதலாவது விடுதலைப் போராட்டம் வரை இந்தியாவின் பலத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது இந்தப்பகுதியாகும். 1857-ல் பாபா ஆகர்நாத் கோயிலில் இருந்து விடுதலைக்கான முழக்கம் ஒலித்தது. “தில்லியை நோக்கி பயணம்” என்ற அழைப்பு அடிமைத்தனத்தின் இருண்டப் பாதையில் நாட்டிற்கு ஒளியை ஏற்படுத்தியது. புரட்சியின் இந்த உந்துதலால் முன்னேறி நாம் விடுதலை அடைந்தோம். இன்று பெருமிதத்துடன் சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். இங்கு வருவதற்கு முன் பாபா ஆகர்நாத் ஆலயத்திற்குப் பயணம் செய்யும் வாய்ப்பை அதிர்ஷ்டவசமாக நான் பெற்றிருந்தேன். அமர்நாத் ஜோதிக்கும், விடுதலைப் போராட்ட அருங்காட்சியகத்திற்கும் கூட நான் சென்றிருந்தேன். நாட்டின் விடுதலைக்காக எதையும் செய்ய தயாராக இருந்தவர்களின் மனங்களில் குடிகொண்டிருந்த அதே உணர்வை அங்கே நான் பெற்றேன்.

சகோதரர்களே சகோதரிகளே,

நாட்டின் மற்றொரு மகத்தான புதல்வராக விளங்கிய மேஜர் தயான் சந்த் அவர்களின் பணியிடமாகவும் மீரட் உள்ளது. ஒருசில மாதங்களுக்கு முன் நாட்டின் மிக உரிய விளையாட்டு விருதுக்கு மத்திய அரசு தாதாவின் பெயரை சூட்டியது. இன்று மீரட் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம் மேஜர் தயான் சந்த் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் பெயருடன் மேஜர் தயான் சந்த் அவர்கள் இணைந்திருப்பதால் அவரது பெருமை உத்வேகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. அதுமட்டுமல்ல அவரது பெயரில் மேலும் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது. அவரது பெயரில் உள்ள “தியான்” என்பது கவனம் குவிந்த செயல்பாடு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதை அது கூறுகிறது. தியான் சந்துடன் இணைந்த இந்த பல்கலைக்கழகத்தின் இளைஞர்கள் முழுகவனத்துடன் பணியாற்றினால் இந்த நாட்டின் பெயரை பிரகாசிக்க செய்யலாம் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

உத்தரப்பிரதேசத்தில் முதலாவது விளையாட்டுக்கள் பல்கலைக்கழகத்தை பெற்றதற்காக இளைஞர்களை நான் பாராட்டுகிறேன். ரூ.700 கோடி செலவில் கட்டப்படவிருக்கும் இந்த நவீன பல்கலைக்கழகம் உலகின் சிறந்த விளையாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருக்கும். இங்கு விளையாட்டுக்கள் தொடர்பான சர்வதேச வசதிகளை இளைஞர்கள் பெறவிருக்கிறார்கள் என்பது மட்டுமின்றி விளையாட்டினை ஒரு பணியாக ஏற்று கொண்டிருப்பவர்களுக்கு தேவையான திறன்களையும் இது கட்டமைக்கும். ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான புதல்வர்களும், புதல்விகளும் சிறந்த விளையாட்டு வீரர்களாக வீராங்கனைகளாக உருவாக உள்ளனர். இதனால் புரட்சிகளின் நகரமான இது விளையாட்டு ஆளுமைகளின் நகரமாக அடையாளம் காணும் பலத்தையும் பெறும்.

நண்பர்களே,

நாட்டில் உள்ள இளைஞர்களிடம் நிறைந்திருக்கும் திறன்கள் அரசின் அக்கறையின்மை காரணமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. 2014-க்கு பின் இந்த பிடியிலிருந்து விடுபட அனைத்து நிலைகளிலும் நாங்கள் சீர்திருத்தங்களை செய்திருக்கிறோம். விளையாட்டு ஆளுமைகளின் திறன்களை அதிகரிக்க நான்கு கருவிகளை எங்கள் அரசு வழங்கியது. விளையாட்டு ஆளுமைகளுக்கு நிதி ஆதாரம், நவீன பயிற்சி வசதிகள், சர்வதேச வாய்ப்புகள், தேர்வில் வெளிப்படை தன்மை ஆகியவை தேவைப்படுகின்றன. எமது அரசு கடந்த சில ஆண்டுகளாக முன்னுரிமை அடிப்படையில் இந்திய விளையாட்டு ஆளுமைகளுக்கு இந்த கருவிகளை வழங்கியுள்ளோம். விளையாட்டுக்களை உடல் தகுதியோடும், இளைஞர்களின் வேலை வாய்ப்போடும், சுயவேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் பணிகளோடும் நாங்கள் இணைத்திருக்கிறோம். ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு திட்டம் என்பது இத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும்.

மிகச்சிறந்த விளையாட்டு ஆளுமைகளின் உணவு, உடல் தகுதி, பயிற்சி ஆகியவற்றுக்கு அரசு இன்று லட்சக்கணக்கான ரூபாயை செலவு செய்கிறது. கேலோ இந்தியா இயக்கத்தின் மூலம் மிகவும் இளம் வயதிலேயே நாட்டின் அனைத்து மூலையிலிருந்தும் திறன் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். இத்தகையவர்கள் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களாக உருவாக சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய விளையாட்டு ஆளுமைகள் இன்று சர்வதேச போட்டிகளில் நுழையும் போது அவர்களின் செயல்பாடு உலகத்தால் பாராட்டப்படுகிறது. இதனை ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் நாம் பார்த்தோம். வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் நிகழாததை கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டு புதல்வர்களும், புதல்விகளும் நிகழ்த்திக் காட்டினார்கள். ஏராளமான பதக்கங்களை வென்றதை அடுத்து விளையாட்டுக்கள் துறையில் புதிய விடியல் ஏற்பட்டிருப்பதாக நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலில் பேசினார்கள்.

நண்பர்களே,

உத்தரப்பிரதேசத்தின் இளைஞர்களிடம் நிறைய திறன் இருப்பதால் இரட்டை என்ஜின் அரசு இம்மாநிலத்தில் பல பல்கலைக்கழகங்களை நிறுவுகிறது. இரட்டை என்ஜின் அரசு இரட்டை பலனையும், இரட்டை வேகத்தையும் அடையாளம் கண்டுள்ளது. இந்த அடையாளம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். லக்னோவில் உள்ள யோகி அவர்களும், தில்லியில் உள்ள நானும் மிக நெருக்கமாகவே இருக்கிறோம் என்பதை மேற்கு உத்தரப்பிரதேச மக்கள் அறிவார்கள். இந்த புத்தாண்டில் புதிய வேகத்தோடு நாம் முன்னேறுவோம். மீரட்டின் பலத்தை, மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பலத்தை, இளைஞர்களின் பலத்தை இன்று இந்தியா முழுவதும் காண்கிறது. இந்த பலம் நாட்டின் பலமாகும். புதிய நம்பிக்கையோடு இதனை நாம் மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும். மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்

பாரத் மாதா கி, ஜே! பாரத் மாதா கி, ஜே!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 21, 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage