Quoteமங்களூருவில் சுமார் ரூ.3,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்
Quote“வளர்ந்த இந்தியாவை உருவாக்க, 'இந்தியாவில் உற்பத்தி' மற்றும் நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது மிகவும் அவசியம்"
Quote“சாகர்மாலா திட்டத்தின் மூலம் அதிக அளவில் பயனடைந்தவற்றில் கர்நாடக மாநிலமும் ஒன்று”
Quote“கர்நாடகாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு முதல் முறையாக குழாய் மூலம் குடிநீர் வசதி”
Quote“கர்நாடகாவில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 30 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர்”
Quote“சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் போது, நமது குடிசைத் தொழில்கள், கைவினை கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் பயனடைவர்”
Quote"இன்று டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வரலாற்று சிறப்புமிக்க நிலையில் உள்ளது பிம் –யூபிஐ போன்ற நமது புதிய கண்டுபிடிப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன"
Quote“சுமார் 6 லட்சம் கி.மீ. கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன”
Quoteஇன்று தொடங்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர்
Quoteபிரதமர் திரு.நரேந்திர மோடி, மங்களூரூவில், ரூ.3,800 கோடி மதிப்பிலான இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் அவர்களே, முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!

இந்திய கடல்சார் சக்திக்கு இன்று ஓர் முக்கிய தினம். நாட்டின் ராணுவ பாதுகாப்பிலும் பொருளாதார பாதுகாப்பிலும் இன்று இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை சந்தித்து வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் கொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம் அளிக்கிறது. 

|

தற்போது மங்களூருவில் ரூ. 3700 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் கர்நாடகாவின் வர்த்தகங்கள் மற்றும் தொழில்களுக்கு வலு சேர்ப்பதுடன் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதையும் ஊக்குவிக்கும். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பில் முன் எப்போதும் இல்லாத வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரத் மாலா திட்டத்தின் மூலம் எல்லை மாநிலங்களின் சாலை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் வேளையில் சாகர்மாலா திட்டத்தினால் கடல்சார் உள்கட்டமைப்பிற்கு ஆற்றல் அளிக்கப்படுகிறது.

|

சகோதர, சகோதரிகளே,

கடந்த சில ஆண்டுகளில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, நாட்டு வளர்ச்சியின் முக்கிய தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இது போன்ற முயற்சிகளின் விளைவாக இந்திய துறைமுகங்களின் திறன் கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மங்களூர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் துறைமுகத்தின் திறன் மற்றும் தரத்தை அதிகரிக்க உள்ளன. எரிவாயு சேமிப்பு மற்றும் திரவ சரக்கு சம்பந்தமாக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நான்கு திட்டங்கள் கர்நாடகாவிற்கும், நாட்டிற்கும் சிறந்த பயனை வழங்க உள்ளன. சமையல் எண்ணெய், எல்பிஜி எரிவாயு உள்ளிட்டவற்றின் இறக்குமதி செலவையும் இது குறைக்கும்.

நண்பர்களே,

அமிர்த காலத்தில் பசுமை வளர்ச்சி என்ற உறுதிப்பாடுடன் இந்தியா முன்னேறி வருகிறது. பசுமை வளர்ச்சி மற்றும் பசுமை வேலைகள் முதலியவை புதிய வாய்ப்புகளாக அமைந்துள்ளன. இன்று சுத்திகரிப்பு ஆலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகளும் நமது முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றன. இந்த சுத்திகரிப்பு ஆலை இதுவரை நதி நீரை சார்ந்திருந்தது. கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, இந்த சார்பை குறைக்கும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நவீன உள்கட்டமைப்பில் இந்தியா தற்போது கவனம் செலுத்தி வருகிறது. மங்களூரில் காணப்படும் ஆற்றல் சக்தி, வளர்ச்சி பாதையை தொடர்ந்து ஒளிமயமாக்கட்டும். இந்த நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA May 30, 2024

    मोदी जी 400 पार
  • MLA Devyani Pharande February 17, 2024

    जय श्रीराम
  • Vaishali Tangsale February 14, 2024

    🙏🏻🙏🏻✌️
  • ज्योती चंद्रकांत मारकडे February 12, 2024

    जय हो
  • Priti shivhare lal March 25, 2023

    एंटरप्रेन्योर शिप को बढ़ावा देने पर केंद्र सरकार के निरंतर प्रयास जो डीपीआईआईटी के मध्यम से किया जा रहा है,बेहद सराहनीय है।
  • Soma shekarame March 04, 2023

    PM.nareda.moude welcom to Somashekar erappa Mallappanahalli holenarasepur Hassan karnataka state welcom to the eshram card link hagedy money the sbibankacno*******5924inlinkoadarmadabekuhendubedekutywelcom
  • Soma shekarame March 02, 2023

    Somashekar erappa Mallappanahalli holenarasepur Hassan karnataka state welcom to the eshram card link hagedy money the sbibankacno*******5924inlinkoadarmadabekuhendubedekutywelcom
  • Bharat mathagi ki Jai vanthay matharam jai shree ram Jay BJP Jai Hind September 16, 2022

    நோ
  • Chowkidar Margang Tapo September 13, 2022

    Jai jai jai jai shree ram,.
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Tea exports increased from $852mn in 2023-24 to $900mn in 2024-25: Tea Board

Media Coverage

Tea exports increased from $852mn in 2023-24 to $900mn in 2024-25: Tea Board
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 24, 2025
March 24, 2025

Viksit Bharat: PM Modi’s Vision in Action