பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
முதலாவதாக, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், இங்கு வந்திருப்பதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மஹாகல் நகருக்கு நான் விஜயம் செய்தேன். இன்று ஶ்ரீ மணி மகேஸ்வரனின் அருளைப்பெற வந்துள்ளேன்.
சம்பா மற்றும் இதர தொலைதூர கிராமங்களுக்கு சாலை இணைப்பு வழங்கும் பன்னோக்கு திட்டங்களையும், வேலை உருவாக்கத்தை தொடங்கிவைக்கும் வாய்ப்பு பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சகோதர, சகோதரிகளே,
130 கோடி இந்தியர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் விடுதலையின் அமிர்தகாலம் தொடங்கியுள்ளது, இந்த காலகட்டத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை அடைய வேண்டும். இன்னும் சில மாதங்களில், இமாச்சல பிரதேசம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இமாச்சலும் நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடையும். அதனால், வரும் 25 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் நமக்கு மிகவும் முக்கியமானது.
நண்பர்களே,
தில்லியில் இமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்வாக்கு குறைவாக இருந்த காலம் ஒன்று உண்டு. அதன் கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக, சம்பா போன்ற மத நம்பிக்கையும், இயற்கை எழிலையும் கொண்ட முக்கியமான இடங்கள் வளர்ச்சிப் போட்டியில் பின்தங்கியிருந்தன. ஆனால் தற்போது, சம்பாவின் வலிமையை அறிந்திருந்ததால், முன்னேறத்துடிக்கும் மாவட்டமாக அறிவித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வில் கேரளாவிலிருந்து குழந்தைகள் இமாச்சலத்திற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாநிலத்தின் வளர்ச்சியின் வேகத்தை இரட்டிப்பாக்கிய இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் வலிமையை இமாச்சலம் இன்று உணர்ந்துள்ளது. பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் குறைவாகவும், அதே சமயம் அரசியல் ஆதாயங்கள் அதிகமாகவும் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே முந்தைய அரசுகள் சேவைகளை வழங்கிவந்தன. இதன் விளைவாக, தொலைதூர மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகவே இருந்தது. சாலைகள், மின்சாரம் அல்லது தண்ணீர் எதுவாக இருந்தாலும், அத்தகைய பகுதிகளின் மக்கள்தான் கடைசியாக பலன்களைப் பெற்றனர். இரட்டை என்ஜின் அரசின் பணியாற்றும் முறை மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. மக்களின் வாழ்க்கையை எப்படி எளிதாக்குவது என்பதே எங்களது முன்னுரிமை ஆகும். அதனால்தான் பழங்குடியினர் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எரிவாயு இணைப்புகள், குழாய் மூலம் குடிநீர், சுகாதார சேவைகள், ஆயுஷ்மான் பாரத், சாலை இணைப்பு போன்ற தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்க்கையை மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிராமங்களில் நலவாழ்வு மையங்களை உருவாக்குகிறோம் என்றால், மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கிறோம். சுற்றுலாவைப் பாதுகாப்பதற்காக தடுப்பூசி போடுவதில் இமாச்சலப் பிரதேசத்திற்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். நாட்டிலேயே மிக வேகமாக தடுப்பூசி சதவீதத்தை எட்டியதற்காக முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே, நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை ரூ.1800 கோடி செலவில் 7000 கி.மீ நீளமுள்ள கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில், வெறும் ரூ. 5000 கோடி செலவில் 12000 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலம் 3000 கிமீ கிராமப்புற சாலைகள் உருவாக்கப்படும்.
இமாச்சலப் பிரதேசம் கோரிக்கைகளுடன் டெல்லிக்கு வந்த நாட்கள் மலையேறிவிட்டது. இப்போது இமாச்சல் புதிய திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் ஆகியவை அதன் உரிமைகளுக்கான கோரிக்கைகள் பற்றிய தகவல்களுடன் வருகிறது. உங்கள் (மக்கள்) கட்டளைதான் எனக்கு மிகவும் தலையாய ஆணையாகும். நீங்கள் தான் எனது எஜமானர்கள். இதை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன், அதனால்தான் உங்களுக்கு சேவை செய்வதில் வித்தியாசமான மகிழ்ச்சியும், ஆற்றலும் எனக்கு அளிக்கிறது.
நண்பர்களே, இப்பகுதியின் வலிமையை இங்குள்ள மக்களின் வலிமையாக மாற்ற முயற்சித்து வருகிறோம். பழங்குடியினர் பகுதிகளில் உள்ள நீர் மற்றும் காடுகளின் செல்வம் விலைமதிப்பற்றது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள் மின் உற்பத்தித் துறையில் சம்பா மற்றும் இமாச்சலத்தின் பங்கை அதிகரிக்கும். சம்பாவும், இமாச்சல பிரதேசமும் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் பல நூறு கோடிகள் சம்பாதிக்கும், மேலும் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கடந்த ஆண்டும் இதுபோன்ற 4 பெரிய நீர் மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு கிடைத்தது. சில நாட்களுக்கு முன்பு பிலாஸ்பூரில் தொடங்கப்பட்ட ஹைட்ரோ இன்ஜினியரிங் கல்லூரி இமாச்சல பிரதேச இளைஞர்களுக்கும் பயனளிக்கும்.
இரட்டை என்ஜின் அரசு, அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை மதிக்கும் அரசாகும். சம்பா உட்பட, முழு இமாச்சலமும் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பூமியாகும். குலுவில் நடந்த தசரா திருவிழாவிற்கு தாம் சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர், நமக்கு ஒரு பக்கம் பாரம்பரியமும், மறுபுறம் சுற்றுலாவும் உள்ளது. இரட்டை என்ஜின் கொண்ட அரசு மட்டுமே இந்த சக்தியை அங்கீகரிக்கிறது. இமாச்சல் பழைய வழக்கத்தை மாற்றி புதிய பாரம்பரியத்தை உருவாக்கும் தனது முடிவை எடுத்துள்ளது.
இந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் உறுதியை நான் காண்கிறேன்.
பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!
பாரத் மாதாகி ஜே!