சித்தார்த் நகர், இட்டா, ஹர்தோய், பிரதாப்கட், ஃபதேபூர், தியோரியா, காசிப்பூர், மீர்சாப்பூர், ஜான்பூர் ஆகியவை புதிய மருத்துவக் கல்லூரி்களைப் பெற்றுள்ளன.
“ உத்தரப்பிரதேசத்தின் இரட்டை எஞ்சின் என்பது ஏராளமான கர்ம யோகிகளின் பல பத்தாண்டுகள் கடின உழைப்பின் விளைவாகும்”
மாதவ் பிரசாத் திரிபாதி என்ற பெயர் மருத்துவக் கல்லூரியில் படிப்பை நிறைவு செய்யும் இளம் மருத்துவர்களுக்கு மக்கள் சேவைக்கான ஊக்கம் அளிப்பதை தொடரும்”.
“மூளைக்காய்ச்சலால் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக விளங்கிய பூர்வாஞ்சல், உத்தரப்பிரதேசம் ஆகியவை இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குப் புதிய ஆரோக்கிய ஒளிக்கீற்றை வழங்கும்”
”அரசு உணர்வுபூர்வமாக இருக்கும் போது, ஏழைகளின் வலியைப் புரிந்து கொள்ள மனதில் இரக்க உணர்வு ஏற்படும். இதன் பின், நல்ல செயல்பாடுகள் நடைபெறும்”
”இம்மாநிலத்தில், ஏராளமான மருத்துவக் கல்லூரிகளின் அர்ப்பணிப்பு முன் எப்போதும் காணப்படாததாக இருக்கிறது. இது ஏற்கெனவே நடைபெறவில்லை – இப்போது ஏன் நடைபெறுகிறது இதற்கு ஒரே ஒரு காரணம்தான் உள்ளது- அரசியல் உறுதி மற்றும் அரசியல் ரீதியான முன்னுரிமை”
”2017வரை உத்தரப்பிரதேசத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1900 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. இரட்டை எஞ்சின் அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1900-க்கும் அதிகமான இடங்களை சேர்த்துள்ளது”.

Bharat Mata Ki Jai,

பாரத் மாதா கி ஜெய்,

பாரத் மாதா கி ஜெய்

புத்தபிரானின் புனித பூமியான சித்தார்த் நகர மக்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புத்தபிரான் தமது இளமை காலத்தில் வசித்த இந்த பூமியிலிருந்து 9 மருத்துவ கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் கட்டுடல் இந்தியாவை நோக்கிய மிகப்பெரும் நடவடிக்கையாகும். உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல் அவர்களே, உத்தரப்பிரதேசத்தின் பிரபலமான கர்ம யோகி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவா்களே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்களே, 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ள தொகுதிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, பிற மக்கள் பிரதிநிதிகளே, சகோதர சகோதரிகளே,

இன்று பூர்வாஞ்சல் பகுதிக்கும், ஒட்டுமொத்த உத்தரப்பிரதேசத்தின் ஆரோக்கியத்திற்கு இரட்டை டோஸ்களுடனும் மக்களாகிய உங்களுக்கு பரிசுடனும் வந்திருக்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்படும் 9 மருத்துவக் கல்லூரிகள் சித்தார்த் நகரிலிருந்து தொடங்கி வைக்கப்படுகிறது. மற்றொரு மெகா மருத்துவ கட்டமைப்புத் திட்டம், நாடு முழுவதற்கும் மிக முக்கியமான இத்திட்டமும் பூர்வாஞ்சலிலிருந்து தான் தொடங்கி வைக்கப்படுகிறது. உங்களுடன் கலந்துரையாடியபிறகு காசியிலிருந்து இதனை தொடங்கிவைக்க உள்ளேன்.

நண்பர்களே,

ஏராளமான கர்ம யோகிகள் பல தசாப்தங்களாக உழைத்ததன் பலனாக மத்தியிலும் உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. மாதவ் பிரசாத் திரிபாதி வடிவில், சித்தார்த் நகரும் அத்தகைய மக்கள் பிரதிநிதி ஒருவரை நாட்டிற்கு வழங்கியுள்ளது. மாதவ்பாபு அவரது இளமைக் காலம் முழுவதும் அரசியலில் கர்ம யோகாவை உருவாக்குவதற்காக அர்ப்பனித்துக்கொண்டவராவார். எனவே, சித்தார்த் நகர் மருத்துவ கல்லூரிக்கு அவரது பெயரை சூட்டுவதே அவரது சேவைக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும். இதற்காக, யோகி மற்றும் அவரது அரசை பாராட்டுகிறேன்.

சகோதர சகோதிரிகளே,

நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் சமுதாய வாழ்வை பொறுத்தவரை உத்தரப்பிரதேசம் மற்றும் பூர்வாஞ்சல் பகுதி மிகுந்த பாரம்பரியத்தைக் கொண்டதாகும். இந்த மரபு எதிர்கால ஆரோக்கியம், வளமான உத்தரப்பிரதேசத்துடன் தொடர்புடையதாகும். 9 மாவட்டங்களில் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் இதனை பிரதிபலிக்கும். இந்த 9 புதிய மருத்துவக் கல்லூகளில் சுமார் 2500 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பதுடன், 5000 மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோரும் 100 கணக்கான இளைஞர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

முந்தைய அரசுகளால் கேட்பாரற்று விடப்பட்ட பூர்வாஞ்சல் பகுதி, தற்பொது கிழக்கு இந்தியாவின் மருத்துவ மையாமாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்த பகுதி, நொய்களிலிருந்து நாட்டை பாதுகாக்கும் பல மருத்தவர்களை உருவாக்க உள்ளது. மூலைக்காய்ச்சல் பாதிப்பால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டபோது பூர்வாஞ்சலின் நற்பெயருக்கு முந்தைய அரசுகளால் களங்கம் ஏற்படுத்தப்பட்டது.

சகோதர சகோதரிகளே,

அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளுக்கு நம் நாட்டில் இதற்கு முன்பு உரிய முன்னுரிமை அளிக்கப்படவில்லை. சிறந்த மருத்துவரிடம் நல்ல சிகிச்சை பெறவேண்டுமெனில் நீங்கள் பெரிய நகருக்கு செல்வேண்டியிருந்தது. அவ்வாறு செல்லும்போது சிலரது உடல் நிலை மோசமடைந்துவிடும் என்பதால், நகருக்கு விரைவாக செல்வதற்கு நீங்கள் கார் ஏற்பாடு செய்யவேண்டிய அவசியமும் இருந்தது. இந்த நிலை தான் நமது கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளின் யதார்த்தமாகும். கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் கூட மேம்பட்ட சுகாதார வசதிகள் அரிதாகவே கிடைத்து வந்தது. நானும் இது போன்ற பிரச்சினையை சந்தித்துள்ளேன். ஏழை- தலித்- நலிந்த பிரிவினர், விவசாயிகள், கிராம வாசிகள், தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் மருத்துவ சிகிச்சையை நாடிச் செல்லும்போது ஏமாற்றமே மிஞ்சியது. இதுபோன்ற விரக்தி தங்களது தலைவிதி என அந்த மக்கள் நினைத்து வந்தனர். 2014-ல் ஆட்சி அமைக்க நீங்கள் எனக்கு வாய்ப்பளித்தால், இந்த நிலைமையை மாற்ற எங்களது அரசு 24மணி நேரமும் உழைக்கிறது. சாமான்ய மக்களின் வேதனை மற்றும் துயரங்களை உணர்ந்து அதனை போக்க பாடுபட்டோம்.

நண்பர்களே,

பல்வேறு வயதுடைய சகோதரிகளும் சகோதரர்களும் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். உத்தரப்பிரதேசத்தில் இதற்கு முன்பு ஒரே நேரத்தில்இத்தனை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாக உங்களுக்கு ஞாபகம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். இதற்கு முன்பு அது போன்று நடந்திருக்கிறதா? இல்லை, நடைபெறவில்லை. அரசியல் உறுதிப்பாடு மற்றும் முன்னுரிமை காரணமாக தற்போதுதான் அது சாத்தியமாகியுள்ளது.

நண்பர்களே,

உடல்நிலைப் பாதிப்பு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை அதற்கு அனைவரும் சமம். ஆகையால் இந்த மருத்துவ வசதிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும்.

நண்பர்களே,

7 ஆண்டுகளுக்கு முன் தில்லியில் இருந்த அரசுகளும் 4 ஆண்டுகளுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் இருந்த அரசும் வாக்குகளுக்காக வேலை செய்தன. வாக்குகளைக் கருத்தில் கொண்டு சில மருந்தகங்கள் அல்லது சிறிய மருத்துவமனைகள் பற்றிய அறிவிப்புகளால் திருப்தியடைந்தன.  நீண்ட காலமாகக் கட்டிடம் கட்டப்பட்டிருக்காது, கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் கருவிகள் இருக்காது, இவை இரண்டுமே செய்யப்பட்டிருந்தால் மருத்துவர்களோ இதர ஊழியர்களோ இருக்கமாட்டார்கள்.   ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எனும் ஊழல் சக்கரம், ஓய்வில்லாமல் 24 மணிநேரமும் சுழன்று கொண்டிருந்தது.

2014-க்கு முன் நமது நாட்டில் மருத்துவ இடங்கள் 90,000-க்கும் குறைவாக இருந்தன.  கடந்த 7 ஆண்டுகளில் 60,000 புதிய மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்திலும்கூட 2017 வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1900 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இரட்டை எஞ்சின் அரசால் 1900-க்கும் அதிகமான இடங்கள் கூடுதலாகி உள்ளன.

நண்பர்களே,

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ இடங்களின்  எண்ணிக்கையை அதிகரிப்பதால் அதிக பேரை மருத்துவர்களாக்க முடியும். அரசின் அயராத முயற்சிகளால்அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் அதிக மருத்துவர்களை உருவாக்க முடியும்.

நண்பர்களே,

நாடு முழுவதும் பல நுழைவுத் தேர்வுகளை எழுதுவதிலிருந்து இளைஞர்களை விடுவிக்க ஒரே நாடு ஒரே தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. இது  செலவையும் சிரமத்தையும் குறைத்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கட்டணங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்படி கண்காணிக்க சட்டங்கள் உருவாக்கப்பட்டன.  உள்ளூர் மொழியில் மருத்துவக் கல்வி இல்லாததால் பல பிரச்சினைகள்  நிலவுகின்றன. தற்போது இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் மருத்துவக் கல்வியைப் படிக்கும் வாய்ப்புள்ளது. இளைஞர்கள் தாய் மொழியில் படிக்கும்போது அவர்களால் மருத்துவப் பணியில் சிறப்பாக செயல்பட முடியும்.  

நண்பர்களே,

உத்தரப்பிரதேச மாநிலத்தால் சுகாதார வசதிகளை வேகமாக மேம்படுத்த முடியும். நான்கு நாட்களுக்கு முன்பு 100 கோடி தடுப்பூசி இலக்கை நாடு சாதித்தது. இந்த சாதனையில் உத்தரப்பிரதேசம் அதிகம் பங்களித்துள்ளது.  இதற்காக உத்தரப்பிரதேச மக்கள், முன்களப்பணியாளர்கள் அரசு நிர்வாகத்தினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன். தற்போது நாடு 100 கோடி தடுப்பூசி என்ற பாதுகாப்புக் கவசத்தைப் பெற்றுள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொரோனாவை சமாளிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் குழந்தைகளுக்கான மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் தற்போது 60-க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை நிலையங்கள் உள்ளன.  500-க்கும் மேற்பட்ட புதிய ஆக்சிஜன் ஆலைகளை அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் மற்றும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போதும் அவர்களின் முயற்சிகள் நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிய மருத்துவக் கல்லூரிக்கு உத்தரப்பிரதேசத்தின் வாழ்த்துகள். எங்களை ஆசீர்வதிக்க நீங்கள் அதிக அளவில் வந்துள்ளீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi