Quote296கி.மீ நான்குவழி விரைவுச்சாலை, ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது
Quoteஇந்த விரைவுச்சாலை, இப்பகுதியின் போக்குவரத்து இணைப்பு வசதி மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்
Quote“உத்தரப்பிரதேச விரைவுசசாலை திட்டங்கள், மாநிலத்தில் புறக்கணிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை இணைக்கிறது“
Quote“உத்தரப்பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளும், புதிய கணவுகள் மற்றும் புதிய உறுதிப்பாட்டுடன் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல ஆயத்தம்“
Quote“முன்னேறிய மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுவதால், நாட்டில் உத்தரப்பிரதேசத்தின் அடையாளம் மாறி வருகிறது“
Quote“குறித்த காலத்திற்கு முன்பாகவே திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது, மக்கள் தீர்ப்பு மற்றும் நம்பிக்கையை மதிக்கிறோம்“
Quote“நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூர்வதோடு, அடுத்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதன் மலம் புதிய உறுதிப்பாட்டிற்கான சூழலை உருவாக்குவோம்“
Quote“நாட்டிற்கு ஊறு விளைவிக்கும் அம்சங்கள், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தைப் பாதிக்கும் அனைத்து அம்சங்களையும் புறந்தள்ளுவோம்“
Quote“இரட்டை-எஞ்சின் அரசுகள் இலவசம் என்ற குறுக்குவழியை பின்பற்றாமல், ‘ரெவ்ரி‘ கலாச்ச
Quoteஉத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Quoteநாட்டின் பெயரை எப்போதும் ஒளிமயமாக்கி வருகிறது“ என்றும் அவர் கூறினார்.

வேத வியாசரின் பிறப்பிடமும், மகாராணி லட்சுமிபாயின் ஊருமான பண்டல்கண்டிற்கு வருகை தருவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். வணக்கம்!

உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மவுரியா, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, அமைச்சரவையில் எனது நண்பரான திரு பானுபிரதாப் சிங் அவர்களே, உத்திரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

பண்டல்கண்ட் பகுதியின் ஒளிமயமான பாரம்பரியத்திற்கு இந்த விரைவுச்சாலை அர்ப்பணிக்கப்படுகிறது. திரு யோகி ஆதித்யநாத் அவர்களின் தலைமையின் கீழ் உத்தரப்பிரதேசத்தின் முழு உருவத்தையும் இம்மாநில மக்கள் மாற்றியுள்ளனர். அவரது அரசால், சட்டம் ஒழுங்கு மேம்பட்டிருப்பதுடன், இணைப்பும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.  பண்டல்கண்ட் விரைவுச்சாலை, இங்குள்ள வாகனங்களை வேகப்படுத்துவதுடன், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து தொழில்துறைகளின் முன்னேற்றத்தையும் வேகப்படுத்த உள்ளது. இந்த விரைவுச்சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான சேமிப்புக் கிடங்குகள், குளிர்சாதன வசதிகள் போன்ற தொழில்துறைகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் காரணமாக இப்பகுதியில் வேளாண் அடிப்படையிலான தொழில்களை எளிதாக அமைக்க முடியும். பண்ணைப் பொருட்களை சந்தைகளுக்கு சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். பண்டல்கண்டில் உருவாகி வரும் ராணுவ வழிதடத்திற்கும் இச்சாலை உதவிகரமாக இருக்கும்.

|

நண்பர்களே,
உத்தரப்பிரதேசத்தின் சிறிய நகரங்களில் விமான சேவையை அளிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பண்டல்கண்ட் விரைவுச்சாலை, பயன்பாட்டிற்கு வந்த பிறகு இங்குள்ள கோட்டைகளுக்கு சுற்றுலாவை உருவாக்குமாறு திரு யோகி அவர்களின் அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் பண்டல்கண்டின் வளத்தைக் கண்டு களிக்க முடியும். இரட்டை எஞ்ஜின் அரசின் தலைமையின் கீழ் முன் எப்போதும் இல்லாத வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த மாநிலங்களும் பின் தங்கும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் தற்போது உள்கட்டமைப்பு பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இம்மாநிலத்தின் அடையாளம் நாடு முழுவதும் மாறி வருகிறது.

|

நண்பர்களே,

நெடுஞ்சாலைகள் அல்லது வான்வழி மட்டுமல்லாமல், கல்வி, உற்பத்தி, வேளாண்மை என ஒவ்வொரு துறையிலும் உத்தரப்பிரதேசம் முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் இந்த மாநிலத்தில் 12 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது இங்கு 35-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் செயல்படுவதுடன், புதிதாக 14 கல்லூரிகளை அமைப்பதற்கான வேலைகளும் நடைபெறுகிறது. 

நடப்பு காலத்திற்கான புதிய வசதிகளை நாம் உருவாக்குவதோடு, நாட்டின் எதிர்காலத்திற்குத் தேவையான கட்டமைப்பையும் அமைத்து வருகிறோம். பிரதமரின்  தேசிய விரைவு சக்தி  திட்டத்தின் வாயிலாக 21-ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். நல்ல ஆளுகையின் புதிய அடையாளத்தோடு உத்தரப்பிரதேசம் தொடர்ந்து வலிமை பெறட்டும். ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை ஒவ்வொரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் விடுதலையின் 75 ஆண்டு அமிர்தப் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். 
மிக்க நன்றி.

  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • JBL SRIVASTAVA June 02, 2024

    मोदी जी 400 पार
  • Sanjeev Tivari May 16, 2024

    Jai shree Ram
  • MLA Devyani Pharande February 17, 2024

    जय श्रीराम
  • Vaishali Tangsale February 14, 2024

    🙏🏻🙏🏻
  • ज्योती चंद्रकांत मारकडे February 12, 2024

    जय हो
  • Shirish Tripathi October 11, 2023

    विश्व गुरु भारत 🙏🇮🇳
  • Ramanlal Amin March 11, 2023

    માનનિય.વડાપ્ધાન. મોદી સાહેબ ! આજના બધા સમાચાર મેં વાંચ્યા , આપની ડબલ એન્જીંન સરકારની કામગીરીથી આપે ભારતની અને બુદેલખંડ તેમજ ઉત્રપ્દેશની જનતાને જે સંદેશો આપ્યો તે દેશના દરેક ખૂણાનો વિકાસ કેવો હોવો જોઈએ તેનું આબેહૂબ ચિત્ર લોકો સમક્ષ મુક્યુ છે ! ધન્યવાદ ! નમસ્કાર! વંદેમાતરમ્ — ભારતમાતાકી જય !
  • Bharat mathagi ki Jai vanthay matharam jai shree ram Jay BJP Jai Hind September 16, 2022

    யி
  • G.shankar Srivastav August 09, 2022

    नमस्ते
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
After over 40 years, India issues tender for Sawalkote project as Indus treaty remains in abeyance

Media Coverage

After over 40 years, India issues tender for Sawalkote project as Indus treaty remains in abeyance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 31, 2025
July 31, 2025

Appreciation by Citizens for PM Modi Empowering a New India Blueprint for Inclusive and Sustainable Progress