PM Modi inaugurates and lays foundation stone of various development projects in Varanasi
Today Kashi is becoming a hub of health facilities for the entire Purvanchal: PM Modi
PM Modi requests people to promote 'Local for Diwali' in addition to 'vocal for local', says buying local products will strengthen local economy

உங்கள் அனைவருடனும் பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளதற்காக நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணருகிறேன். வாரணாசி நகரில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களாலும், எடுக்கப்படும் முடிவுகளாலும், மக்கள் பயனடைந்து வருகின்றர். பாபா விஸ்வநாதரின் ஆசிகளால் இது சாத்தியமாகிறது. நான் மெய்நிகர் வடிவில் இதில் பங்கேற்றாலும், காசியின் பாம்பரிய பிரதிபலிப்பு இல்லாமல் நாம் முன்னேற முடியாது. எனவே, இத்திட்டத்தில் யாரெல்லாம் என்னுடன் தொடர்பு கொண்டவர்களோ, நாம் அனைவரும் சேர்ந்து ஹர ஹர மகாதேவா என்று சொல்வோம். தீபாவளி, சாட் பூஜை, கோவர்த்தன பூஜை போன்ற பண்டிகைகளைக் கொண்டாடவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்னை அன்னபூர்ணா உங்களது வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டு வரட்டும். சந்தைகளில் அற்புத ஒளி வீசட்டும். காசி தெருக்களில் கலகலப்பு நிலவட்டும். வாரணாசி சேலைகளின் விற்பனை பிரகாசமாக ஒளிரட்டும். இந்தக் கொரோனா காலத்திலும் நமது விவசாயிகள் வேளாண்மையில் மிகுந்த கவனம் செலுத்தினர். இந்த முறை வாரணாசி உள்ளிட்ட பூர்வாஞ்சல் முழுவதும் அபரிமித விளைச்சல் காணப்பட்டுள்ளது. விவசாயிகள் கடினமாக உழைப்பது, அவர்களுக்காக மட்டுமல்ல; நாடு முழுவதற்காவும்தான். அன்னம் வழங்கும் அவர்களது கடின உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கதாகும். உத்தரப்பிரதேசத்தின் புகழ் மிக்க முதலமைச்சர் திரு.யோகி ஆதித்ய நாத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு. கேசவ் பிரசாத் மவுர்யா அவர்களே, மாநில அமைச்சர்களே, என்னுடன் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் சகோதர, சகோதரிகளே வணக்கம்.

மகாதேவரின் ஆசியுடன் காசி ஒருபோதும் நின்றுவிடுவதில்லை. அன்னை கங்கையைப் போல அது முன்னேறிக் கொண்டே செல்கிறது. இந்தக் கொடிய கொரோனா காலத்திலும், இந்த வடிவில் காசி முன்னேறியுள்ளது. இந்த நெருக்கடியான நிலையில், கொரோனாவுக்கு எதிராக போராடிய விதமும், காட்டிய ஒத்துழைப்பும் உண்மையிலேயே மெச்சத்தகுந்தவையாகும். இன்று வாரணாசியின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில், உருவாக்கப்பட்ட திட்டங்கள்  தொடங்கப்பட்டுள்ளதுடன்,  பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது. இன்று கூட, ரூ.220 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ரூ.400 கோடி மதிப்பிலான 14 திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக வாரணாசி மக்களை நான் வாழ்த்துகிறேன். காசியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான பேரும் புகழும் முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது குழுவினரையே சாரும். இந்த அரிய பணியில் ஈடுபட்டுள்ள முதலமைச்சரையும், அவரது அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினரையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே, வாரணாசி நகர் மற்றும் புறநகர்ப் பகுதி மேம்பாட்டு திட்டத்தில் சுற்றுலாவும் ஒரு பகுதியாகும்  கங்கை நதி தூய்மை, சுகாதார சேவைகள், சாலை, உள்கட்டமைப்பு, சுற்றுலா, மின்சாரம், இளைஞர் நலன், விளையாட்டு, விவசாயிகள் உள்பட ஒவ்வொரு துறையிலும் வாரணாசி அதிவேக வளர்ச்சி கண்டுள்ளதற்கு இவை எடுத்துக்காட்டுகள். கங்கா செயல் திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தின் மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்து விட்டன. கங்கை நதியோர கட்டங்கள் அலங்காரம், மாசைக் குறைக்க படகு போக்குவரத்தில் எல்என்ஜி அறிமுகம், தகஷ்வமேத் கட்டத்தில் சுற்றுலா பிளாசா போன்ற  பல்வேறு திட்டங்கள் வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காசிக்கான கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தவும், புதிய வாய்ப்புகளுக்கான பாதையை உருவாக்கவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இங்குள்ள படித்துறைகள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன. கங்கை கட்டங்களை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பணிக்கு இடையே,  சாரநாத் புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள ஒலி,ஒளி காட்சி, சாரநாத்தின் கம்பீரத்தை அதிகரிக்கும்.

காசியின் பெரும்பகுதி மின்சார வயர்கள் தொங்கும் மோசமான நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. வயர்களை தரைக்கு அடியில் பதிக்கும் மற்றொரு பகுதி பணிகள் இன்று நிறைவடைந்துள்ளன. எழில் மிகுந்த எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு, தெருக்கள் அழகுடன் திகழும்.

நண்பர்களே, வாரணாசியை அனைத்து வகையிலும் இணைப்பதில் எங்கள் அரசு எப்போதும் உயர் முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகிறது. புதிய உள்கட்டமைப்புகள் மூலம், காசி மக்களும், சுற்றுலா பயணிகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி நேரத்தை இனி வீணடிக்க வேண்டியதில்லை. பாத்பூரிலிருந்து நகரை இணைக்கும் சாலை, வாரணாசிக்கு புதிய அடையாளமாக இருக்கும். வாரணாசி விமானநிலையத்திற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும்  தேவையாக இருந்த இரண்டு பயணிகள் பாலங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. வாரணாசி விமான நிலையம் தினசரி 12 விமானங்களைக் கையாண்டு வந்த நிலை மாறி, தற்போது நாளொன்றுக்கு 48 விமானங்களை கையாண்டு வருகிறது.  வாரணாசியில் வசிக்கும் மக்கள் மற்றும் இங்கு வருகை தருபவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், வாரணாசிக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

சகோதர, சகோதரிகளே, விமான நிலைய இணைப்பு வசதிகள், உள்வட்டச்சாலை, மேம்பாலங்கள் ஆகியவற்றின் மூலம் வாரணாசியின் தோற்றமே மாறியுள்ளது. இன்று கூட, வாரணாசி நகரின் பல்வேறு பகுதிகளில் உள்கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நீர்வழிப் போக்குவரத்தில் வாரணாசி முன்மாதிரியாகத் திகழும். நாட்டின் உள்நாட்டு நீர்வழி துறைமுகம் வாரணாசியில் கட்டப்பட்டு வருகிறது.

வாரணாசியில் கடந்த ஆறு ஆண்டுகளில், முன்பு இல்லாத வகையில் சுகாதாரத்துறையில் பணிகள் நடைபெற்றுள்ளன.  இன்று உத்தரப்பிரதேசத்துக்கு  மட்டுமல்லாமல், பூர்வாஞ்சல் முழுவதற்கும் சுகாதார வசதிகள் கொண்ட மையமாக காசி உருவெடுத்துள்ளது. ராம்நகர் லால் பகதூர் மருத்துவமனை, ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை,  பண்டிட் மாளவியா புற்றுநோய் மருத்துவமனை நவீனமயமாக்கல்  மற்றும் விரிவாக்கப்பணிகள்  வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவையெல்லாம் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள  பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் ஆகும். இவையனைத்தும் வாரணாசி சுகாதார மையமாக உருவெடுத்துள்ளதற்கு சான்றாகும். இத்திட்டங்களால், ஏழை, எளிய மக்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் பயனடைவார்கள்.

வாரணாசியில் தற்போது அனைத்துத் துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பூர்வாஞ்சல் உள்ளிட்ட கிழக்கு இந்தியா முழுமைக்கும் இதனால் பயன் கிட்டியுள்ளது. போக்குவரத்து வசதிகள் பெருகியுள்ள நிலையில்,  இன்று பூர்வாஞ்சல் பகுதி மக்களுக்கு, எல்லா வசதிகளும் இங்கேயே கிட்டுகின்றன. இதனால், முன்பு போல, சிறு தேவைகளுக்கு கூட  தில்லி, மும்பை ஆகிய இடங்களுக்கு சென்று வந்த அவசிய நிலை தற்போது இல்லை.

சர்வதேச அரிசி நிறுவனம், பால் பதப்படுத்தும் நிலையம், அழுகும் பொருள் பாதுகாப்பு மையம் போன்ற பல வசதிகள் வாரணாசி மற்றும் பூர்வாஞ்சல் விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய வசதிகள் மூலம் விவசாயிகள் பெரும் பயனடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு முதல் முறையாக, வாரணாசி பிராந்தியத்தில் இருந்து, பழங்கள், காய்கறிகள், நெல் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.  இன்று தொடங்கப்பட்டுள்ள 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, காசியில் உள்ள விவசாயிகளுக்காக விரிவுபடுத்தப்படும்.  ஜான்சாவில் பன்னோக்கு விதை சேமிப்பு கிடங்கு மற்றும் பரவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா இயக்கத்தின் முக்கிய பெரும் தூண்களாக விளங்குபவர்கள் கிராமப்புற ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆவர்.  அதன் பெரும் பயனாளிகளும் அவர்கள்தான். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கப் போகின்றன. விவசாயிகளைப் போலவே, சிறு வியாபாரிகளுக்கும் நன்மை அளிக்கும், பிரதமர் ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தெரு வியாபாரிகள் எளிதாக கடன்களைப் பெற்று வருவதால், பெருந்தொற்றுக்கு பின்னர் தங்கள் தொழில்களை மீண்டும் தொடங்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தெரு வியாபாரிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் கடன் வழங்கப்படுகிறது.

கிராமங்களில் தங்கள் சொந்த நிலங்கள் மற்றும் வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமைகளை அளிக்கும் வகையில், ஸ்வமித்வ யோஜனா தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சொத்து அட்டைகள் வழங்கப்பட்ட பின்னர், சொத்து குறித்த தாவாக்களுக்கு இடம் இராது. சொத்துக்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்வதும் தடுக்கப்படும். கிராம நிலங்கள் அல்லது வீடுகள் மீது வங்கிகளில் கடன் பெறுவது இனி எளிதாகும்.

தீபாவளி, கோவர்த்தன பூஜை, பையா தூஜ் ஆகிய பண்டிகைகளையொட்டி நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் என்ற மந்திரம் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி,  உள்ளூர் பொருட்களை அதிகம் வாங்க வேண்டும்.  உள்ளூர் அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில், உள்ளூர் பொருட்களை பெருமையுடன் பிரபலப்படுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

காசி காசிக்கு ஒளியேற்றுகிறது. காசி அனைத்துக்கும் ஒளியேற்றுகிறது. இன்று பரவும் இந்த ஒளி, காசியின் ஆசிகளாகும். மகாதேவரின் ஆசிகளாகும். இந்தப் பிரகாசத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்ல நான் முயலுகிறேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். மீண்டும் ஒருமுறை காசி மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். காசி விஸ்வநாதர், கால பைரவர், மாதா அன்னபூர்ணா ஆகியோரின் பாதங்களைப் பணிகிறேன். எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு, உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நன்றிகள் பல!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Bad loans decline: Banks’ gross NPA ratio declines to 13-year low of 2.5% at September end, says RBI report

Media Coverage

Bad loans decline: Banks’ gross NPA ratio declines to 13-year low of 2.5% at September end, says RBI report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 27, 2024
December 27, 2024

Citizens appreciate PM Modi's Vision: Crafting a Global Powerhouse Through Strategic Governance