நாட்டிற்கு உத்வேகம் அளித்த இதுபோன்ற ஏழு சிறந்த ஆளுமைகளுக்கும் இன்று நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஏனென்றால் உங்கள் நேரத்தை செலவழித்து சொந்த அனுபவங்களைச் சொன்னீர்கள். இது ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகவும் பயனளிக்கும் என்று நான் நினைக்கிறேன். இன்றைய கலந்துரையாடல் அனைத்து வயதினருக்கும், பல்வேறு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதல் ஆண்டு நிறைவு நாளில், நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
ஒரு வருடத்திற்குள், இந்த உடற்பயிற்சி இயக்கம் மக்களின் இயக்கமாகவும், நேர்மறை இயக்கமாகவும் மாறிவிட்டது. உடல்நலம் மற்றும் உடற்தகுதி குறித்த விழிப்புணர்வும் நாட்டில் அதிகரித்து வருகிறது, சுறுசுறுப்பும் அதிகரித்துள்ளது. யோகா, ஆசனங்கள், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டம், நீச்சல், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை இப்போது நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாறி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது, அதில் சுமார் 6 மாதத்தை பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் செலவிட வேண்டியிருந்தது. ஆனால் இந்த இயக்கம், இந்த கொரோனா காலத்தில் அதன் செல்வாக்கையும் பொருத்தத்தையும் நிரூபித்துள்ளது. உடல் தகுதியுடன் இருப்பது, சிலர் நினைப்பது போல் கடினம் அல்ல. சில விதிகளைக் கடைபிடிப்பதுடன், கொஞ்சம் கடின உழைப்பும் இருந்தால், நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். 'फिटनेस की डोज़, आधा घंटा रोज' (தினமும் அரைமணி நேர உடற்பயிற்சி) என்பதில் அனைவரின் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது.
யோகா, பூப்பந்து, டென்னிஸ், கால்பந்து, கராத்தே அல்லது கபடி என எதுவாக இருந்தாலும், நீங்கள் விரும்பியதை தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் செய்யுங்கள். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் துறை அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் இணைந்து உடற்பயிற்சி நெறிமுறையை வெளியிட்டுள்ளன.
நண்பர்களே,
இன்று உலகளவில் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, உணவு, உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் குறித்த உலகளாவிய உத்தியை உருவாக்கியுள்ளது. உடல்செயல்பாடு குறித்த உலகளாவிய பரிந்துரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இன்று உலகின் பல நாடுகள் உடற்பயிற்சி தொடர்பாக புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளன, அவை பல முனைகளில் வேலை செய்கின்றன, பல வகையான வேலைகளைச் செய்கின்றன. ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில், அதிகமான மக்கள் தினசரி உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள்.
நண்பர்களே,
கடின உழைப்பு, வெற்றி, அதிர்ஷ்டம் அனைத்தும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. நாம் தவறாமல் உடற்பயிற்சி செய்யும்போது, அது நம்மை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருக்கும். ஆம், நாமே நம்மை உருவாக்கியவர்கள் என்று உணர்வு ஏற்படும். தன்னம்பிக்கை வரும். ஒரு நபரின் இந்த நம்பிக்கை, அவருக்கு வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் வெற்றியைத் தருகிறது. இது குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்கும் இது பொருந்தும்.
ஒன்றாக விளையாடும் குடும்பம், உடல்தகுதியிலும் ஒன்றாக இருக்கும்.
இந்த தொற்றுநோயின் போது பல குடும்பங்கள் இந்த பரிசோதனையை முயற்சித்தன. குடும்பமாக விளையாடினார்கள், ஒன்றாக யோகா-பிராணயாமம் செய்தார்கள், உடற்பயிற்சி செய்தார்கள், ஒன்றாக வியர்வை சிந்தினார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உணர்ச்சி பிணைப்பு, சிறந்த புரிதல், பரஸ்பர ஒத்துழைப்பு போன்ற பல விஷயங்களிலும் உதவியது. அது குடும்பத்தின் பலமாக மாறிவிட்டது. அது தன்னிச்சையாக வெளிப்பட்டது. பொதுவாக எந்தவொரு நல்ல பழக்கத்தையும் பெற்றோர் தான் கற்பிப்பார்கள். ஆனால், உடற்பயிற்சி விசயத்தில் அது தலைகீழாக உள்ளது. இப்போது இளைஞர்கள் முன்முயற்சி எடுத்து வருகிறார்கள், பெற்றோரை உடற்பயிற்சி செய்ய, விளையாட ஊக்குவிக்கிறார்கள்.
நண்பர்களே,
मन चंगा तो कठौती में गंगा। இந்த செய்தி ஆன்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முக்கியமானது மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்க்கையில் ஆழமான தாக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நமது மன ஆரோக்கியமும் மிக முக்கியமானது. மனம் ஆரோக்கியமாக இருக்கும் போது மட்டுமே, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இப்போதெல்லாம் இணைந்து கொள்ளும் வழிகளில் பற்றாக்குறை இல்லை, மக்களுடன், சமூகத்துடன், நாட்டோடு, இணைக்கவும் இணையவும் ஊடகங்களில், நிறைய வாய்ப்புகள் உள்ளன. பல எடுத்துக்காட்டுகள் நம்மைச் சுற்றி காணப்படுகின்றன. இன்று ஏழு பெரிய ஆளுமைகளிடம் நாம் பெற்ற உத்வேகம் என்னவென்றால், நம்முடைய ஆர்வத்திற்கு ஏற்ப ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை தவறாமல் செய்வதுதான்.
நண்பர்களே,
உடல்தகுதி இந்தியா இயக்கத்தில் நாட்டு மக்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன், நாங்கள் தொடர்ந்து மக்களை ஒன்றாக இணைப்போம். 'ஃபிட் இந்தியா இயக்கம்' உண்மையில் 'ஹிட் இந்தியா இயக்கம்'. எனவே, இந்தியா எவ்வளவு உடல்தகுதியுடைய மக்களுடன் இருக்கிறதோ, அவ்வளவு வெற்றி பெறும். இதில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நாட்டிற்கு எப்போதும் உதவும்.
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி, இன்று உடல்தகுதி இந்தியா இயக்கத்திற்கு புதிய ஆற்றலைக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன், மிக்க நன்றி!