வணக்கம்!
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பிகார் ஆளுநர் திரு ஃபகு சவுகான் அவர்களே, முதலமைச்சர் திரு நிதீஷ் குமார் அவர்களே, சட்டமன்ற சபாநாயகர் திரு விஜய் சின்ஹா அவர்களே, சட்ட மேலவைத் தலைவர் திரு அவதேஷ் நரைன் சிங் அவர்களே, துணை முதலமைச்சர் திருமதி ரேணு தேவி அவர்களே, தார்கிஷோர் பிரசாத் அவர்களே, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு தேஜஸ்வி யாதவ் அவர்களே, அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
பிகார் சட்டமன்றத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இம்மாநில மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். பிகார் சட்டமன்ற வளாகத்திற்கு வருகை தரும் முதல் பிரதமர் என்ற பெருமையை இன்று நான் பெற்றுள்ளேன். பிகார் சட்டமன்றம், தனக்கென்று ஓர் வரலாறை கொண்டுள்ளது. இந்த சட்டமன்றக் கட்டிடத்தில் ஏராளமான முக்கிய மற்றும் துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விடுதலைக்குப் பிறகு, இந்த சட்டமன்றத்தில் ஜமீன்தார் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஜனநாயகம் மற்றும் சமூக வாழ்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சம பங்களிப்பு மற்றும் சம உரிமைக்காக ஒருவர் எவ்வாறு பணியாற்றுவது என்பதற்கு இந்த சட்டமன்றம் ஓர் உதாரணம்.
நண்பர்களே,
இந்தியாவில் உள்ள ஜனநாயகத்தின் கருத்துரு, நமது நாடு மற்றும் அதன் கலாச்சாரத்தை போன்று மிகவும் பழமையானது. இந்தியாவில், ஜனநாயகம் என்பது சமத்துவத்திற்கு இணையாக கருதப்படுவதால், இங்கு ஆயிரம் ஆண்டுகளாக ஜனநாயகம் என்ற சிந்தனை தழைத்தோங்குகிறது.
உலகிலேயே, 'ஜனநாயகத்தின் அன்னையாக' இந்தியா விளங்குகிறது. நாமும், பிகார் மக்களும், இந்தக் கூற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும். பிகார் மாநிலத்தின் ஒளிமயமான பாரம்பரியமும் பாளி மொழியில் உள்ள வரலாற்று ஆவணங்களும் இதற்கு வாழும் உதாரணங்களாக உள்ளன.
காலனிய ஆட்சி காலத்தில் கூட ஜனநாயக மாண்புகளை விட்டுக் கொடுக்காத பிகாரின் உணர்வோடு இந்தக் கட்டிடத்தின் வரலாறு சம்பந்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகத்தை ஒடுக்க நினைக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையாது என்பதை அவசர காலத்தின்போது பிகார் உணர்த்தியுள்ளது. எனவே, பிகார் இன்னும் வளம் பெற்றால், இந்தியாவின் ஜனநாயக சக்தியும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன். பிகார் மாநிலம் முன்னேறும் போது, பொன்னான கடந்த காலங்களை மீண்டும் கொண்டு வரும் வகையில் வளர்ச்சி மற்றும் வெற்றியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்களித்த மாநில அரசு, சபாநாயகர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!