வாழ்த்துக்கள்,
நமது நாடான இந்தியா, துறவிகள், ரிஷிகள், ஆச்சார்யாக்களின் ஆயிரக்கணக்கான வருட பாரம்பரியத்தை கொண்டதாகும். ஆச்சார்யா மகாஸ்ரமன் ஏழு ஆண்டுகளில் 18 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரையை நிறைவு செய்துள்ளார். 3 நாடுகளை இதன் மூலம் அவர் கடந்துள்ளார். இதன் மூலம் ஒரே சிந்தனை, ஒரே ஊக்கம் என்ற குறிக்கோளுடன் நாட்டின் 20 மாநிலங்களை அவர் கடந்தார். எங்கெல்லாம் வன்முறை இல்லையோ அங்கெல்லாம் ஒற்றுமை உள்ளது. ஒற்றுமை உள்ள இடத்தில் ஒருங்கிணைப்பு உள்ளது. ஒருங்கிணைப்பு உள்ள இடத்தில் சிறந்த தருணம் அமைகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மந்திரத்தை நீங்கள் ஆன்மிக உறுதிமொழி வடிவில் பரப்பி உள்ளதாக நான் நம்புகிறேன். இந்த பயணத்தை நிறைவு செய்துள்ள ஆச்சார்யா மகாஸ்ரமனக்கும், அவரை பின்பற்றுபவர்களுக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த மகாஸ்ரமன் அவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு செங்கோட்டையில் தொடங்கிய பாதயாத்திரையின் போதுதான் நானும் இந்தியாவின் பிரதமர் என்ற பயணத்தையும், மக்கள் சேவை மற்றும் நலன் என்ற பயணத்தையும் அதே ஆண்டில் தொடங்கியது தற்செயலாக அமைந்தது. விடுதலைப் பெருவிழாவுக்கு இடையே சமூகத்திற்கான கடமைக்காக நாடு அழைக்கிறது, சுயநலத்திற்கு அப்பால் நாடுமுன்னேறுகிறது.
நண்பர்களே,
அனைவருடனும் அனைவரின் வளர்ச்சி, நம்பிக்கை, முயற்சி என்ற சிந்தனையுடன் நாடு சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் அரசு, சமூகம் மற்றும் ஆன்மிக அதிகாரம் போன்றவை சமஅளவு பங்கை கொண்டுள்ளன. ஆன்மிக தலைவர்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு நாட்டின் உறுதிமொழிகளை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டுமாறு நான் கேட்டு கொள்கிறேன்.