முதலாவதாக, பேரிடர் மீட்புப்படை மற்றும் பேரிடர் மேலாண்மையில் தொடர்புடைய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ஏனென்றால், பல நேரங்களில் உங்கள் சொந்த உயிரைக் கூட பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் அற்புதமான வேலையைச் செய்கிறீர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது இரு மாநில படைகளுக்கு இன்று வழங்கப்பட்டது. புயல், சுனாமி போன்ற பல்வேறு பேரிடர்களின் போது ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல், மிசோரமின் லுங்கிலி தீயணைப்பு நிலையம் காட்டுத் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் அயராது உழைத்தது.
நண்பர்களே,
இந்த அமர்வின் கருப்பொருள் - "மாறும் காலநிலைக்கு ஏற்ப உள்ளூர் மீள்திறனை உருவாக்குதல்". இந்தியாவில் பேரிடர் மேலாண்மை தொடர்பான அமைப்பு எப்போதும் உள்ளூரிலேயே உள்ளது; தீர்வுகள் உள்ளூரிலேயே உள்ளன. எதிர்காலத் தொழில்நுட்பத்தை உள்ளூர் கட்டுமானத்துடன் இணைக்கும்போது, பேரிடர்களை எதிர்த்து நம்மால் சிறப்பாகச் செயல்பட முடியும்.
நண்பர்களே,
பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துதல் என்பது பேரழிவுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்காலத்தில் அது எவ்வாறு நிகழலாம் என்பதைப் புரிந்துகொள்வதோடு, பேரழிவுக்கான வாய்ப்பைக் குறைக்கும் அமைப்பை உருவாக்குவதாகும்.
நண்பர்களே,
நாடு சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு கடந்தும், பேரிடர் மேலாண்மை தொடர்பான சட்டம் இல்லை. 2001-ல் கட்ச் நிலநடுக்கத்திற்குப் பிறகு, மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் குஜராத். இச்சட்டத்தின் அடிப்படையில், 2005ல், பேரிடர் மேலாண்மை சட்டத்தையும், மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்குப் பிறகுதான் இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது.
நண்பர்களே,
இன்று உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட பேரிடர்களைத் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணியில் இணைந்துள்ளன. பாரம்பரியமும் தொழில்நுட்பமும் நமது பலம்.
பருவமழைக்கு முன் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சரியான நேரம் என்று நான் உணர்கிறேன். இந்த நடைமுறையை இப்போதே நாம் தொடங்கினால், பருவமழைக்கு முன்பே முடிக்க முடியும். பேரிடர்களினால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க தயாராக இருக்க முடியும்.
நன்றி