எனது நண்பர் பிரதமர் கிஷிடா அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே,
குஜராத் நிதி அமைச்சர் திரு கனுபாய் தேசாய் அவர்களே,
இந்தியா-ஜப்பான் வர்த்தகத் தலைவர்கள் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களே,
உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
அனைவருக்கும் வணக்கம்!
ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் கிஷிடா அவர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் இனிய வரவேற்பு
இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்குப்பின்
இந்தியா - ஜப்பான் இடையே
தொடர்ச்சியாக உச்சிமாநாடு நிலையிலான கூட்டங்களை நடத்த முடிந்துள்ளதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியா -ஜப்பான் இடையே சிறப்பு உத்திகள் வகுத்தல் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பின் வலுவான தூணாக நமது பொருளாதார உறவுகள் இருக்கின்றன.
கொவிடுக்குப் பிந்தைய காலத்தில் பொருளாதார மீட்சிக்கும் பொருளாதாரப் பாதுகாப்புக்கும் இந்தியா-ஜப்பான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கு மட்டுமின்றி இந்தப் பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் நம்பிக்கையையும் உறுதியையும் தந்துள்ளன.
சீர்திருத்தங்களும் இந்தியாவில் மிகவும் பரவலாக மேற்கொள்ளப்படுகின்ற உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்களும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளன.
பிரதமர் அவர்களே
1.8 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள 9000க்கும் அதிகமான திட்டங்கள் இந்தியாவின் தேசிய கட்டமைப்பு திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இவை ஒத்துழைப்புக்குப் பல வாய்ப்புகளை வழங்கும்.
எங்கள் முயற்சிகளில் ஜப்பானிய நிறுவனங்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும் என்று நான் நம்புகிறேன். இதற்காக இந்தியாவில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதற்கும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
நண்பர்களே,
முன்னேற்றம், வளம், ஒத்துழைப்பு ஆகியவை இந்தியா-ஜப்பான் உறவுகளில் மையமானவை. இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை முன்னெடுத்து செல்வதற்கு இந்தியா-ஜப்பான் வர்த்தகத் தலைவர்கள் அமைப்பு முக்கியமான பங்களிப்பை செய்திருக்கிறது. இதற்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
உங்களுக்கு மிகுந்த நன்றி