வணக்கம்!
அன்னபூர்ண அன்னையே போற்றி
அன்னபூர்ண அன்னையே போற்றி போற்றி
குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவும், குஜராத் பாஜக தலைவருமான திரு சிஆர் பாட்டீல் அவர்களே, அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் தலைவரும் நாடாளுமன்றத்தில் எனது சகாவுமான திரு நர்ஹரி அமீன் அவர்களே, மக்கள் பிரதிநிதிகளே, சமூகத்தின் மூத்த உறுப்பினர்களே, சகோதரிகள் மற்றும் சகோதரர்களே...
அன்னபூரணியின் இந்த புனித வாசஸ்தலத்தில் நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் சமூகப் பொறுப்புகள் தொடர்பான முக்கியமான சடங்குகளில் ஒரு பகுதியாக இருக்க எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. அன்னையின் அருளால் ஒவ்வொரு முறையும் உங்களிடையே இருக்க வாய்ப்பு கிடைக்கிறது. இன்று, ஸ்ரீ அன்னபூர்ணதாம் அறக்கட்டளையின் அதாலஜ் குமார் விடுதி மற்றும் கல்வி வளாகம் திறப்பு விழாவுடன், ஜன்சஹாயக் அறக்கட்டளையின் ஹிரமணி ஆரோக்கிய தாம் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத் துறையில் சமூகத்திற்கு பங்களிப்பது குஜராத்தின் குணாதிசயமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு சமூகமும் அதன் திறனுக்கு ஏற்ப சமூகப் பொறுப்பை நிறைவேற்றுகிறது. படிதார் சமூகமும் இதில் பின்தங்கி இருக்கவில்லை. நீங்கள் அனைவரும் இந்த சேவை வேள்வியில் அதிக திறன் கொண்டவர்களாக திகழவும், அதிக அர்ப்பணிப்புடனும், சேவையின் உயரங்களைத் தொடவும் அன்னபூரணி அம்மா ஆசீர்வதிக்கட்டும்! உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!
நண்பர்களே, செழிப்பு மற்றும் செல்வத்தின் தெய்வமான அன்னபூர்ணா மீது நாம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். படிதார் சமூகம் அன்னை பூமியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அன்னபூரணி மாதா சிலையை கனடாவில் இருந்து சில மாதங்களுக்கு முன் காசிக்கு கொண்டு வந்தோம். காசியில் இருந்து திருடப்பட்ட இந்த சிலை பல ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது. கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் இதுபோன்ற டஜன் கணக்கான நமது கலாச்சாரத்தின் சின்னங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
நண்பர்களே, நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் உணவு, சுகாதாரம் மற்றும் கல்விக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று அன்னை அன்னபூர்ணாவின் இருப்பிடத்தில் இவற்றை நீங்கள் பெருக்கி உள்ளீர்கள். இங்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய வசதிகள் மற்றும் கட்டப்படவிருக்கும் ஆரோக்யா தாம், குஜராத்தின் சாமானியர்களுக்கும் நோயாளிகளுக்கும் பெரிதும் பயனளிக்கும்.
குறிப்பாக, ஒரே நேரத்தில் பலருக்கு டயாலிசிஸ் செய்யும் வசதி மற்றும் 24 மணி நேர ரத்த விநியோகம் ஆகியவை மாவட்ட மருத்துவமனைகளில் மத்திய அரசு தொடங்கியுள்ள இலவச டயாலிசிஸ் இயக்கத்திற்கு மேலும் வலு சேர்க்கும். இந்த அனைத்து மனிதாபிமான முயற்சிகளுக்காகவும், சேவையில் உங்கள் அர்ப்பணிப்பிற்காகவும் நீங்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
பூபேந்திரபாயின் தலைமையில் வடக்கு குஜராத் முழுவதும் சுற்றுலாவின் சாத்தியங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. எனவே, வளர்ச்சியடைந்து வரும் இடங்களில் தூய்மையை உறுதி செய்வது நமது பொறுப்பாகும்.
அன்னபூர்ணாவின் இருப்பிடமான குஜராத்தில் எப்படி ஊட்டச்சத்து குறைபாடு இருக்க முடியும்? ஊட்டச்சத்து குறைபாட்டை விட ஊட்டச்சத்து பற்றிய அறியாமையே உண்மையான காரணம். இந்த அறியாமையின் விளைவாக, உடலுக்கு என்ன தேவை, என்ன சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லை. குழந்தைகள் தாயின் பாலில் பலம் பெறுகிறார்கள், அறியாமையால் நாம் அதில் இருந்து விலகினால், குழந்தைகளை வலிமையாக்க முடியாது. அன்னபூரணி மாதாவுடன் நாம் இருக்கும்போது, அவரை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
நவீன தொழில்துறை 4.0 மற்றும் தொழில்நுட்பத் துறையில் திறன் மேம்பாட்டிற்கு நமது இளைஞர்கள் தயாராக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
குஜராத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறோம். கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு நல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது ஆன்மிகத்தை நோக்கியும் பயணிக்கிறோம். திரிவேணி சங்கமம் பெற்ற பாக்கியசாலிகள்னாம். உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்.
மிக்க நன்றி!