Published By : Admin |
February 23, 2015 | 16:10 IST
Share
उपस्थित सभी महानुभाव,
मैं विदेश विभाग को बधाई देता हूं कि उन्होंने इस प्रकार के कार्यक्रम की रचना की। वैश्विक संबंध अब सिर्फ एक ट्रैक पर नहीं होते हैं। वैश्विक संबंध में धीरे धीरे Soft Power मुख्य धारा बन गया है और Soft Power के द्वारा ही वैश्विक संबंधों को उर्जा मिलती है, ताकत मिलती है। भारत में भी अपने वैश्विक संबंधों को diplomatic जो चैनल हैं, उसके सिवाय, जो हमें विरासत में मिली हुई शक्ति है, उसका भी भरपूर उपयोग करना चाहिए। ये संबंध बहुत लंबे अर्से तक परिणामकारी होते हैं।
विश्व में जहां जहां भगवान बुद्ध की presence है, सामूहिक रूप से वे देश हमसे जुड़े रहें तो हमारी कितनी बड़ी ताकत बन सकती है। विश्व में जहां जहां राम और रामायण से संपर्क रहा है, जो लोग गर्व करते हैं, उसी एक तंतु के साथ जोड़ करके आज उसको अगर संबंधों को विकसित किया जाए, तो संबंध अपनेपन वाले बन जाते हैं। वे Diplomatic Relation से भी अधिक ताकतवर बन जाते हैं, एक next level उसका प्राप्त होता है। उस अर्थ में यह प्रयास वैश्विक संबंधों को और अधिक गहरे करने के लिए, वैश्विक संबंधों को और अधिक व्यापक करने के लिए और वैश्विक संबंधों में एक अपनेपन के commitment के element को जोड़ने के लिए बहुत ही उपकारक होंगे, ऐसा मैं मानता हूं। इसको हमें अलग अलग तरीके से बढ़ाना भी चाहिए। ये जो पहलू है, उसमें भारत की एक विशिष्ट शक्ति है, उसकी भी दुनिया को पहचान होती है, कि हमारे पास विश्व को देने के लिए क्या कुछ नहीं है।
जब रामायण सीरियल चलता था, हमें मालूम है, हमारे देश में कर्फ्यू जैसा माहौल हो जाता था। कोई कल्पना कर सकता है क्या! कि 20वीं सदी उतरार्ध में देश की युवा पीढ़ी को भी रामायण इतना आकर्षित कर सकती है..और सहस्रों वर्ष से न उसको समय की सीमा रही, न उसे भौगोलिक सीमा रही। दुनिया के कितने भूभाग में ये बात पहुंची और जहां पहुंची वहां अपनापन बना लिया। ..और वो समय था, जैसा सुषमा जी ने कहा संबंधों का रूप क्या हो..जब वो रामायण सीरियल चलता था तो घर में भी, परिवार में संबोधित करने की स्टाइल बदलने लगी थी। भाईश्री, तातश्री, मातृश्री, ऐसे ही बालक भी घर में बोलने लगे थे, मनोरंजन के लिए करते होंगे, लेकिन उसमें एक मेसेज था। एक नई, हमारे शास्त्रों की विरासत..संबधों और संबोधन की परंपरा क्या हो, लोग सीखने लगे थे। आज भी यहां की सांस्कृति विरासत कैसी है।
आज जब हम खबरें पढ़ते हैं, महिलाओं पर अत्याचार की, कितनी पीड़ा होती है, लेकिन रामायण का कालखंड ऐसा था कि एक नारी पर अत्याचार देखकर जटायु बलि चढ़ने के लिए तैयार हो गया। जटायु निशस्त्र था, लेकिन फिर भी, इतनी बड़ी शक्ति के साथ लड़ाई लड़ रहा था, एक नारी के सम्मान और गौरव के लिए। क्या जटायु हमारी प्रेरणा नहीं बन सकता है? अभय और निर्भय का संदेश जटायु से ज्यादा कौन दे सकता है? और इस अर्थ में कहें तो रामायण की बातें..जिन विषयों की उसमें चर्चा है, वो आज भी कितनी relevant है।
मैं देख रहा था, रामायण में कुछ बातें जो कही गई हैं..आज हम लोग infant mortality, स्वाइन फ्लू ये सब चर्चा करते हैं..माता मृत्यु दर, शिशु मृत्यु दर..रामराज्य की जो कल्पना की गई है तो रामायण में कहा गया है-
मैं समझता हूं कि हेल्थ के लिए..इससे बड़ा हैल्थ सेक्टर के लिए कोई मेसेज नहीं हो सकता है। और कहा है- non dies prematurely, all were physically healthy and strong. अब से उस समय रामराज्य की कल्पना में हैल्थ सेक्टर के लिए कहा गया है।
सामाजिक संबंध कैसे होने चाहिएं। आज social harmony की चर्चा हो रही है। उस समय भी संदेश था –
सब नर करहि परस्पर प्रीति। चलहि स्वधर्म निरति श्रुतनीति।।
There is social harmony and environment of mutual trust and love among all; are fulfilling their Dharma, their responsibility.
आज जिन विषयों के साथ हम कभी कभार सोचते हैं कि भई हम कैसे रास्ते खोजें, रामराज्य की कल्पना में, रामायण की कल्पना में इन विषयों को बहुत अच्छे ढंग से कहा गया है.....नागरिक धर्म के लिए कहा गया है-
सब उदार सब परोउपकारी। विप्र चरण सेवक नर नारी।।
All are generous and giving, all men and women are in service of others.
मैं समझता हूं जिस रामराज्य की कल्पना में, जिस रामायण की चैपाईयों में आज भी हम हमारी समस्याओं के समाधान खोज सकते हैं। हमारे निजी जीवन और सार्वजनिक जीवन के माध्यम से, हम समाज में किस प्रकार से काम कर सकते हैं, इसका संदेश-
बैर न कर कहु सन कोई। राम प्रताप विसमता खोई।।
By the grace of Ram all disparity, differences melt down and non engage in enmity.
हर विषय पर हमें वहां संदेश मिलता है। मैं मानता हूं कि ये जो पांच दिवस का उत्सव यहां होने वाला है, विश्व के अलग अलग देशों में कालक्रम से अलग अलग वो परंपरा विकसित हुई है। मनोरंजन के साथ संस्कार की भी इसमें प्रक्रिया है। हमारी महान विरासत के लिए गर्व करने की भी प्रक्रिया है।
ये अच्छा है....मेरी एक सोच रही है कि विदेश विभाग, ये दिल्ली से जुड़ गया तो दुनिया जुड़ गई, ये सोच बदलनी होगी। ये देश बहुत बड़ा विशाल है। हिंदुस्तान हर एक राज्य का भी एक वैश्विक परिवेश व उसका एक स्थान होना चाहिए, पहचान होनी चाहिए। इस कार्यक्रम को कई नगरों में ले जाया जा रहा है। वो एक शुभ शुरूआत है। ये दुनिया हमारे देश के अलग अलग कोने को भी जाने। हमारी अलग अलग परंपराओं को भी जानें। हमारे अलग अलग जगहों पर रहने वाले लोग दिल्ली के बाहर भी दुनिया को जानने समझने का प्रयास करें। एक विशाल भारत का रूप विश्व के साथ जुड़ता रहे, उसका भी प्रयास है।
मैं फिर एक बार विदेश विभाग को और लोकेश जी को हृदय से बहुत बहुत अभिनंदन करता हूं।
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'ஓராண்டு நிறைவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
December 17, 2024
Share
PM inaugurates and lays the Foundation stone for 24 projects related to Energy, Road, Railways and Water worth over Rs 46,300 crores in Rajasthan
The Governments at the Center and State are becoming a symbol of Good Governance today: PM
In these 10 years we have given lot of emphasis in providing facilities to the people of the country, on reducing difficulties from their life: PM
We believe in cooperation, not opposition, in providing solutions: PM
I am seeing the day when there will be no shortage of water in Rajasthan, there will be enough water for development in Rajasthan: PM
Conserving water resources, utilizing every drop of water is not the responsibility of government alone, It is the responsibility of entire society: PM
There is immense potential for solar energy in Rajasthan, it can become the leading state of the country in this sector: PM
பாரத் மாதா கி - ஜே!
பாரத் மாதா கி - ஜே!
கோவிந்த் நகரில் நான் கோவிந்த் தேவ் அவர்களுக்கு வணக்கங்களைச் செலுத்துகிறேன். அனைவருக்கும் என் வணக்கங்கள்!
ராஜஸ்தான் ஆளுநர் திரு. ஹரிபாவ் பகடே அவர்களே, ராஜஸ்தானின் பிரபலமான முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய முதலமைச்சர் மோகன் யாதவ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திரு. சி.ஆர். பாட்டீல் அவர்களே, பகீரத் சவுத்ரி அவர்களே, ராஜஸ்தான் துணை முதலமைச்சர்கள் தியா குமாரி அவர்களே, பிரேம்சந்த் பைர்வா அவர்களே, இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, ராஜஸ்தானின் சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, ராஜஸ்தானின் எனதருமை சகோதர, சகோதரிகளே. ராஜஸ்தான் மாநிலத்தின் ஆயிரக்கணக்கான பஞ்சாயத்துகளில் குழுமியிருக்கும் எனது சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் எனது வணக்கம்.
வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் மக்களுக்கும், ராஜஸ்தான் பிஜேபி அரசுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒரு வருட பயணத்திற்குப் பிறகு, உங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க நீங்கள் பெரும் எண்ணிக்கையில் வருவதைப் பார்த்தேன். , திறந்த ஜீப்பில் இங்கு வந்தபோது, பந்தலில் இருந்ததை விட மூன்று மடங்கு மக்கள் வெளியே இருந்ததை நான் கவனித்தேன். இன்று உங்கள் ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். கடந்த ஓராண்டாக பஜன்லால் அவர்களும் அவரது குழுவினரும் ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தையும், திசையையும் வழங்க கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்த முதல் ஆண்டு, ஒரு வகையில், வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து தந்துள்ளது. எனவே, இன்றைய கொண்டாட்டமானது அரசு ஓராண்டை நிறைவு செய்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை; இது ராஜஸ்தானின் பிரகாசம் மற்ற பகுதிகளுக்கும் பரவும் கொண்டாட்டமாகவும் அதன் வளர்ச்சியின் கொண்டாட்டமாகவும் உள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நான் ராஜஸ்தான் வந்திருந்தேன். நாட்டிலிருந்தும் உலகெங்கிலும் இருந்தும் முக்கிய முதலீட்டாளர்கள் இங்கு கூடியிருந்தனர். இன்று, 45-50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டு, அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானின் தண்ணீர் சவால்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானை நாட்டில் சிறப்பாக இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மாற்றும். இது ராஜஸ்தானில் முதலீட்டை அதிகரிக்கும் மற்றும் எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ராஜஸ்தானின் சுற்றுலா, மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் எனது இளம் நண்பர்கள் இந்தத் திட்டங்களால் பெரிதும் பயனடைவார்கள்.
நண்பர்களே,
இன்று, பிஜேபி-யின் இரட்டை என்ஜின் அரசுகள் நல்லாட்சியின் அடையாளமாக மாறியுள்ளன. பிஜேபி எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அதை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகளை மேற்கொள்கிறது. இன்று, நாடு முழுவதும் உள்ள மக்கள், பிஜேபி-யின் நல்லாட்சிக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்கள். அதனால்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பிஜேபி-க்கு மக்களின்அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசத்திற்கு சேவை செய்ய பிஜேபி-க்கு நாடு வாய்ப்பளித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இது பாரதத்தில் நடந்ததில்லை. 60 ஆண்டுகளுக்குப் பிறகு பாரத மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்திய அரசை அமைத்துள்ளனர். நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவில் பிஜேபி தொடர்ந்து இரண்டாவது முறையாக அரசை அமைத்தது. தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், மகாராஷ்டிராவில் இது எங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது பெரும்பான்மையாகும். மகாராஷ்டிராவில் முன்பை விட பிஜேபி அதிக இடங்களை வென்றுள்ளது. அதற்கு முன்னர், ஹரியானாவில் பிஜேபிவும் தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்னும் கூடுதலான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தது. சமீபத்தில், ராஜஸ்தான் இடைத்தேர்தல்களில், மக்கள் பிஜேபி-க்கு எவ்வாறு பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர் என்பதை நாம் கண்டோம். பிஜேபி-யின் பணிகள் மீதும், பிஜேபி தொண்டர்களின் கடின உழைப்பின் மீதும் பொதுமக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.
நண்பர்களே,
பிஜேபி நீண்ட காலமாக சேவை செய்யும் பாக்கியம் பெற்ற மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது . பைரோன் சிங் ஷெகாவத் ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். அவருக்குப் பிறகு, வசுந்தரா ராஜே அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, நல்லாட்சியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றார். இப்போது, பஜன்லால் அவர்களின் அரசு நல்லாட்சியின் இந்த பாரம்பரியத்தை மேலும் வளப்படுத்த விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறது. இந்த உறுதிப்பாட்டின் முத்திரை கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தெளிவாகத் தெரிகிறது.
நண்பர்களே,
கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பணிகள் இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழைக் குடும்பங்கள், தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள், தொழிலாளர்கள், விஸ்வகர்மா தோழர்கள், நாடோடிக் குடும்பங்களுக்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முந்தைய காங்கிரஸ் அரசு ராஜஸ்தான் இளைஞர்களுக்கு எதிராக கடுமையான அநீதிகளை இழைத்து இருந்தது. வினாத்தாள் கசிவு மற்றும் ஆட்சேர்ப்பு மோசடிகள் ராஜஸ்தானின் அடையாளமாக மாறிவிட்டன. பிஜேபி அரசு அதிகாரத்திற்கு வந்தவுடன், அது விசாரணைகளைத் தொடங்கியது, இது பலரை கைது செய்ய வழிவகுத்தது. அதுமட்டுமின்றி, ஓராண்டுக்குள் ஆயிரக்கணக்கான பணியிடங்களை பிஜேபி அரசு அறிவித்துள்ளது. தேர்வுகள் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டன, நியமனங்கள் நியாயமாக நடந்தன. முந்தைய ஆட்சியின் போது, ராஜஸ்தான் மக்கள் மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு பெட்ரோல், டீசலை வாங்க வேண்டியிருந்தது. ஆனால் பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தவுடன், ராஜஸ்தானின் எனது சகோதர சகோதரிகளுக்கு நிவாரணம் கிடைத்தது. பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், மத்திய அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணத்தை மாற்றுகிறது. தற்போது, ராஜஸ்தானில் இரட்டை என்ஜின் பிஜேபி அரசு ஆட்சி அமைத்துள்ளதால், விவசாயிகளுக்கு ஆதரவாக கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. இரட்டை என்ஜின் அரசு உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களையும் களத்தில் விரைவாக செயல்படுத்தி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை பிஜேபி அதிவேகமாக நிறைவேற்றி வருகிறது. இந்த முன்னேற்றச் சங்கிலியில் இன்றைய நிகழ்ச்சி ஒரு முக்கியமான கண்ணியாகும்.
நண்பர்களே,
ராஜஸ்தான் மக்களின் ஆசீர்வாதத்துடன், பிஜேபி அரசு கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில், மக்களுக்கு வசதிகளை வழங்குவதிலும், அவர்களின் வாழ்க்கையில் உள்ள சிரமங்களைக் குறைப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். சுதந்திரத்திற்குப் பிந்தைய 5-6 தசாப்தங்களில் காங்கிரஸ் செய்ததை விட அதிகமாக 10 ஆண்டுகளில் நாங்கள் சாதித்துள்ளோம். உதாரணத்திற்கு ராஜஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள் – தண்ணீரின் முக்கியத்துவத்தை இந்த மாநில மக்களை விட வேறு யார் நன்றாக புரிந்து கொள்ள முடியும்? இங்குள்ள பல பகுதிகள் கடுமையான வறட்சியை எதிர்கொள்கின்றன.மற்ற பகுதிகளில், நமது நதிகளிலிருந்து நீர் பயன்படுத்தப்படாமல் கடலில் பாய்கிறது. அதனால்தான், அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சியின் போது, நதிகளை இணைக்கும் யோசனையை அவர் தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்டார். இதற்காக ஒரு சிறப்புக் குழுவையும் அவர் அமைத்தார். இலக்கு எளிமையானது: கடலில் பாயும் ஆறுகளிலிருந்து அதிகப்படியான நீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்றுவது. இதன் மூலம் வெள்ளப் பிரச்சனையும், வறட்சியும் ஒரே நேரத்தில் தீரும். உச்ச நீதிமன்றமும் இந்த முயற்சிக்கு பலமுறை ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் தண்ணீர் பிரச்சனையை குறைக்க காங்கிரஸ் ஒருபோதும் விரும்பியதில்லை. மாறாக, நமது நதிகளில் இருந்து வரும் நீர் எல்லைகளைக் கடந்து தொடர்ந்து பாய்கிறது. ஆனால், நமது விவசாயிகள் பயனடையவில்லை. தீர்வுகளைக் காண்பதற்குப் பதிலாக, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறை காங்கிரஸ் தொடர்ந்து தூண்டி விட்டது. இந்தத் தவறான வழிகாட்டுதல் கொள்கையால் ராஜஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், விவசாயிகள் அதன் சுமையைத் தாங்கியுள்ளனர்.
நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, சர்தார் சரோவர் அணை கட்டி முடிக்கப்பட்டது, குஜராத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அன்னை நர்மதாவின் நீரை கொண்டு செல்வதற்கான ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்பட்டது. கட்ச் எல்லை வரை தண்ணீரை எடுத்துச் சென்றோம். இருப்பினும், அந்த நேரத்தில், காங்கிரசும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த முயற்சியைத் தடுக்க அனைத்து வகையான தந்திரோபாயங்களையும் கையாண்டன. ஆனால் தண்ணீரின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொண்டு இருந்தோம்.
நண்பர்களே,
தண்ணீரின் முக்கியத்துவத்தை நான் உண்மையிலேயே புரிந்துகொண்டு இருந்ததால், எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சகித்துக்கொண்டு, தண்ணீரை வழங்க அயராது உழைத்தேன். நர்மதை நீரின் பயன் குஜராத்துக்கு மட்டுமல்ல; அது ராஜஸ்தானுக்கும்தான். பதற்றமோ, தடைகளோ, கோரிக்கை மனுக்களோ, போராட்டங்களோ இல்லை. அணை கட்டும் பணி முடிந்தவுடன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் வழங்கத் தொடங்கினோம். நர்மதா நீர் ராஜஸ்தானை அடைந்த நாளை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். ராஜஸ்தான் மக்களிடையே மிகுந்த உற்சாகம், இருந்தது. சில நாட்கள் கழித்து நான் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தபோது, பைரோன்சிங் ஷெகாவத், ஜஸ்வந்த் சிங் ஆகியோர் குஜராத்திற்கு வந்திருப்பதாகவும், என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் செய்தி வந்தது. அவர்கள் ஏன் வந்தார்கள், என்ன விஷயம் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் என் அலுவலகத்திற்கு வந்தார்கள், நான் மரியாதையுடன் அவர்களின் வருகைக்கான காரணத்தைக் கேட்டேன். அவர்கள், "குறிப்பிட்ட வேலை எதுவும் இல்லை, நாங்கள் உங்களைச் சந்திக்க வந்தோம்" என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் எனது மூத்த தலைவர்கள். நம்மில் பலர் பைரோன் சிங் அவர்களின் வழிகாட்டும் கரத்தைப் பிடித்து வளர்ந்தவர்கள்.. அவர்கள் என் முன் அமர்ந்திருந்தார்கள், எந்தக் கோரிக்கைக்காகவும் அல்ல, தங்கள் மரியாதையையும் நன்றியையும் தெரிவிப்பதற்காக. நான் சற்று ஆச்சரியப்பட்டேன், ஆனால் அவர்கள் பேசும்போது, அவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர், கண்களில் கண்ணீருடன். அவர்கள், "மோடி அவர்களே, தண்ணீர் கொடுப்பது என்றால் என்ன தெரியுமா? நர்மதாவின் நீர் ராஜஸ்தானை சென்றடைவதை நீங்கள் எளிமையாகவும், எளிதாகவும் உறுதி செய்தது, எங்கள் இதயங்களைத் தொட்டுள்ளது. கோடிக்கணக்கான ராஜஸ்தானியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே உங்களை நேரில் சந்திக்க வந்தோம் என்றனர்.
நண்பர்களே
நீரின் அபரிமிதமான ஆற்றலை நான் அனுபவித்திருக்கிறேன். இன்று நர்மதா அன்னையின் நீர் ஜலோர், பார்மர், சுரு, ஜுன்ஜுனு, ஜோத்பூர், நாகௌர், ஹனுமான்கர் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சென்றடைகிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
குஜராத்தில் நதிகள் இணைப்பின் சக்தியை நான் நேரடியாக அனுபவித்துள்ளேன். நர்மதாவிலிருந்து வரும் நீர் குஜராத்தில் உள்ள பல்வேறு நதிகளுடன் இணைக்கப்பட்டது. நீங்கள் எப்போதாவது அகமதாபாத் சென்றால், சபர்மதி நதியைப் பார்ப்பீர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குழந்தையை சபர்மதி பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னால், அதன் கரையில் சர்க்கஸ் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அங்கு பெரிய சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் எழுதியிருப்பார்கள். அதன் வறண்ட படுகையில் கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு வேடிக்கையாக இருந்தது என்பதையும், எப்போதும் தூசியும் மண்ணும் இருப்பதைப் பற்றியும் அவர்கள் பேசுவார்கள். ஏனென்றால் அப்போது சபர்மதியில் தண்ணீர் இல்லை. ஆனால் இன்று, நர்மதாவின் நீர் சபர்மதிக்கு உயிர் கொடுத்துள்ளது, இப்போது அகமதாபாத்தில் ஒரு அழகான நதிக்கரையை நீங்கள் காணலாம். இதுதான் நதிகளை இணைக்கும் சக்தி. ராஜஸ்தானிலும் இதேபோன்ற ஒரு அழகான காட்சியை என் மனதில் கற்பனை செய்ய முடிகிறது.
நண்பர்களே,
ராஜஸ்தானில் இனி தண்ணீர் பற்றாக்குறை இருக்காது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு போதுமான தண்ணீர் இருக்கும் நாளை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். பார்வதி-காளிசிந்த்-சம்பல் திட்டம் ராஜஸ்தானின் 21 மாவட்டங்களுக்கு பாசன நீர் மற்றும் குடிநீர் வழங்கும். இது ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.
நண்பர்களே,
சி.ஆர். பாட்டீல் அவர்களின் தலைமையின் கீழ் ஒரு பெரிய பிரச்சாரம் நடந்து வருகிறது. இது இன்னும் அதிக அளவில் ஊடக கவனத்தைப் பெறவில்லை, ஆனால் அதன் வலிமையை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். பொதுமக்கள் பங்களிப்புடன் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்புக்காக மீள்செறிவூட்டும் கிணறுகள் கட்டப்பட்டு வருகின்றன. இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ராஜஸ்தானில் பொதுமக்களின் பங்களிப்பின் மூலம் தினமும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள இந்திய மாநிலங்களில், கடந்த சில மாதங்களில் சுமார் 3 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. மழைநீரைச் சேமிப்பதற்கான இந்த முயற்சி, வரும் நாட்களில் நமது அன்னை பூமியின் தாகத்தைத் தணிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஒரு சமணத் துறவி இருந்தார் என்று ஞாபகம். அவரது பெயர் புத்தி சாகர் ஜி மகராஜ், அவர் அப்போது ஏதோ எழுதியிருந்தார்னார். ஒருவேளை, அந்த நேரத்தில் யாராவது அவருடைய வார்த்தைகளைப் படித்திருந்தால், அவர்கள் அவற்றை நம்பியிருக்க மாட்டார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியது – "மளிகைக் கடைகளில் குடிநீர் விற்கப்படும் நாள் வரும்". இதை அவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார், இன்று, தண்ணீர் குடிக்க மளிகைக் கடைகளில் பிஸ்லெரி பாட்டில்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது 100 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டு இருக்கிறது.
நண்பர்களே,
இது ஒரு வேதனையான கதை. நம் முன்னோர்கள் நமக்கு ஒரு பெரிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளனர். நமது எதிர்கால சந்ததியினர் தண்ணீர் பற்றாக்குறையால் இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது நமது பொறுப்பு. எமது எதிர்கால சந்ததியினருக்காக செழிப்பு நிறைந்த பூமியை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இன்று, அந்தப் புனிதமான பணியை நிறைவேற்றும் திசையில் பயணிக்கும் மத்தியப் பிரதேச அரசுக்கும், மத்தியப் பிரதேச மக்களுக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்தத் திட்டத்தை எந்த இடையூறும் இல்லாமல் முன்னோக்கி நகர்த்துவதே எங்கள் பணி. எங்கெல்லாம் தேவை ஏற்படுகிறதோ, எந்தப் பகுதியிலிருந்து திட்டம் தொடங்கப்பட்டாலும், அதை ஆதரிக்க மக்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் இந்தத் திட்டங்களை முன்கூட்டியே முடிக்க முடியும். அது ஒட்டுமொத்த ராஜஸ்தானின் தலைவிதியையும் மாற்ற முடியும்.
நண்பர்களே,
உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இந்த உற்சாகத்தையும் ஆற்றலையும் நான் பாராட்டுகிறேன். நண்பர்களே, மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தில் பெண் சக்தியின் வலிமையைக் காண முடிகிறது. கடந்த பத்தாண்டுகளில், நாடு முழுவதும் 10 கோடி சகோதரிகள் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர், இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த கோடிக்கணக்கான சகோதரிகளும் அடங்குவர். இந்த குழுக்களை வலுப்படுத்த, பிஜேபி அரசு அயராது உழைத்துள்ளது. எங்கள் அரசு முதலில் இந்த குழுக்களை வங்கிகளுடன் இணைத்தது. பின்னர் வங்கிகள் வழங்கும் உதவியை 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. அவர்களுக்கு சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம், புதிய சந்தைகளை உருவாக்கியுள்ளோம்.
இன்று, இந்த முயற்சிகளின் விளைவாக, இந்த சுய உதவிக் குழுக்கள் கிராமப்புற பொருளாதாரத்தின் மிகப்பெரிய பலமாக மாறியிருக்கின்றன. நான் இங்கு வரும்போது, வரிசைகள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளால் நிரம்பி வழிந்தன, உற்சாகமும் அதிகமாக இருந்தன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, சுய உதவிக் குழுக்களில் உள்ள மூன்று கோடி சகோதரிகளை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்ற எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் 1.25 கோடி சகோதரிகள் ஏற்கனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதாவது, அவர்கள் இப்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.
நண்பர்களே,
பெண் சக்தியை வலுப்படுத்த பல புதிய திட்டங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். உதாரணமாக, நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டம். இதன் கீழ், ஆயிரக்கணக்கான சகோதரிகளுக்கு ஆளில்லா விமானிகளாக செயல்படபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான குழுக்கள் ஏற்கனவே ட்ரோன்களைப் பெற்றுள்ளன. இந்தப் பெண்கள் ட்ரோன்களை விவசாயத்திற்குப் பயன்படுத்தி அதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர்.. ராஜஸ்தான் அரசும் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நண்பர்களே,
சமீபத்தில், நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்காக மற்றொரு பெரிய திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இதுதான் பீமா சகி திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் காப்பீட்டுத் துறையில் ஈடுபடுத்தப்பட்டு பயிற்சி பெறுவார்கள். ஆரம்ப ஆண்டுகளில், அவர்களின் பணி நிலைப்படும் வரை, அவர்களுக்கு சிறிய அளவில் உதவித்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம், அவர்களுக்கு நிதி உதவியும் தேசத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும். நமது ’வங்கி சகி' பெண்களின் மகத்தான பணிகளை நாம் பார்த்திருக்கிறோம், அவர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வங்கிச் சேவைகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். வங்கிக் கணக்குகளைத் தொடங்குகிறார்கள், மக்களுக்கு வங்கின் கடன் கிடைக்க உதவுகிறார்கள். இப்போது, 'பீமா சகி' திட்டம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் காப்பீட்டு சேவை கிடைக்க உதவுகிறது.
நண்பர்களே,
கிராமப்புறங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த பிஜேபி அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 'வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க இது முக்கியமானதாகும். எனவே, கிராமங்களில் வருவாய் ஈட்டுவதற்கும், வேலைவாய்ப்பிற்கும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ராஜஸ்தானில் உள்ள பிஜேபி அரசு மின்சாரத் துறையில் பல ஒப்பந்தங்களை செய்துள்ளது, இவற்றில் மிகப்பெரிய பயனாளிகளாக நமது விவசாயிகளே இருப்பார்கள். விவசாயிகளுக்கு பகலில் கூட மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதே ராஜஸ்தான் அரசின் திட்டம். இது இரவு நேரத்தில்தா ன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறது.சரியான திசையில் எடுக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக் இது உள்ளது.
நண்பர்களே,
ராஜஸ்தானில் சூரிய மின்சக்திக்கு குறிப்பிடத்தக்க வய்ப்புகள் உள்ளன.. நாட்டில் இந்தத் துறையில்இந்த மாநிலம் முன்னோடியாக மாற முடியும். உங்கள் மின்சாரக் கட்டணத்தை பூஜ்ஜியமாக்குவதற்கான வழிமுறையாக சூரிய சக்தியை எங்கள் அரசு மாற்றியுள்ளது. மத்திய அரசானது பிரதமர் சூரிய வீடு மின்சாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவ மத்திய அரசு சுமார் 75,000 முதல் 80,000 ரூபாய் வரை நிதிஉதவி வழங்குகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நீங்கள் பயன்படுத்தலாம், உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக உற்பத்தி செய்தால், அதிகப்படியான மின்சாரத்தை நீங்கள் விற்கலாம், அரசு அதை வாங்கிக் கொள்ளும். நாட்டில் இதுவரை 1.4 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். குறுகிய காலத்தில், ராஜஸ்தானில் 20,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உட்பட சுமார் 7 லட்சம் வீடுகளில் சோலார் பேனல் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் ஏற்கனவே சூரிய மின்சார உற்பத்தி தொடங்கியுள்ளது, மேலும் மக்கள் பணத்தை சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.
நண்பர்களே,
மேற்கூரைகளில் மட்டுமல்ல, வயல்களில் சூரிய சக்தி ஆலைகளை நிறுவவும் அரசு உதவி செய்கிறது. பிரதமரின் எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ராஜஸ்தான் அரசு வரும் காலத்தில் நூற்றுக்கணக்கான புதிய சூரிய ஆலைகளை அமைக்கப் போகிறது. ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு விவசாயியும் எரிசக்தி உற்பத்தியாளராக மாறும்போது, மின்சாரத்திலிருந்து வருமானம் கிடைக்கும், ஒவ்வொரு குடும்பத்தின் வருமானமும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
சாலை, ரயில் மற்றும் விமானப் பயணத்தைப் பொறுத்தவரை ராஜஸ்தானை மிகவும் இணைக்கப்பட்ட மாநிலமாக மாற்றுவதே எங்கள் தீர்மானம். தில்லி, வதோதரா மற்றும் மும்பை போன்ற முக்கிய தொழில்துறை மையங்களுக்கு இடையில் அமைந்துள்ள ராஜஸ்தான், இங்குள்ள மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இந்த மூன்று நகரங்களையும் ராஜஸ்தானுடன் இணைக்கும் புதிய அதிவேக நெடுஞ்சாலை நாட்டின் சிறந்த அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். மேஜா ஆற்றின் மீது ஒரு பெரிய பாலம் கட்டப்படுவது சவாய் மாதோபூர், புந்தி, டோங்க் மற்றும் கோட்டா போன்ற மாவட்டங்களுக்கு பயனளிக்கும். இந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி, மும்பை மற்றும் வதோதராவில் உள்ள பெரிய சந்தைகளுக்கு சென்றுவருவதை இது எளிதாக்கும். கூடுதலாக, இது ஜெய்ப்பூர் மற்றும் ரன்தம்பூர் புலிகள் சரணாலயத்திற்கு பயணம் செய்வதை சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதாக்கும். இன்றைய காலத்தில், நேரம் விலைமதிப்பற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதும் அவர்களின் வசதியை அதிகரிப்பதும் எங்கள் குறிக்கோள்.
நண்பர்களே,
இன்று, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர், அவர்களின் கடின உழைப்பின் காரணமாகவே இந்த நாளை நாம் காண்கிறோம். பிஜேபி தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். பிஜேபி உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும், அது ஒரு பரந்த சமூக இயக்கமாகவும் உள்ளது. பிஜேபி-க்கு கட்சியை விட தேசம்தான் பெரிது. பிஜேபி தொண்டர்கள் ஒவ்வொருவரும் நாட்டுக்காக விழிப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகின்றனர். ஒரு பிஜேபி தொண்டர் அரசியலில் மட்டுமல்ல, சமூக பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளார். இன்று, நீர் சேமிப்புடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதும், ஒவ்வொரு சொட்டு நீரையும் அர்த்தமுள்ள முறையில் பயன்படுத்துவதும் அரசு, சமூகம் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். எனவே, ஒவ்வொரு பிஜேபி ஊழியரும், ஒவ்வொரு உறுப்பினரும், தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியை நீர் சேமிப்புக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் பாசனம், அம்ரித் சரோவர் பராமரிப்பில் உதவுதல், நீர் மேலாண்மை வளங்களை உருவாக்குதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் மக்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.மேலும், இயற்கை விவசாய முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
அதிக மரங்கள் இருந்தால், பூமி அதிக நீரை சேமிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால்தான் " அன்னையின் பெயரில் ஒரு மரம்" போன்ற ஒரு இயக்கம் மிகவும் பயனளிக்கிறது. இது நமது தாய்மார்களைக் கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அன்னை பூமியின் மீதான மரியாதையையும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
இன்று, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் உள்ளனர், அவர்களின் கடின உழைப்பின் காரணமாகவே இந்த நாளை நாம் காண்கிறோம். பிஜேபி தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். பிஜேபி உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும், அது ஒரு பரந்த சமூக இயக்கமாகவும் உள்ளது. பிஜேபி-க்கு கட்சியை விட தேசம்தான் பெரிது. பிஜேபி தொண்டர்கள் ஒவ்வொருவரும் நாட்டுக்காக விழிப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகின்றனர். ஒரு பிஜேபி தொண்டர் அரசியலில் மட்டுமல்ல, சமூக பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளார். இன்று, நீர் சேமிப்புடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதும், ஒவ்வொரு சொட்டு நீரையும் அர்த்தமுள்ள முறையில் பயன்படுத்துவதும் அரசு, சமூகம் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். எனவே, ஒவ்வொரு பிஜேபி ஊழியரும், ஒவ்வொரு உறுப்பினரும், தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியை நீர் சேமிப்புக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் பாசனம், அம்ரித் சரோவர் பராமரிப்பில் உதவுதல், நீர் மேலாண்மை வளங்களை உருவாக்குதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் மக்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.மேலும், இயற்கை விவசாய முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
அதிக மரங்கள் இருந்தால், பூமி அதிக நீரை சேமிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால்தான் " அன்னையின் பெயரில் ஒரு மரம்" போன்ற ஒரு இயக்கம் மிகவும் பயனளிக்கிறது. இது நமது தாய்மார்களைக் கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அன்னை பூமியின் மீதான மரியாதையையும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
இன்று, ராஜஸ்தானில் நடைபெற்று வரும் நவீன வளர்ச்சிப் பணிகள், கட்டப்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகள், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு பயனளிக்கும். இது 'வளர்ந்த ராஜஸ்தானை உருவாக்க பங்களிக்கும், ராஜஸ்தான் வளர்ச்சியடையும் போது, பாரதமும் வேகமாக முன்னேறும். வரும் ஆண்டுகளில், இரட்டை என்ஜின் அரசு இன்னும் வேகமாக செயல்படும். நம்மை ஆசீர்வதிப்பதற்காக இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும், குறிப்பாக தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியுடன் தலை வணங்குகிறேன், இன்றைய நிகழ்ச்சி உங்களால்தான் சாதியமானது; அது உங்களுக்காகவும்தான். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.