மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் இந்த அழகிய மைதானத்தில் கூடியிருக்கும் எனது அனைத்து நண்பர்களே, புனித பூமியாகத் திகழும் தேவபூமியான உத்தராகண்டில் இருந்து உலகம் முழுவதும் உள்ள யோகா ஆர்வலர்களுக்கு எனது நான்காவது சர்வதேச யோகா தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யஒயோகா தினத்தையொட்டி நான்கு புண்ணியத் தலங்கள் அமைந்துள்ள கங்கை அன்னையின் இடத்தில் இந்த வகையில் நாம் அனைவரும் இணைந்திருப்பது நமது நல்ல அதிர்ஷ்டத்திற்கு சிறிதும் குறைவற்றதாகும். இந்த இடத்திற்கு ஆதிசங்கராச்சாரியார் விஜயம் செய்திருப்பதுடன் சுவாமி விவேகானந்தரும் பலமுறை விஜயம் செய்திருக்கிறார்.
இல்லாவிடிலும் உத்தராகண்ட் என்பது கடந்த பல தசாப்தங்களாகவே யோகாவுக்கான முக்கிய மையமாகத் திகழ்ந்துள்ளது. உத்தராகண்டில் உள்ள இந்த மலைகள் நமக்கு யோகா மற்றும் ஆயுர்வேத உணர்வை நினைத்த மாத்திரத்திலேயே அளிக்கும்.
இந்த இடத்திற்கு விஜயம் செய்யும் போது ஒரு சாமானிய மனிதருக்குக் கூட உற்சாகம் தரும் பிரத்யேக உணவைப் பெறக்கூடும். இந்த புண்ணிய பூமியில் வியக்கத்தக்க உணர்வு, ஊக்கம் மற்றும் மாயாஜால உணர்வு உள்ளது.
நண்பர்களே,
இன்று அதிகாலையில் உதிக்கும் சூரியன் தனது பயணத்தில் முன்னேறும் போது, சூரியக் கதிர்கள் பூமியை சென்றடைந்து ஒளியைப் பரப்பும்போது, அனைத்து இடங்களிலும் உள்ள மக்கள் சூரியனை யோகா செய்து மக்கள் வரவேற்பார்கள் என்பது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிப்பதாக இருக்கும்.
டேராடூனில் இருந்து டப்ளின் வரை, ஷாங்காயில் இருந்து சிகாகோ வரை, ஜகார்தாவில் இருந்து ஜோகன்னஸ்பர்க் வரை அனைத்து இடங்களிலும் யோகா உள்ளது.
ஆயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் உள்ள இமயமலையாக இருந்தாலும், சூரியன் சுட்டெரிக்கும் பாலைவனப் பகுதியாக இருந்தாலும் எல்லா சூழ்நிலைகளிலும் யோகா கலை மலர்ச்சியை கண்டு வருகிறது.
பிளவுசக்திகள் முக்கியத்துவம் பெறும்போது அதன் காரணமாக சிதைவுகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக மக்களிடையே, சமூகங்கள் இடையே மற்றும் நாடுகள் இடையே பிளவு ஏற்படுகிறது. சமுதாயத்தில் பிளவு ஏற்படும்போது, அதன் காரணமாக குடும்பத்தில் இருந்து விலக நேரிட்டு ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டு அவரது வாழ்க்கை முழுவதும் மன அழுத்தம் பெரிதாக வளர்ந்து விடுகிறது.
இந்த சமச்சீரற்ற நிலையில் சமநிலையை பராமரிக்க யோகா உதவிபுரிகிறது. நம்மை ஒன்றிணைக்கும் பணியை அதி மேற்கொள்கிறது.
இந்த வேகமான நவீனகால வாழ்வில் உடல், மனம், உணர்வு மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைப்பதன் மூலம் யோகா அமைதியை அளிக்கிறது.
ஒரு நபரை அவரது குடும்பத்தினருடன் இணைப்பதன் மூலம் அது குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
சமூகம் குறித்து ஒரு குடும்பத்தை சிந்திக்க வைத்து அது சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது.
தேசிய ஒருங்கிணைப்புக்கான இணைப்புகளாக சமூகங்கள் ஆகின்றன.
இத்தகைய நாடுகள் உலகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டு வருகின்றன. இத்தகைய சகோதரத்துவ உணர்விலிருந்து மனிதகுலம் வளர்ச்சி கண்டு வலிமை பெறுகிறது.
அப்படியெனில் யோகா தனிநபர்களை, குடும்பங்களை, சமூகங்களை, நாடுகளை மற்றும் உலகத்தை ஒருங்கிணைக்கிறது என்றும் அது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஒருங்கிணைக்கிறது.
யோகா தினம் குறித்த யோசனை ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட போது, உலகில் உள்ள அதிக எண்ணிக்கையிலான நாடுகள் அந்த யோசனைக்கு ஆதரவு அளித்தது ஐக்கிய நாடுகள் சபையிலே முதல் முறையாக கருதப்படுகிறது. மிகக் குறைவான காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலாவது யோசனை என்ற வரலாற்றையும் இது படைத்தது. இன்றைய தினம் உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு நாடும் தங்களுக்கு சொந்தமானது என்றும் கருதுவதுடன், இந்தப் பெரும் மரபை நாம் கடைப்பிடித்து வந்திருக்கிறோம் என்பதும் இந்த பாரம்பரியம் கொண்ட மரபை நாம் பாதுகாத்து வந்திருக்கிறோம் என்பது இந்தியர்களுக்கு முக்கியமான செய்தியாகும்.
நமது மரபு குறித்து நாம் பெருமிதம் அடையத் தொடங்கினால், காலத்திற்கு ஒவ்வாதவற்றை நாம் கைவிட்டால், அத்தகையவை நீடித்து இருக்காது. எனினும் காலத்திற்குத் ஏற்றது மற்றும் எதிர்காலத்தை உருவாக்குவதில் பயனளிப்பது ஆகியவற்றில் நாம் பெருமிதம் கொள்ளத் தொடங்கினால், அது குறித்து பெருமிதம் கொள்வதில் உலகம் தயக்கம் காட்டாது. நமக்கு சொந்தமான வலிமைகள் மற்றும் திறனில் நமக்கு நம்பிக்கை இருக்காவிடில், அதனை யாரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். ஒரு குழந்தையை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து விரக்தியடையச் செய்து வந்து, அந்தக் குழந்தை அந்தப் பகுதியில் மிகவும் மதிக்கப்படவேண்டும் என அந்தக் குடும்பம் எதிர்பார்த்தால் அது சாத்தியமாகாது. ஒரு குழந்தையை உள்ளது போலவே அதன் பெற்றோர், குடும்பத்தினர் அல்லது சகோதர சகோதரிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அருகில் இருப்பவர்களும் அந்தக் குழந்தையை ஏற்கத் தொடங்குவார்கள்.
யோகாவின் ஆற்றலுடன் தனது தொடர்பை இந்தியா மீண்டும் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த உலகமும் யோகாவுடன் தனது தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளதன் மூலம் இதனை யோகா நிரூபித்துள்ளது.
உலகில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்தவற்றில் ஒன்றாக இன்றைய தினம் யோகா உருவாகியுள்ளது.
ஒட்டுமொத்த உலகத்திலும் யோகா செய்வதற்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும்போது, இந்த உலகத்திற்கு வியப்பைத் தரும் உண்மைகள் புலப்படும் என என்னால் முழு நம்பிக்கையுடன் கூற முடியும்.
யோகாவுக்காக உங்களைப் போன்ற மக்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், பூங்காக்கள், திறந்தவெளி, சாலையோரங்கள், அலுவலகம் மற்றும் வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் கூடும்போது, உலகளாவிய சகோதரத்துவம் மற்றூம் உலகளாவிய நட்பு என்ற உணர்வுக்கு மேலும் சக்தி கிடைக்கிறது.
நண்பர்களே, உலகம் யோகாவை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதில் இருந்து நாம் காண முடிகிறது.
நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான தேடலுக்கான பெரும் மக்கள் இயக்கங்களில் ஒன்றாக யோகா தினம் ஆகியுள்ளது.
நண்பர்களே, டோக்கியோவில் இருந்து டொரண்டோ வரை, ஸ்டாக்ஹோமில் இருந்து சாவோ பாலோ வரை, யோகா லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழைமையானது என்ற போதிலும் நவீனமானது… நிலையானதாக உள்ள போதிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதால் யோகா மிகவும் அழகானது.
நமது முற்காலத்திலும் தற்காலத்திலும், சிறந்ததாக திகழ்ந்த இது நமது எதிர்காலத்திலும் நம்பிக்கை ஒளி கொண்டதாக அது உள்ளது.
தனிநபராக அல்லது சமூகமாக நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வு யோகாவில் உள்ளது.
நமது உலகம் என்பது எப்போதும் உறங்காததாகும். உலகின் வெவ்வேறு பகுதிகளில் எந்த நேரத்திலும் ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது.
வேகமான செயல்பாடு அத்துடன் ஏராளமான அழுத்தத்தை கொண்டுள்ளது. இருதய நோய் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே அறுபது லட்சம் பேர் மரணமடைகின்றனர் என்பதைப் படித்த போது நான் அதிர்ச்சி அடைந்தேன். சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் பேர் நீரிழிவை எதிர்த்து போராடுவதில் தோல்வியடைந்து உயிரிழக்கின்றனர்.
அமைதியான, படைப்பாற்றல் கொண்ட மற்றும் திருப்தியான வாழ்க்கை நடத்துவதற்கு யோகா சிறந்த வழியாகும். அழுத்தம் மற்றும் அர்த்தமற்ற சிந்தனையை தோற்கடிப்பதற்கான வழியை அது காட்டுகிறது.
பிளவுபடுத்துவதற்கு பதிலாக யோகா ஒருங்கிணைக்கிறது.
மேலும் விரக்தியை அளிப்பதற்கு பதிலாக யோகா அமைதி அளிக்கிறது.
துன்பத்தை அதிகரிப்பதற்கு பதிலாக யோகா ஆறுதலை அளிக்கிறது.
யோகாவை பயிற்சி செய்வதென்பது அமைதி, மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துகிறது.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் யோகாவை செய்வது உலகிறகு அதிக அளவு பயிற்சி அளிப்பவர்கள் தேவையை உணர்த்துகிறது. கடந்த மூன்றாண்டுகளில் பல தனிநபர்கள் யோகா பயிற்சியை அளிக்கின்றனர், புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், தொழில்நுட்பமும் மக்களுடன் யோகாவை இணைக்கிறது. வரும் காலங்களில் இந்த வேகத்தை நீங்கள் அனைவரும் மேலும் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
யோகாவுடன் நமது இணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கும், நம்மை சுற்றி இருப்பவர்கள் இதனை பயிற்சி செய்வதற்கான ஊக்கத்தையும் இந்த யோகா தினம் அளிக்கட்டும். இந்த நாள் அதற்கான தாக்கத்தை நீடிக்கச் செய்யட்டும்.
நண்பர்களே, நோய் எனற பாதையில் இருந்து ஆரோக்கியத்திற்கான பாதையை யோகா காண்பித்துள்ளது.
இதன் காரணமாகத்தான் உலகம் முழுவது யோகா இத்தனை விரைவான ஏற்பை சந்தித்து வருகிறது.
கோவெண்ட்ரி பல்கலைக்கழகம் மற்றும் ராட்பவுட் பல்கலைக்கழகம் ஆகியவை நட்த்திய ஆய்வுகளில் யோகா என்பது நமது உடலுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, நோய் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நமது மரபணுவில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் சீராக்குகிறது என தெரியவந்துள்ளது.
யோகாவின் நிலைகள் மற்றும் மூச்சுப் பயிற்சியை நாம் அன்றாடம் செய்துவந்தால், நல்ல ஆரோக்கியத்தை பெறுவதுடன் நாம் பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ளலாம். யோகாவை தொடர்ச்சியாக பயிற்சி செய்வது எந்தவொரு குடும்பத்தின் மருத்துவ செலவுகளில் இருந்தும் தப்பிக்க உதவுகிறது.
ஒவ்வொரு செயல்பாட்டிலும் நான் ஈடுபடவும், தேச கட்டமைப்பின் ஒவ்வொரு நடைமுறையிலும் நாம் ஆரோக்கியமாக ஈடுபடுவது அவசியம் என்பதுடன், இதிலும் யோகாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது.
யோகா பயிற்சி செய்பவர்கள் இதனை வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும், இதுவரை யோகா பயிற்சியை தொடங்க முடியாமல் இருப்பவர்கள் அதற்கான முயற்சியை ஒருமுறை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, யோகா அதிக அளவில் பரவி வருவது உலகத்தை இந்தியாவுக்கு அருகிலும் இந்தியாவை உலகத்திற்கு அருகிலும் நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. நாம் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக யோகாவுக்கு கிடைத்துள்ள இடம் வருங்காலங்களில் மேலும் வலுவடையும்.
மனிதகுலத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக யோகா பற்றிய புரிதலை மேலும் அதிகரித்துக் கொள்வது நமது பொறுப்பாகும். நமது பொறுப்புக்களை சிந்தையில் கொண்டு நமது முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த தயவு செய்து முன்வாருங்கள்.
இந்தப் புண்ணிய பூமியில் இருந்து நான் மீண்டும் ஒருமுறை உலகம் முழுவதும் உள்ள யோகா ஆர்வலர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த உத்தராகண்ட் அரசுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.