வணக்கம் அசாம்!
ஸ்ரீமந்தா சங்கர்தேவின் பணியிடமான மஜூலிக்கு வாழ்த்துகள்! மத்திய அமைச்சரவையில் எனது சகாக்கள், திரு. நிதின் கட்கரி, திரு. ரவிசங்கர் பிரசாத், திரு. மன்சுக் மண்டவியா, அசாம் முதல்வர் திரு. சர்பானந்தா சோனோவால், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா அவர்கள், அசாம் நிதியமைச்சர் டாக்டர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மற்றும் அசாமின் என் அன்பான சகோதர சகோதரிகளே. அலி-அய்-லிகாங் திருவிழாவின் உற்சாகம் இரண்டாவது நாளாக நிலவுகிறது என்று தெரிகிறது. நேற்று மைசிங் சமூகத்திற்கான உழவர் திருநாள் கொண்டாடப்பட்டது. இன்று மஜூலி உட்பட அசாம் மற்றும் வட கிழக்கு பகுதியின் முழு வளர்ச்சிக்கான ஒரு சிறந்த திருவிழா நடைபெறுகிறது.
சகோதர சகோதரிகளே,
பாரத் ரத்னா டாக்டர் பூபன் ஹசாரிகா ஒரு முறை எழுதியிருந்தார்: महाबाहुब्रह्मपुत्रमहामिलनरतीर्थ(अ) कत(अ) जुगधरिआहिछेप्रकाखिहमन्वयरअर्थ(अ)!அதாவது, பிரம்மபுத்திராவின் விரிவாக்கம் சகோதரத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றின் புனிதயாத்திரையாகும். பல ஆண்டுகளாக, இந்தப் புனித நதி நட்புறவுக்கும் தொடர்புக்கும் இயைந்ததாக உள்ளது. ஆனால் பிரம்மபுத்திராவின் இணைப்பு தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெறவில்லை என்பதும் உண்மை. இதன் விளைவாக, அசாமுக்கும் வடகிழக்கின் பிற பகுதிகளுக்குமான தொடர்பு எப்போதும் ஒரு பெருஞ்சவாலாகவே உள்ளது. மகாபாஹு பிரம்மபுத்திராவின் ஆசிகளுடன், பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகளாக, மத்திய அரசும், அசாம் அரசும் இரட்டை இஞ்சின் கொண்ட அரசாங்கங்களாக, இந்தமுழு மண்டலத்தின் புவியியல் மற்றும் கலாச்சார தொலைவைக் குறைக்க முயற்சித்தன. பிரம்மபுத்திராவின் நித்தியதன்மைக்கேற்ப வசதிவாய்ப்புகள் கலாச்சாரம் ஆகியவற்றுக்கான இணைப்புப் பாலங்களை நாங்கள் கட்டியுள்ளோம்
நண்பர்களே,
இந்த நாள் அசாம் உட்பட முழு வடகிழக்கு பகுதிக்கான தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்தப் போகிறது. டாக்டர் பூபன் ஹசாரிகா பாலம், போகிபீல் பாலம் அல்லது சரைகாட் பாலம் என பல பாலங்கள் இன்று அசாமின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், நமது துணிச்சலான வீரர்களுக்கு இது சிறந்த வசதியாகும். மேலும் இரண்டு பெரிய பாலங்களுக்கான பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மஜூலி தீவுக்குச் சென்றபோது, அங்குள்ள பிரச்னைகளை உன்னிப்பாக உணர்ந்தேன். இந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகாண சர்பானந்தா சோனோவால் அவர்களின் அரசு முயன்று வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அசாமின் முதல் ஹெலிபோர்ட் மஜூலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சகோதர சகோதரிகளே,
இப்போது, மஜூலி மக்கள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்கக்கூடிய சாலை வசதிகளைப் பெறவுள்ளனர். பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவையடுத்து, உங்கள் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற உள்ளது. காளிபாரி காட்டை ஜோர்ஹாட்டுடன் இணைக்கும் எட்டு கி.மீ பாலம் மஜூலியின் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உயிர்நாடியாக மாறும். இதேபோல், மேகாலயாவின் துப்ரி முதல் ஃபுல்பாரி வரை 19 கி.மீ நீளமுள்ள பாலம் ஆயத்தமாகும்போது, அது பராக் பள்ளத்தாக்குடனான தொடர்பை வலுப்படுத்தும். இந்தப் பாலம் அசாமில் இருந்து மேகாலயா, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவிற்கான தூரத்தையும் வெகுவாகக் குறைக்கும். சாலை வழியாக சுமார் 250 கிலோமீட்டர் தூரமுள்ள மேகாலயாவிற்கும் அசாமிற்கும் இடையிலான தூரம் எதிர்காலத்தில் 19-20 கிலோமீட்டராக மட்டுமே குறைக்கப்படும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்தப் பாலம் மற்ற நாடுகளுடனான சர்வதேசப் போக்குவரத்திற்கும் முக்கியமானதாக இருக்கும்.
சகோதர சகோதரிகளே,
பிரம்மபுத்ரா, பராக் உட்பட அசாமுக்கு பரிசாக உள்ள பல நதிகளை வளப்படுத்த மகாபாஹு பிரம்மபுத்ரா திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பிரம்மபுத்திராவின் நீருடன் மண்டலமெங்கும் நீர் இணைப்பு மற்றும் துறைமுகத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியை மேம்படுத்தும். இந்த பிரச்சாரத்தின் தொடக்கத்தில், நேமதி-மஜூலி, வடக்கு மற்றும் தெற்கு குவாஹாட்டி மற்றும் துப்ரி-ஹட்சிங்கிமரி இடையே மூன்று ரோ-பாக்ஸ் சேவைகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரோ-பாக்ஸ் சேவை மூலம் பெரிய அளவில் இணைக்கும் நாட்டின் முன்னணி மாநிலமாக அசாம் திகழ்கிறது. மேலும், நான்கு இடங்களில் சுற்றுலா ஜெட்டிகளின் வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மண்டலத்தின் வளர்ச்சியின் வேகத்தை மேலும் துரிதப்படுத்தும். 2016 இல் நீங்கள் அளித்த வாக்கு இவ்வளவு பலன்களை அளித்துள்ளது. உங்கள் வாக்கின் சக்தி இப்போது அசாமை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறது.
சகோதர சகோதரிகளே,
நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் கூட, நாட்டின் மிகவும் வளமான மற்றும் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் ஒன்றாக அசாம் இருந்தது. தேயிலை மற்றும் பெட்ரோலியப் பொருட்களும் பிரம்மபுத்ரா-பத்மா-மேக்னா ஆறுகள் மற்றும் ரயில் பாதைகள் வழியாக சிட்டகாங் மற்றும் கொல்கத்தா துறைமுகங்களை அடைந்தன. இந்த இணைப்பு நெட்வொர்க் அசாமின் செழிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த உள்கட்டமைப்பை நவீனமயமாக்கப்படவில்லை. நீர்வழிப்பாதையில் கவனம் செலுத்தப்படவில்லை, இந்த அலட்சியமே இப்பகுதியில் குழப்பமும், அமைதியின்மையும் நிலவ முக்கிய காரணமாகியது. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் காலத்தில் இவை திருத்திக்கொள்ளப்படத் தொடங்கின. இப்போது, திட்டங்கள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன. அசாமின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதற்கான அயராத முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சகோதர சகோதரிகளே,
கடந்த ஐந்து ஆண்டுகளில், அசாமின் மல்டி-மோடல் இணைப்பை மீண்டும் நிறுவ பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்ற கிழக்காசிய நாடுகளுடனான தொடர்பில், நமது கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளின் மையமாக அசாம் மற்றும் வடகிழக்குப்பகுதிகளை மாற்றுவதற்கான முயற்சியாகும இது. சமீபத்தில், பங்களாதேஷுடனான நீர் இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. பிரம்மபுத்ரா மற்றும் பாராக் நதிகளை இணைக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. வடகிழக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பல பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சகோதர சகோதரிகளே,
ஜோகிகோபாவின் ஐ.டபிள்யூ.டி முனையம் இந்த மாற்று வழியை மேலும் வலுப்படுத்தி, அசாமை கொல்கத்தாவுடன், ஹால்டியா துறைமுகத்துடன் நீர்வழி வழியாக இணைக்கும். இந்த முனையம் பூட்டான் மற்றும் பங்களாதேஷின் சரக்குபோக்குவரத்துக்கும், ஜோகிகோபா மல்டி மோடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவின் சரக்குப் போக்குவரத்துக்கும் மற்றும் பிரம்மபுத்ரா ஆற்றின் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லவும் உதவும்.
நண்பர்களே,
மஜூலி மற்றும் நேமதி இடையேயான ரோ-பாக்ஸ் சேவை சாதாரண மக்களின வசதிக்கான ஒரு திட்டமாகும். நீங்கள் இனி சாலை வழியாக சுமார் 425 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியதில்லை. ரோ-பாக்ஸ் வழியாக நீங்கள் 12 கிலோமீட்டர் பயணம்செய்தால்போதும், மேலும் உங்கள் சைக்கிள், ஸ்கூட்டர், பைக் அல்லது காரையும் எடுத்துச் செல்லலாம். இந்த வழியில் இயக்கப்படும் இரண்டு கப்பல்களும் ஒரே நேரத்தில் சுமார் 1600 பயணிகளையும், டஜன் கணக்கான வாகனங்களையும் கொண்டு செல்ல முடியும். இதேபோன்ற வசதி இப்போது குவஹாத்தி மக்களுக்கும் கிடைக்கும். இப்போது, வடக்கு மற்றும் தெற்கு குவாஹாத்திக்கு இடையிலான தூரம் 40 கிலோமீட்டரிலிருந்து 3 கிலோமீட்டராகக் குறைக்கப்படும். இதேபோல், துப்ரி மற்றும் ஹட்சிங்கிமரி இடையேயான தூரம் சுமார் 225 கிலோமீட்டரிலிருந்து 30 கிலோமீட்டராகக் குறையும்.
நண்பர்களே,
எங்கள் அரசாங்கம் நீர்வழிகளை உருவாக்குவது மட்டுமல்ல, அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு துல்லியமான தகவல்களைப் பெறுவதையும் உறுதி செய்கிறது. இதற்காக இன்று மின்-இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கார்-டி (Car-D) போர்ட்டல் தேசிய நீர்வழிப்பாதையின் அனைத்து சரக்கு மற்றும் கப்பல் தொடர்பான போக்குவரத்து தரவுகளையும் சரியான நிகழ்நேரத்துடன் பெற உதவும். இதேபோல், வழிசெலுத்தல் பற்றிய விவரங்கள் தவிர நீர்வழியின் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களையும் வழங்கும். ஜிஐஎஸ் அடிப்படையிலான பாரத் வரைபட போர்டல் (Bharat Map portal) இங்கு செல்ல விரும்பும் அல்லது வணிக நோக்கங்களுக்காக வர விரும்பும் மக்களுக்கு உதவும். சுயசார்பு இந்தியாவுக்காக பலமுனை இணைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது, அசாம் அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு.
சகோதர சகோதரிகளே,
அசாம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நீர்வழி-ரயில்வே-நெடுஞ்சாலை இணைப்போடு, இணைய இணைப்பும் அவசியம். இவை தொடர்பான பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில், வடகிழக்கின் முதல் தரவு மையம், குவஹாத்தியில் அமைக்கப்படவுள்ளது, இது நாட்டின் ஆறாவது தரவுமையமாகும். வடகிழக்கின் எட்டு மாநிலங்களுக்கும் மையதரவு மையமாக இது செயல்படும். அசாம் உட்பட வடகிழக்கு முழுவதும் மின்-ஆளுமை, தகவல் தொழில்நுட்ப சேவை சார்ந்த தொழில்நிறுவனங்கள் மற்றும்புதிதாகத்தொழில் தொடங்கும்நிறுவனங்களுக்கு அதிக உத்வேகம் அளிக்கும்.
சகோதர சகோதரிகள்,
பாரத் ரத்னா டாக்டர் பூபன் ஹசாரிகா எழுதினார்: कर्मइआमारधर्म, आमिनतुनजुगरनतुनमानब, आनिमनतुनस्वर्ग, अबहेलितजनतारबाबेधरातपातिमस्वर्गஅதாவது, எங்கள் பணியே எங்கள் மதம், நாங்கள் புறக்கணிக்கப்பட்ட புதிய யுகத்தின் புதிய மக்கள். அவர்களுக்காக பூமியில் ஒரு புதிய சொர்க்கத்தை உருவாக்குவோம். அசாம், வடகிழக்கு உட்பட நாடு முழுவதும் அனைவருடனும் அனைவருக்காகவும் வளர்ச்சி என்ற எண்ணத்துடன் அரசாங்கம் இன்று செயல்பட்டு வருகிறது. அசாமிய கலாச்சாரம், ஆன்மீகம், பழங்குடியினரின் வளமான பாரம்பரியம் மற்றும் பல்லுயிர் தன்மை ஆகியவை பிரம்மபுத்திராவைச் சுற்றியுள்ளது செழுமைப்பட்ட நமது பாரம்பரியமாகும். இந்தப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக ஸ்ரீமந்தா சங்கர்தேவ் அவர்களும் மஜூலி தீவுக்கு வந்தார். நீங்கள் அனைவரும் சத்ரியா கலாச்சாரத்தைப் பின்பற்றும் விதம் பாராட்டத்தக்கது. நம்நாட்டிலும் உலகெங்கிலும் முக ஷில்பா (மாஸ்க் ஆர்ட்) மற்றும் ராஸ் விழா உற்சாகமாகக்கொண்டாடப்படுகிறது. இந்த வலிமையும் இந்த கவர்ச்சிகரமானஅம்சங்களும் உங்களுக்கு மட்டுமே உள்ளன. அவற்றைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
சகோதர சகோதரிகளே,
மஜூலி மற்றும் அசாமின் கலாச்சார, ஆன்மீக, இயற்கை செழிப்பை மேலும் மேம்படுத்துவதற்கான பாராட்டத்தக்க பணிக்காக சர்பானந்தா சோனோவால் அவர்களையும், அவரது குழுவினரையும் வாழ்த்த விரும்புகிறேன். சட்டிரஸ் மற்றும் பிற முக்கிய இடங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பதற்கான இயக்கம், கலாச்சார பல்கலைக்கழகமொன்றை நிறுவுதல், "பல்லுயிர் பாரம்பரியத் தல்மாக" மஜூலிக்கு அந்தஸ்து அளித்தல், தேஜ்பூர்-மஜூலி-சிவசாகர் பாரம்பரிய சுற்றுலாசுற்று, நமாமி பிரம்மபுத்ரா மற்றும் நமாமி பாராக் திருவிழாக்கள் அசாமின் அடையாளத்தைவலுப்படுத்துகின்றன.
நண்பர்களே,
இணைப்பு திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன அல்லது இன்று அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது; அசாமில் சுற்றுலாவுக்கு புதிய கதவுகளைத் திறக்கப் போகிறது. அசாம், சுற்றுலாப்பயணிகளின் பயணத்திட்டத்தில் முக்கிய இடம்பெறும். அசாமின் சுற்றுலாத் துறை புதிய பரிமாணத்தைப் பெறும்.சுற்றுலா துறையில் குறைந்த கல்வியறிவு பெற்றவர்கள், குறைந்த முதலீடு செய்பவர்கள், திறமையான தொழில்முறை வல்லுநர்கள் என பலதரப்பினரும் பொருளீட்டலாம். இதுதான் வளர்ச்சி. ஏழை மக்களும் சாமானிய பொதுமக்களுக்கும் முன்னேற வாய்ப்பளிப்பதே வளர்ச்சி. இந்த வளர்ச்சியின் போக்கை நாம் துரிதப்படுத்த வேண்டும். அசாம் மற்றும் வடகிழக்குப்பகுதியை, சுயசார்பு இந்தியாவின் வலுவான தூணாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புதியவளர்ச்சித் திட்டங்களுக்கு உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகள்.
மிக்க நன்றி!