குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் அவர்களே, திரு ராகேஷ் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.பாட்டீல் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!
இந்த மருத்துவமனை திட்டங்கள் மகளிர் மற்றும் சமுதாயத்தின் பிற தேவையுள்ள பிரிவினருக்கு பெரும் சேவை அளிப்பதாக அமையும் வகையில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் அமைதியான முறையில் சேவையாற்றி வருகிறது.
இந்த மிஷனுடன் எனக்கு நீண்டகால தொடர்பு உள்ளது. சுதந்திர தின அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில், தேவைப்படும் நேரத்தில் கடமையாற்றும் உணர்வும், இந்த அமைப்பின் நீண்டகால சேவையும் பாராட்டத்தக்கது. குஜராத்தின் சுகாதார சேவையில் பூஜ்ய குருதேவ் தலைமையில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் ஆற்றி வரும் பாராட்டுக்குரிய சேவைகள் போற்றத்தக்கது. புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஏழைகளுக்கு சேவையாற்றும் இந்த மிஷனின் உறுதிப்பாடு மேலும் வலுவடைந்திருப்பதுடன், இந்த மருத்துவமனையும், ஆராய்ச்சி மையமும், அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்யும். சுதந்திர தின ‘அமிர்த காலத்தில்’ ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது என்ற தொலைநோக்கு திட்டத்திற்கு இவை வலுசேர்க்கும். அத்துடன், சுகாதார சேவை துறையில் அனைவரும் முயற்சிப்போம் என்ற உணர்வுக்கும் இது வலுசேர்க்கும்.
இந்தியாவை அடிமைத்தனத்திலிருந்து மீட்க பாடுபட்ட அனைவரையும் நாடு நினைவு கூர்கிறது. ஸ்ரீமத் ராஜ்சந்திரா அது போன்ற ஒரு புனிதர். அவரது மகத்தான பங்களிப்பு நாட்டின் வரலாற்றில் ஒரு அங்கமாக இருக்கும். ஸ்ரீமத் ராஜ்சந்திரா மீதான மகாத்மா காந்தியின் ஈர்ப்பு அளவிட முடியாததாக இருந்தது.
மகளிர், பழங்குடியினர், நலிந்த பிரிவினருக்கு அதிகாரமளிப்பதற்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் தான் நாட்டின் உணர்வை உயிரோட்டமாக வைத்துள்ளனர். தமது இளமைப் பருவத்திலிருந்தே பெண்களுக்கு அதிகாரமளிப்பது பற்றி பேசிவந்தவர் ஸ்ரீமத். சுதந்திரதின அமிர்தப் பெருவிழா காலகட்டத்தில், மகளிர் சக்தியை தேசத்தின் சக்தியாக வெளிக்கொணர வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.
சகோதரிகள் மற்றும் புதல்விகளின் முன்னேற்றத்தை தடுக்கக் கூடிய பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்வதில் உள்ள அனைத்து தடைகளையும் அகற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இந்தியா தற்போது பின்பற்றி வரும் சுகாதாரக் கொள்கை, நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களின் சுகாதாரம் மீது கவனம் செலுத்துவதாக உள்ளது. மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது.