திரு. வினீத் ஜெயின் அவர்களே,

இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருக்கும் மரியாதைக்குரியவிருந்தினர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள்.

உங்கள் அனைவரையும் உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டில் மீண்டும்ஒருமுறை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

வர்த்தக உச்சிமாநாட்டிற்கான உங்களின் மையக் கருத்தின் முதல் வார்த்தையாகசமூகம் என்பதை தேர்ந்தெடுத்தமைக்காக உங்கள் அனைவரையும் முதலில்பாராட்ட விழைகிறேன்.

இங்கே கூடியிருப்பவர்கள் வளர்ச்சியை எப்படி நீடித்திருக்கச் செய்வது என்ற சவால்குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். உங்கள் மையக்கருத்தின் இரண்டாவதுவார்த்தையாக அது இருப்பது கண்டும் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த உச்சிமாநாட்டின் மையக் கருத்தின் மூன்றாவது வார்த்தையாக அமைந்துள்ளஅளவிடல் பற்றி நீங்கள் விவாதிக்க இருப்பதும் அதனூடே இந்தியாவிற்கானதீர்வுகளைப் பற்றி விவாதிக்க இருப்பதும் எனக்கு நம்பிக்கையையும் மனஉறுதியையும் வழங்குகிறது.

|

நண்பர்களே,

2013-ம் ஆண்டின் இரண்டாவது பகுதியிலும் 2014-ம் ஆண்டின் முதல் பகுதியிலும்நமது நாடு சந்தித்து வந்த சவால்கள் குறித்து இங்கே கூடியிருக்கின்ற உங்களை விடஅதிகமாக யார் அறிந்திருக்கப் போகிறார்கள்?

அப்போது வேகமாக உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கமானது ஒவ்வொருகுடும்பத்தின் முதுகெலும்பையும் முறித்துக் கொண்டிருந்தது.

அதிகரித்துக் கொண்டிருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகமானஅளவிலான நிதிப் பற்றாக்குறையும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின்நிலைத்தன்மையையே அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

இந்த அளவீடுகள் அனைத்துமே இருண்டதொரு எதிர்காலத்தையே சுட்டிக் காட்டிவந்தன.

ஒட்டுமொத்தத்தில் ஸ்தம்பித்துப் போன கொள்கையையே நாடு எதிர்நோக்கிக்கொண்டிருந்தது.

பொருளாதாரம் அது எட்டுவதற்குத் திறன் பெற்ற அளவை எட்டுவதிலிருந்து இவைஅனைத்தும் தடுத்துக் கொண்டிருந்தன.

ஐந்து நாடுகளின் கூட்டணியில் மிகவும் மெலிந்துபோயிருந்த இந்த உறுப்பு நாட்டின்நிலை குறித்து உலக அளவிலான நம் சகோதர நாடுகள் கவலையில் ஆழ்ந்தன.

அப்போது நிலவி வந்த சூழலுக்கு முற்றிலும் சரணாகதி அடைந்து விடும் போக்கேநிலவி வந்தது.

நண்பர்களே,

இத்தகையதொரு பின்னணியில்தான் எமது அரசு மக்களுக்குச் சேவைசெய்வதற்காக ஆட்சிக்கு வந்தது. இதில் ஏற்பட்ட மாற்றத்தை இன்று மிகத்தெளிவாகவே உணர முடியும்.

2014-ம் ஆண்டிற்குப் பிறகு தயக்கங்களின் இடத்தை நம்பிக்கை பிடித்துக்கொண்டது.

இடையூறுகளின் இடத்தை சுயநம்பிக்கை பிடித்துக் கொண்டது.

மேலும்

பிரச்சனைகளின் இடத்தை முன்முயற்சிகள் பிடித்துக் கொண்டன.

2014-ம் ஆண்டிலிருந்தே சர்வதேச அளவிலான தரவீடுகள், அளவீடுகள் ஆகியஅனைத்திலும் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியிருந்தது.

இந்தியா எத்தகைய மாற்றத்தை அடைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக இதுஇருப்பதோடு, இந்தியாவைப் பற்றிய உலகத்தின் கண்ணோட்டம்மாறிவருவதையும் இது சுட்டிக் காட்டியது.

இத்தகைய துரிதமான மேம்பாட்டை பாராட்ட இயலாத சிலரும் இருக்கின்றனர்என்பதையும் நான் அறிவேன்.

இத்தகைய தரவீடுகள் காகிதத்தில் மட்டுமே உள்ளன; நடைமுறையில் எவ்விதமாற்றமும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இது உண்மைக்குப் புறம்பானது என்றே நான் கருதுகிறேன்.

பெரும்பாலும் இத்தகைய தரவீடுகள் மிகவும் பின் தங்கிய அறிகுறிகள்தான்.

முதலில் களத்தில் மாற்றம் ஏற்படுகிறது; எனினும் குறிப்பிட்ட காலஇடைவெளிக்குப் பின்பே அது பிரதிபலிக்கிறது.

உதாரணமாக வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது குறித்த தரவீடுகளையேஎடுத்துக் கொள்வோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் நமது தரவரிசையானது 142-ம் இடத்திலிருந்துவரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் 77வது இடத்தை எட்டியுள்ளது.

எனினும் களத்தில் மாற்றம் ஏற்பட்ட பிறகே இந்த தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டது.

புதிய தொழில்களை தொடங்குவதற்கான கட்டுமான அனுமதிகள் இப்போதுமிகவும் வேகமாக கிடைக்கின்றன; அதைப் போலவேதான் மின்சார வசதி மற்றும்இதர அனுமதிகளும் கூட விரைவில் கிடைக்கிறது.

சிறிய வர்த்தகர்களைப் பொறுத்தவரையிலும் கூட, விதிகளுக்கு ஏற்ப நடந்துகொள்வது என்பது எளிதாகி வருகிறது.

இப்போது ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வரையில் வர்த்தகம் செய்யும் எந்தவொருவியாபார நிறுவனமும் ஜிஎஸ்டி ஏற்பாட்டில் பதிவு செய்யத் தேவையில்லை.

ரூ. 60 லட்சம் வரையில் ஆண்டுக்கு வியாபாரம் செய்யும் நிறுவனம் எந்தவிதவருமான வரியையும் இப்போது கட்ட வேண்டியதில்லை.

ரூ. 1.5 கோடி வரையில் வர்த்தகம் செய்யும் எந்தவொரு வியாபார நிறுவனமும் மிகக்குறைந்த வரி விகிதத்துடன் கூட்டுத் திட்டத்தில்  பங்குபெறுவதற்குத் தகுதிபெறுகிறது.

அதைப் போலவே, உலக பயணம் மற்றும் சுற்றுலாவிற்கான போட்டித் திறன்குறித்த அட்டவணையில் 2013-ம் ஆண்டில் 65 ஆக இருந்த இந்தியாவின்தரவரிசையானது 2017-ம் ஆண்டில் 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிற்கு வந்து சேரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைகிட்டத்தட்ட  45 சதவீதம் அதிகரித்துள்ளது; அனுமதி பெற்ற ஓட்டல்களின்எண்ணிக்கையும் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது. அதைப் போலவே 2013க்கும்2017க்கும் இடைப்பட்ட காலத்தில் சுற்றுலாவின் மூலமாகப் பெறப்பட்ட அந்நியச்செலாவணியின் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதைப்போலவே புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய அட்டவணையில்இந்தியாவின் தரவரசையானது 2014-ல் 76ஆக இருந்தது  2018-ல் 57 ஆகஉயர்ந்துள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளுக்கான இந்த உந்துதல் மிகத் தெளிவாகவே தென்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட காப்புரிமை மற்றும் ட்ரேட் மார்க் ஆகியவற்றின்எண்ணிக்கையும் கூட பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

புதிய வகைப்பட்ட ஆட்சிமுறையின் விளைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதுஎன்பதோடு கவனத்தைக் கவரத் தக்க வழிகளில் இது பெரும்பாலான நேரங்களில்தென்படுகிறது.

2014-ம் ஆண்டிலிருந்து நிலைமைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பது குறித்து இதுபோன்ற கவனத்தைக் கவரத்தக்க உதாரணத்தை உங்களுக்குத் தெரிவிக்கவும்நான் விரும்புகிறேன்.

நாம் இப்போது பல்வேறு வகையான போட்டிகளை எதிர்கொண்டு வருகிறோம்.

அமைச்சகங்களுக்கு இடையிலான போட்டி;

மாநிலங்களுக்கு இடையிலான போட்டி;

வளர்ச்சிக்கான போட்டி;

இலக்கை அடைவதற்கான போட்டி;

இந்தியா நூறு சதவீத தூய்மையை எட்டுமா? அல்லது இந்தியாவின் நூறு சதவீதப்பகுதிகளும் மின்சார மயமாவதை எட்டுமா? என்பதில் இன்று ஒரு போட்டிநடைபெற்று வருகிறது.

அனைத்து குடியிருப்புகளும் சாலைகளால் முதலில் இணைக்கப்படுமா? அல்லதுஅனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு முதலில் கிடைக்குமா? என்றபோட்டியும் இப்போது நடைபெற்று வருகிறது.

எந்த மாநிலம் அதிகமான முதலீட்டைப் பெறும்? என்பதற்கான போட்டியும் இருந்துவருகிறது.

எந்த மாநிலம் ஏழைகளுக்கான வீடுகளை விரைவாக கட்டித் தருகிறது என்பதில்போட்டி இருந்து வருகிறது.

ஆர்வமிக்க எந்த மாவட்டம் துரிதமாக வளர்கிறது என்பதற்கான போட்டி இப்போதுநடைபெற்று வருகிறது.

2014க்கும் முன்பும் கூட போட்டியைப் பற்றி நாம் கேள்விப்பட்டோம். ஆனால் அதுமுற்றிலும் மாறுபட்ட வகையிலானது.

அது அமைச்சகங்களுக்கு இடையிலான, தனிநபர்களுக்கு இடையிலான போட்டி;ஊழல் பற்றிய போட்டி; தாமதங்கள் பற்றிய போட்டி;

யாரால் அதிகமான அளவிற்கு ஊழல் செய்ய முடியும்? என்பதற்கான போட்டிஇருந்தது. யார் வேகமாக ஊழல் செய்யமுடியும் என்பதற்கான போட்டி இருந்தது.ஊழலில் புதிய கண்டுபிடிப்புகளை யாரால் செய்ய முடியும் என்பதற்கான போட்டிஇருந்தது.

நிலக்கரியா? அல்லது அலைக்கற்றையா? எது அதிகமான பணத்தைப் பெற்றுத்தரும் என்பதற்கான போட்டி இருந்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளா? அல்லது ராணுவ ஒப்பந்தங்களா? எதுஅதிகமான பணத்தைப் பெற்றுத் தரும் என்பதிலும் போட்டி இருந்தது.

இவை அனைத்தையும் நாம் பார்த்தோம். இந்தப் போட்டியில் ஈடுபட்ட முக்கியநபர்கள் யார் என்பதும் நமக்குத் தெரியும்.

எந்த வகையான போட்டியை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் முடிவுக்கேவிட்டு விடுகிறேன்.

நண்பர்களே,

கடந்த பல பத்தாண்டுகளாகவே, குறிப்பிட்ட சில விஷயங்கள் இந்தியாவில்நடைபெறவே முடியாது என்ற கருத்தே நிலவி வந்துள்ளது.

2014-ம் ஆண்டிலிருந்து நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் 130 கோடிஇந்தியர்களால் முடியாத எதுவுமில்லை என்ற நம்பிக்கையையே எனக்குகொடுத்துள்ளது.

தூய்மையானதொரு இந்தியாவை உருவாக்குவது இயலாத ஒன்று என்றுகூறப்பட்டது; ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

இந்தியாவில் ஊழலற்ற ஓர் ஆட்சியை உருவாக்க முடியாது என்று கூறி வந்துள்ளனர்;ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

இந்திய மக்களுக்கு சென்று சேர வேண்டியதை வழங்கும் செயல்முறையில் இருந்துஊழலை அகற்றுவதென்பது இயலாத ஒன்று என்று கூறி வந்துள்ளனர்; ஆனால்இந்திய மக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

தொழில்நுட்பத்தின் பயனை ஏழைகளுக்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கமுடியாது என்று கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்றுநிரூபித்துள்ளனர்.

கொள்கை உருவாக்கத்தில் சுயவிருப்பத்தையும் எதேச்சாதிகாரப் போக்கையும்அகற்றுவதென்பது இயலாத ஒன்று என்றே கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்தியமக்கள் அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது இயலாத ஒன்றுஎன்றே கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்திய மக்கள் அதை முடியும் என்றுநிரூபித்துள்ளனர்.

இந்தியா ஒரே நேரத்தில் வளர்ச்சிக்கு ஆதரவான, ஏழைகளுக்கு ஆதரவானபாதையில் நடைபோட முடியாது என்றே கூறி வந்துள்ளனர்; ஆனால் இந்திய மக்கள்அதை முடியும் என்று நிரூபித்துள்ளனர்.

வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரம் பணவீக்கம் என்ற பிரச்சனையைஎதிர்கொள்ளாமல் நீண்ட காலத்திற்கு அதிக விகிதத்தில்  வளர்ச்சியை எதிர்நோக்கமுடியாது என்ற கொள்கை அல்லது கருத்தோட்டம் இருப்பதாக என்னிடம்கூறப்பட்டது.

தாராளமயமாக்கல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதாவது 1991-ம்ஆண்டிற்குப் பிறகு வந்த அனைத்து அரசுகளுமே குறுகிய கால வளர்ச்சிக்குப் பிறகுபொருளாதாரம் ‘அதிக சூடாவது’ என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்ற இந்தப்பிரச்சனையை எதிர்கொண்டு வந்தன.

இதன்விளைவாக நீடித்து வருகின்ற அதிக அளவிலான வளர்ச்சி விகிதம் நம்நாட்டில் இருக்கவே இல்லை.

1991க்கும் 1996க்கும் இடைப்பட்ட காலத்தில் நம் நாட்டில் ஓர் அரசு இருந்ததை  உங்களால் நினைவு கூர முடியும். அப்போது சராசரி வளர்ச்சி விகிதம் என்பது ஐந்துசதவீதமாக இருந்தது; ஆனால் சராசரி பணவீக்கம் என்பது பத்து சதவீதத்திற்கும்அதிகமானதாகவே இருந்தது.

எங்கள் அரசுக்கு முன்னால் 2009 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த அரசின்காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் என்பது ஆறரை சதவீதமாக இருந்தது; எனினும்சராசரி பணவீக்கம் என்பது மீண்டும் இரட்டை இலக்கமாகவே இருந்தது.

நண்பர்களே,

2014க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் நமது நாடு ஏழு புள்ளி நான்கு சதவீதவளர்ச்சி விகிதம் கொண்டதாகவும், அதே நேரத்தில் பணவீக்கமானது நான்கரைசதவீதமாக மட்டுமே இருந்தது.

தாராளமயமாக்கல் கொள்கை நமது நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வந்தஎந்தவொரு அரசின் காலத்திலும் மிக அதிகமான சராசரி வளர்ச்சி விகிதம் மற்றும்நாடு சந்தித்த மிகக் குறைவான சராசரி பணவீக்கம் என்பது இதுவே ஆகும்.

இத்தகைய மாற்றங்கள், சீர்திருத்தங்களின் மூலம் நமது பொருளாதாரம் நகர்ந்துசெல்லும் வழியில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

அதன் நிதியாதாரங்களின் எண்ணிக்கையை இந்தியப் பொருளாதாரம்விரிவுபடுத்தியுள்ளது.

முதலீட்டுத் தேவைகளுக்கு அது இப்போதெல்லாம் வங்கிக் கடன்களை மட்டுமேநம்பியிருப்பதில்லை.

உதாரணமாக மூலதனச் சந்தையிலிருந்து எழுப்பப்படும் நிதியையே எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், அதாவது 2011-12லிருந்து 2013-14 வரையிலான காலத்தில் பங்குகளின் மூலம் திரட்டப்பட்ட சராசரிநிதி என்பது ஆண்டுக்கு ரூ. 14,000 கோடி ஆகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இது சராசரியாக ஆண்டுக்கு ரூ. 43,000 கோடி ஆகும்.அதாவது கிட்டத்தட்ட மூன்று மடங்கு.

2011 முதல் 2014 வரை மாற்று முதலீட்டு நிதியின் மூலம் திரட்டப்பட்ட மொத்ததொகை ரூ. 4,000 கோடிக்கும் குறைவானதே ஆகும்.

பொருளாதாரத்திற்கு நிதி வழங்கும் இந்த ஆதாரத்தை மேம்படுத்த எமது அரசுபல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன் விளைவுகளை உங்களால் பார்க்கவும் முடியும்:

2014 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுக் காலத்தில் மாற்று முதலீட்டுநிதிகளின் மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ரூ. 81,000 கோடிக்கும் அதிகமாகும்.

அதாவது முந்தைய காலப்பகுதியை விட இருபது மடங்கு இந்த முதலீடுஅதிகரித்துள்ளது.

அதைப் போலவே பெருநிறுவன பத்திரங்களில் தனியார் முதலீட்டை உதாரணமாகஎடுத்துக் கொள்வோம்.

2011 முதல் 2014 வரையில் இதன் மூலம் திரட்டப்பட்ட சராசரி தொகை என்பதுசுமார் ரூ. 3 லட்சம் கோடி அல்லது 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

ஆனால் இப்போது கடந்த நான்கு ஆண்டு காலத்தில் இது சராசரியாக ரூ. 5.25 லட்சம்கோடியாக அல்லது 75 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

இது கிட்டத்தட்ட  75 சதவீத அதிகரிப்பாகும்.

இவை அனைத்துமே இந்தியப் பொருளாதாரத்தின் மீது வைக்கப்படும்நம்பிக்கைக்கான உதாரணங்களே ஆகும்.

இன்று உள்நாட்டில் உள்ள முதலீட்டாளர்கள் மட்டுமல்ல; உலகம் முழுவதிலுமிருந்துவந்துள்ள முதலீட்டாளர்களும் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தியாவின் மீதான இந்த நம்பிக்கை தொடர்கிறது; தேர்தலுக்கு முந்தையஆண்டுகளில் நிலவும் போக்குகள் அனைத்தையும் உடைத்தெறிவதாகவும் அதுஉள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நமது நாட்டில் வந்தடைந்த நேரடி அந்நிய முதலீட்டின்அளவு எனது 2014க்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் பெறப்பட்ட தொகைக்குகிட்டத்தட்ட சமமானதாகும்.

இத்தகைய சாதனைகள் அனைத்தையும் எட்டுவதற்கு இந்தியாவிற்குமாற்றத்திற்கான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

இவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிட வேண்டுமெனில் திவால் விதிமுறைகள்,ஜிஎஸ்டி, கட்டுமானத் தொழிலுக்கான சட்டம் போன்றவற்றின் மூலம் அடுத்த பலபத்தாண்டுகளுக்கு நமது பொருளாதாரம் அதிகமான வளர்ச்சி விகிதத்தைஅடைவதற்கான வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ளது.

கடன் வாங்கியவர்கள் நிதி மற்றும் செயல்முறை கடன் வழங்குவோருக்கு ரூ. 3லட்சம் கோடி அல்லது 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பி அளிப்ப்பார்கள்என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யார்தான் நம்பி இருப்பார்கள்?

தொழில்நொடிப்பு மற்றும் திவால் குறித்த விதிமுறைகளின் தாக்கமே இது.

மேலும் திறமையான வகையில் நிதியாதாரங்களை ஒதுக்கீடு செய்ய இதுநாட்டிற்கு உதவிகரமாக அமையும்.

கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாத, நமது நாட்டுப்பொருளாதாரத்திற்கான பழுதுபார்க்கும் வேலையை நாங்கள் மேற்கொண்டபோது“மெதுவாகச் செல்லவும்! வேலை நடந்து கொண்டிருக்கிறது!” என்ற எச்சரிக்கைபலகையை வைக்கக் கூடாது என்றும் நாங்கள் முடிவு செய்தோம்.

சமூகத்தின் பெரும்பகுதியினரின் நலனுக்கான வேலைக்கு எவ்வித தடையையும்ஏற்படுத்தாமலேயே இந்த சீர்திருத்தங்கள் அனைத்துமே அமலாக்கப்பட்டன.

நண்பர்களே,

பேரார்வம் கொண்ட 130 கோடி பேரை உடைய நாடாக இந்தியா விளங்குகிறது.எனவே வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு ஒரே ஒரு பார்வை மட்டுமேஎப்போதும் இருக்க முடியாது.

அவர்களின் பொருளாதார அந்தஸ்து, அவர்களின் சாதி, இனம், மொழி, மதம்ஆகியவற்றை பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சேவைசெய்வதாகவே புதிய இந்தியாவிற்கான நமது தொலைநோக்கு அமைகிறது.

130 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய புதியதொரு இந்தியாவை உருவாக்கவே நாங்கள் கடுமையாக உழைத்துவருகிறோம்.

கடந்த காலத்தின் பிரச்சனைகளை தீர்க்கும் அதே நேரத்தில் எதிர்காலத்தின்சவால்களையும் எதிர்கொள்வதும் புதிய இந்தியாவிற்கான எமதுதொலைநோக்கில் அடங்கியுள்ளது.

எனவே, இன்று இந்தியா அதன் அதிவேகமான ரயிலை உருவாக்கும் அதே நேரத்தில்ஆளில்லா ரயில்வே பாதையை கடக்கும் பகுதிகளையும் அது முற்றிலுமாக அகற்றிவிடுகிறது.

இன்று இந்தியா துரிதமான வேகத்தில் அதன் ஐஐடிகளையும் எய்ம்ஸ்மருத்துவமனைகளையும் உருவாக்கும் அதே நேரத்தில் நாடு முழுவதிலும் உள்ளபள்ளிகள் அனைத்திலும் கழிப்பறைகளை அது உருவாக்கியுள்ளது.

இன்று இந்தியா நாடு முழுவதிலும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வரும் அதேநேரத்தில் பேரார்வம் மிக்க 100 மாவட்டங்கள் துரிதமான முன்னேற்றம்பெறுவதையும் உறுதிப்படுத்தி வருகிறது.

இன்று இந்தியா மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ள அதேநேரத்தில் நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்தே இருளில் மூழ்கிக் கிடந்தகோடிக்கணக்கான குடும்பங்கள் மின்சார வசதி பெறுவதையும்உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று இந்தியா செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கும் இலக்கை வகுத்துள்ள அதேநேரத்தில் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இந்தியனின் தலைக்கு மேலும் ஒரு கூரைஇருப்பதை உறுதி செய்ய முனைந்துள்ளது.

இன்று இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாகமாறியுள்ள அதே நேரத்தில் துரிதமான வேகத்தில் வறுமையை அகற்றுவதிலும் அதுஈடுபட்டு வருகிறது.

நண்பர்களே,

 ‘ஏ –பி –சி மனப்போக்கு’ என்பதிலிருந்து நாம் விலகியுள்ளோம். அதாவதுஎந்தவொரு பிரச்சனையையும் தவிர்ப்பது, ஆழப் புதைப்பது, அதைக் குழப்புவதுஎன்பதுதான் அந்த மனப்போக்கு.

ஒரு பிரச்சனையை தவிர்ப்பதற்கு பதிலாக, நாங்கள் அதை எதிர்கொள்கிறோம்.

அதை குழிதோண்டிப் புதைப்பதற்குப் பதிலாக, அதை வெளியே எடுத்துமக்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

மேலும்

இந்த அமைப்பை குழப்பத்தில் ஆழ்த்துவதற்குப் பதிலாக ஒரு தீர்வை கண்டுபிடிக்கமுடியும் என்பதையும் நாங்கள் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

இதுதான் சமூகத் துறையில் மேலும் பல சாதகமான தலையீடுகளை மேற்கொள்ளஎங்களுக்கு மேலும் நம்பிக்கை ஊட்டியது.

ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கி பாதுகாப்பதன் மூலம் 12 கோடி சிறு, நடுத்தரவிவசாயிகளை நாங்கள் எட்டியுள்ளோம். இது அடுத்த பத்து ஆண்டுகளில் நமதுவிவசாயிகளிடம் ரூ. 7.5 லட்சம் கோடியை அல்லது 100 பில்லியன் அமெரிக்கடாலர்களை கொண்டு சேர்க்கும்.

முறை சாரா துறையைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கானஓய்வூதியத் திட்டம் ஒன்றையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த அரசின் வளர்ச்சிக்கான உந்து சக்தி என்பது இணையாக இரு வழிகளில்செயல்பட்டு வருகிறது. ஒன்று குறிப்பாக சமூகத்தால் கைவிடப்பட்டஅனைவருக்கும் சமூக கட்டமைப்பை வழங்குகிறது. மற்றொன்றுஅனைவருக்குமான, குறிப்பாக அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தைஉருவாக்கும் வகையில், அவர்கள் தங்களின் கனவுகளுக்கு ஏற்ப அவற்றைவடிவமைத்துக் கொள்ளும் வகையிலான கட்டமைப்பை உருவாக்குகிறது.

கடந்த காலத்தில் நடைபெற்ற எதுவும் நம் கையில் இல்லை; ஆனால் எதிர்காலத்தில்என்ன நடைபெறவிருக்கிறதோ அது நம் கைகளில்தான் உறுதியாக உள்ளது.

கடந்த காலத்தில் தொழில் புரட்சியைத் தவற விட்டு விட்டோம் என்று நாம் அடிக்கடிபுலம்புவதுண்டு; ஆனால் இன்று நான்காவது தொழில்புரட்சிக்கு தீவிரமாகபங்களிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்பதை நமக்குப் பெருமை தருவதாகஉள்ளது.

நமது பங்களிப்பின் வீச்சும் அளவும் உலகை வியப்புறச் செய்வதாகவே இருக்கும்.

முதல் மூன்று தொழில் புரட்சிகளை இந்தியா தவற விட்டு இருக்கலாம். ஆனால்இந்த முறை இந்தியா அந்த வண்டியில் ஏறும் என்பது மட்டுமின்றி அதை இயக்கும்சக்தியாகவும் இருக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் புத்தெழுச்சிக்கு இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பமும்அடித்தளமாக அமையும்.

டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தொழில் தொடங்கு, இந்தியாவில் உருவாக்கு, புதியகண்டுபிடிப்பை காணும் இந்தியா போன்ற இயக்கங்களில் நாம் செலுத்தி வந்துள்ளகவனத்தின் விளைவாக அவை ஒன்று சேர்ந்து செறிவான பலன்களைவழங்கியுள்ளன.

2013 மற்றும் 2014-ம் ஆண்டுகலில் சுமார் 4,000 புதிய கண்டுபிடிப்புகளுக்கானகாப்புரிமைகள் வழங்கப்பட்டன எனில் 2017-18-ம் ஆண்டில் மட்டுமே 13,000க்கும்மேற்பட்ட காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது மூன்று மடங்கு அதிகரிப்பாகும்.

அதைப் போன்றே பதிவு செய்யப்பட்ட ட்ரேட் மார்க்குகளின் எண்ணிக்கை என்பது2013-14-ம் ஆண்டில் சுமார் 68,000 ஆக இருந்தது. இது 2016-17-ம் ஆண்டில் சுமார் 2.5லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

இது கிட்டத்தட்ட  நான்கு மடங்கு அதிகரிப்பாகும்.

இந்தியாவில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள புதிய தொழில்முனைவுகளில் 44சதவீதம் இரண்டாம், மூன்றாம் கட்ட நகர்களில் இருந்து வந்தவையாகும் என்பதைஅறிந்தீர்களெனில் நீங்கள் அனைவருமே மகிழ்ச்சி அடைவீர்கள்.

நாடு முழுவதிலும் நூற்றுக்கணக்கான அடல் செழுமைப்படுத்தும் பரிசோதனைக்கூடங்களின் வலைப்பின்னல் உருவாகி வருகிறது. இது புதியகண்டுபிடிப்புகளுக்கான சூழலை வளர்க்க உதவுகிறது.

நமது இன்றைய மாணவர்கள் நாளைய கண்டுபிடிப்பாளர்களாக மாறுவதற்கு உதவஇது வலுவான அடித்தளத்தை வழங்கும்.

பாம்பு பிடிக்கும் இனத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண் கம்ப்யூட்டரின் மௌஸ்–ஐ தன்வசப்படுத்திக் கொண்டு டிஜிட்டல் இந்தியாவின் வசதிகள் அனைத்தையும் தனக்குவசதியாகச் செய்து கொண்டதைக் கண்டபோது நாம் மிகவும் வியந்து போனேன்.

கிராமத்தில் வசிக்கும் நமது இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவதற்கான வைஃபை மற்றும் இதர டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்திக்கொள்வதைப் பார்க்கும் போது நமக்கு பெருமையாக உள்ளது.

நமது நாட்டிலுள்ள இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலானஇடைவெளியை ஈடுகட்டும் தொழில்நுட்பமாக இது விளங்குகிறது.

இதுபோன்ற சம்பவங்கள்தான் இந்திய வரலாற்றின் புதிய அத்தியாயங்களை எழுதிவருகின்றன.

நண்பர்களே,

மக்களின் ஆதரவுடனும் அவர்களோடு கூட்டாக இணைந்தும் 2014-ம் ஆண்டிலிருந்துஇந்தியா துரிதமான முன்னேற்றங்களை கண்டிருக்கிறது.

மக்களின் பங்கேற்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.

இத்தகைய அனுபவம்தான் தனது குடிமக்கள் அனைவரும் வளரவும், செழுமைபெறவும், சிறப்பான செயல்களை மேற்கொள்ளவும் நமது நாட்டினால் போதுமானவாய்ப்புகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை நமக்குத் தந்துள்ளது.

பத்து ட்ரில்லியன் மதிப்புள்ள ஒரு பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும்நாளையே நாம் எதிர்பார்க்கிறோம்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவதை நாம்எதிர்பார்த்து நிற்கிறோம்.

எண்ணற்ற புதிய தொழில்முனைவுகளைக் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றநாம் விரும்புகிறோம்.

மறுசுழற்சிக்கான எரிசக்தி ஆதாரங்களை நோக்கிய உலகளாவிய முயற்சிக்குதலைமை ஏற்க நாம் விரும்புகிறோம்.

எரிசக்திக்கான பாதுகாப்பை நமது மக்களுக்கு வழங்க நாம் விரும்புகிறோம்.

இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க நாம் விரும்புகிறோம்.

மின்சார ஊர்திகள், எரிசக்தியை சேமிக்கும் கருவிகள் ஆகிய துறைகளில் உலகில்தலைமைப் பொறுப்பில் உள்ள நாடாக இந்தியாவை மாற்ற நாம் விழைகிறோம்.

இத்தகைய இலக்குகளை மனதில் கொண்டுதான் நமது கனவாக உள்ள புதியஇந்தியாவை உருவாக்க நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோமாக!

நன்றி!

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
A chance for India’s creative ecosystem to make waves

Media Coverage

A chance for India’s creative ecosystem to make waves
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives in an accident in Nuh, Haryana
April 26, 2025

Prime Minister, Shri Narendra Modi, today condoled the loss of lives in an accident in Nuh, Haryana. "The state government is making every possible effort for relief and rescue", Shri Modi said.

The Prime Minister' Office posted on X :

"हरियाणा के नूंह में हुआ हादसा अत्यंत हृदयविदारक है। मेरी संवेदनाएं शोक-संतप्त परिजनों के साथ हैं। ईश्वर उन्हें इस कठिन समय में संबल प्रदान करे। इसके साथ ही मैं हादसे में घायल लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार राहत और बचाव के हरसंभव प्रयास में जुटी है: PM @narendramodi"