Quoteஜல் ஜீவன் இயக்க செயலி மற்றும் தேசிய ஜல் ஜீவன் நிதியம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார்
Quoteஇது கிராம மக்களால் மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்படும் இயக்கம் ஆகும்.
Quote”குஜராத் மாநிலத்தில் இருந்து வந்திருப்பதால் வறட்சி போன்ற நிலைமைகளை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நீர் துளியின் முக்கியத்துவம் குறித்தும் நான் புரிந்து கொண்டுள்ளேன். அதனால்தான் குஜராத்தின் முதலமைச்சராக நான் இருந்த போது நீர் கிடைத்தல் மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவை எனது முக்கியமான முன்னுரிமைகளாக இருந்தன”
Quote”இன்று நாட்டின் 80 மாவட்டங்களில் உள்ள 1.25 லட்சம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கப்படுகிறது”
Quote”ஆஸ்பைரேஷனல் மாவட்டங்களில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு எண்ணிக்கை 31 லட்சத்தில் இருந்து 1.16 கோடியாக அத
Quoteகடந்த 70 ஆண்டுகளாக நடைபெற்றதைவிட வெறும் இரண்டே ஆண்டுகளில் மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் கூடுதல் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மத்திய அமைச்சரவையில் எனது சகாக்கள் திருகஜேந்திர சிங் ஷெகாவத்திருபிரஹ்லாத் சிங் படேல்திருபிஷ்வேஸ்வர் துடுமாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள்நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் நீர் சமிதிக்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியில் மெய் நிகர் மூலமாகப் பங்கேற்கும் எனது சகோதர சகோதரிகளே!

வணக்கம்.

அக்டோபர் 2 அன்று காந்தியடிகள் மற்றும் லால் பகதூர் ஷாஸ்திரி அவர்களை நாடு பெருமையுடன் நினைவு கூர்கிறதுஇன்று நாடு முழுவதும் உள்ள கிராமங்கள்கிராம சபைகள் மூலம் 'ஜல் ஜீவன் சம்வாத்'க்கு ஏற்பாடு செய்கின்றனஜல் ஜீவன் மிஷன் ஒரு கிராமத்தால் இயக்கப்படுவதோடுபெண்கள் சார்ந்த இயக்கமுமாகும்.

சகோதர சகோதரிகளே,

இந்த இயக்கம் தொடர்பான அனைத்து தகவல்களும் ஜல் ஜீவன் மிஷன் செயலியில் கிடைக்கும்கிராம மக்கள் இந்த செயலியின் உதவியுடன் நீரின் தூய்மையை உன்னிப்பாகக் கண்காணிக்க முடியும்.

நண்பர்களே,

இன்று நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளதுசுமார் இரண்டு லட்சம் கிராமங்கள் கழிவு மேலாண்மையில் ஈடுபட்டுள்ளன40,000 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நிறுத்த முடிவு செய்துள்ளனநீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டிருந்த காதிஇப்போது பல மடங்கு விற்கப்படுகிறதுஇது போன்ற பல்வேறு  முயற்சிகளாலும்நாடு சுய சார்பு இந்தியாவை அடைவது என்ற தீர்மானத்துடன் முன்னேறிச் செல்கிறது.

நண்பர்களே,

'கிராம சுயாட்சி என்பதன் உண்மையான அர்த்தம்அது தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே என்று காந்தியடிகள் கூறியுள்ளார்நான் குஜராத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தபோதுகிராம சுயாட்சி கொண்டு வருவதற்கான பாக்கியம் எனக்கு கிடைத்ததுபல்வேறு  நலத்திட்டங்களுக்காகபல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை குஜராத் வென்றுள்ளது.

நண்பர்களே,

2014 ஆம் ஆண்டில் நாடு எனக்கு ஒரு புதிய பொறுப்பை அளித்தபோதுகுஜராத்தில் கிராம சுயாட்சியின் அனுபவத்தை தேசிய அளவில் விரிவுபடுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததுகிராம பஞ்சாயத்துகளுக்குகுறிப்பாக நீர் மற்றும் சுகாதாரத்திற்காக அரசு 2.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளதுஜல் ஜீவன் மிஷன் மற்றும் நீர் சமிதிக்கள் ஆகியவை கிராம சுயாட்சிக்கான  மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஒரு பெரிய சான்றாகும்.

நண்பர்களே,

ஒவ்வொரு சொட்டு நீரின் முக்கியத்துவத்தையும் நான் அறிவேன்குஜராத்தின் முதல்வராக இருந்த போது மக்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதும் நீர் சேமிப்பும் எனது முன்னுரிமைகளாக இருந்தன.  நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதையும் உறுதி செய்தோம்.

 

2019 ல் ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்டதில் இருந்துஐந்து கோடி வீடுகளுக்கு இப்போது தண்ணீர் இணைப்பு உள்ளதுஇன்றுநாட்டின் 80 மாவட்டங்களில் உள்ள 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் சென்றடைகிறதுகடந்த எழுபதாண்டுகளில் செய்த வேலையுடன் ஒப்பிடுகையில்இன்றைய இந்தியாஇரண்டு வருடங்களில் அதை விட அதிகமாகச் செய்துள்ளது.

 

|

சகோதர சகோதரிகளே,

இந்தியாவின் வளர்ச்சிக்கு தண்ணீர் பற்றாக்குறை தடையாக மாறாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்புநாட்டின் எந்தப் பகுதிக்கும் 'டேங்கர்கள்அல்லது 'ரயில்கள்மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நண்பர்களே,

தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்பவர்களுக்குத் தான் நீரின் மதிப்பு புரியும்போதுமான தண்ணீர் உள்ள ஒவ்வொரு குடிமகனும்தண்ணீரை சேமிக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்உலகெங்கிலும் உள்ள ஆபத்தான நீர் நிலைமையை அவர்கள் உணரவில்லை.

நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளும் கிராமத்தில் உள்ள நீர் ஆதாரங்களின் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்காக முழு மனதுடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

ஒரு காலத்தில்மூளை அழற்சிஅதாவது மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாட்டின் 61 மாவட்டங்களில் எட்டு லட்சம் குழாய் இணைப்புகள் மட்டுமே இருந்தனஇன்று இந்த எண்ணிக்கை 1.11 கோடியாக அதிகரித்துள்ளதுவளர்ச்சி பந்தயத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது

நண்பர்களே,

முதல் முறையாக நீர் சம்பந்தப்பட்ட விசயங்களில் பெரும்பாலானவைதண்ணீரை திறம்பட மேலாண்மை செய்வதற்காகஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனகங்கை நீர் மற்றும் பிற ஆறுகளை மாசு இல்லாததாக மாற்றுவதற்கான தெளிவான உத்தியுடன் பணிகள் நடைபெறுகின்றனஅடல் புஜல் யோஜனாவின் கீழ்நாட்டின் ஏழு மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனகடந்த ஏழு ஆண்டுகளில்பிரதமர் கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் குழாய் பாசனம் மற்றும் நுண்ணீர் பாசனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதுஇதுவரை, 13 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்கள் நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனபெர் டிராப் மோர் க்ராப்ஒவ்வொரு துளி தண்ணீருக்கும்அதிக பயிர் போன்ற பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனநீண்டகாலமாக நிலுவையில் உள்ள 99 நீர்ப்பாசனத் திட்டங்களில் கிட்டத்தட்ட பாதி நிறைவடைந்துள்ளனமீதமுள்ளவைக்கான பணிகள் முழுவீச்சில் உள்ளனநாடு முழுவதும் உள்ள அணைகளின் சிறந்த மேலாண்மைக்காகவும்பராமரிப்புக்காகவும்ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுடன் ஒரு சிறப்பு இயக்கம் நடத்தப்படுகிறதுஇதன் கீழ், 200 க்கும் மேற்பட்ட அணைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன.

நண்பர்களே,

ஒவ்வொரு வீட்டையும் தண்ணீர் சென்றடைந்தால்குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்சமீபத்தில்பிரதமர் போஷன் சக்தி நிர்மாணத் திட்டத்தையும் அரசாங்கம் அங்கீகரித்ததுஇத்திட்டத்தின் கீழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில்குழந்தைகள் கல்வி கற்க முடியும்அவர்களின் ஊட்டச்சத்தும் உறுதி செய்யப்படும்இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.54,000 கோடிக்கு மேல் செலவிடப் போகிறதுஇது நாட்டின் சுமார் 12 கோடி குழந்தைகளுக்குப் பயனளிக்கும்.

நண்பர்களே,

ஒரு சொல்வழக்கு உள்ளதுஒரு சிறிய கிணறு மக்களின் தாகத்தைத் தணிக்கும்அதேசமயம் ஒரு பெரிய கடலால் அது இயலாதுஇது எவ்வளவு உண்மைநீர் சமிதிக்கள் ஏழைகள்-தலித்துகள்-தாழ்த்தப்பட்ட -ஆதிவாசிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றனஜல் ஜீவன் மிஷனின் கீழ் உருவாக்கப்பட்ட நீர் சமிதி உறுப்பினர்களில் 50 சதவிகிதம் உறுப்பினர்கள், பெண்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்குறுகிய காலத்தில் சுமார் 3.5 லட்சம் கிராமங்களில் நீர் சமிதிக்கள் செயல்படுகின்றனபெண்களுக்கு,  தங்கள் கிராமங்களின் நீரை சோதிக்க சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 

|

நண்பர்களே,

கிராமப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் நமது அரசின் முன்னுரிமைகளுள் ஒன்றாகும் . வீடுகளிலும் பள்ளிகளிலும் கழிப்பறைகள்மலிவான சானிட்டரி பேட்கள்கருவுற்றிருக்கும் காலத்தில் ஊட்டச்சத்துக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் வழங்குதல்தடுப்பூசி இயக்கங்கள் போன்றவை மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதுபிரதமர் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ்இரண்டு கோடிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சுமார் ரூ8,000 கோடி நேரடி உதவி வழங்கப்பட்டுள்ளதுகிராமங்களில் கட்டப்பட்டுள்ள 2.5 கோடி நிரந்தர வீடுகளில் பெரும்பாலானவை பெண்களுக்குச் சொந்தமானவைஉஜ்வாலா யோஜனா திட்டம் பல கோடி கிராமப்புறப் பெண்களை விறகு அடுப்பு புகையிலிருந்து விடுபடச் செய்துள்ளது.

முத்ரா திட்டத்தின் கீழ் 70 சதவீத கடன்களை பெண் தொழில்முனைவோர்கள் பெற்றுள்ளனர்கிராமப்புறப் பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர்கடந்த ஏழு ஆண்டுகளில் சுயஉதவிக் குழுக்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளனதேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ், 2014 க்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சகோதரிகளுக்கு அரசாங்கம் அளித்த உதவித்தொகை கடந்த ஏழாண்டுகளில் சுமார் 13 மடங்கு அதிகரித்துள்ளதுமேலும்சுய உதவி குழுக்கள் மூலம் இந்த தாய்மார்களுக்கும்சகோதரிகளுக்கும் 4 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி கிடைத்துள்ளதுசுயஉதவிக் குழுக்களுக்குஅரசாங்கம்பிணையில்லாக் கடன்களை கணிசமாக அதிகரித்துள்ளது.

சகோதர சகோதரிகளே,

இந்தியாவின் வளர்ச்சிகிராமங்களின் வளர்ச்சியைப் பொறுத்ததுகிராமங்களில் உள்ள விலங்குகள் மற்றும் வீடுகளில் இருந்து கிடைக்கும் உயிரி கழிவுகளைப் பயன்படுத்த கோபார்தன் திட்டம் நடத்தப்படுகிறதுஇத்திட்டத்தின் கீழ் 150 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300 க்கும் மேற்பட்ட உயிரி எரிவாயு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளனகிராம மக்கள் சிறந்த முதலுதவி பெறவும்,  தேவையான சோதனைகளை கிராமங்களிலேயே செய்து கொள்ளும் வகையிலும், 1.5 லட்சம் சுகாதாரஆரோக்கிய மையங்கள் உருவாக்கப் பட்டுள்ளனஇவற்றில்சுமார் 80,000 சுகாதார ஆரோக்கிய மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளனஅங்கன்வாடிகளில் பணிபுரியும் நமது சகோதரிகளுக்கு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதுகிராமங்களுக்கு தேவையான வசதிகளும்பிற அரசு சேவைகளும் கிடைக்க தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பிரதமரின் ஸ்வமித்வா யோஜனா திட்டத்தின் கீழ்கிராம நிலங்கள் மற்றும் வீடுகளின் டிஜிட்டல் சொத்து அட்டைகள் ட்ரோன்களின் உதவியுடன்மேப்பிங் மூலம் தயாரிக்கப்படுகின்றனஇன்று ஆப்டிகல் ஃபைபர் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் பஞ்சாயத்துகளை எட்டியுள்ளதுஇன்று நகரங்களை விட கிராமங்களில் அதிகமான மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்இன்று மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள்கிராமங்களில் பல்வேறு அரசாங்க திட்டங்களின் சேவைகளை வழங்குவதோடு,  ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கின்றன.

இன்று அனைத்து வகையான கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கும் சாதனையளவில் முதலீடு செய்யப்படுகிறதுபிரதமர் கிராமின் சடக் யோஜனா திட்டம்ஒரு லட்சம் கோடி ரூபாய் வேளாண் நிதிகிராமங்களுக்கு அருகில் குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல்தொழில்துறை கிளஸ்டர்கள் உருவாக்குதல்விவசாய சந்தைகளை நவீனமயமாக்குதல்என ஒவ்வொரு துறையிலும் விரைவான பணிகள் நடந்து வருகின்றனஜல் ஜீவன் மிஷனுக்காக ஒதுக்கப்பட்ட 3.60 லட்சம் கோடி ரூபாய் கிராமங்களில் மட்டுமே செலவிடப்படும்.

நண்பர்களே,

இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் அதன் இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் நான் என் உரையை நிறைவு செய்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

நன்றி!

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
How GeM has transformed India’s public procurement

Media Coverage

How GeM has transformed India’s public procurement
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister lauds the new OCI Portal
May 19, 2025

The Prime Minister, Shri Narendra Modi has lauded the new OCI Portal. "With enhanced features and improved functionality, the new OCI Portal marks a major step forward in boosting citizen friendly digital governance", Shri Modi stated.

Responding to Shri Amit Shah, Minister of Home Affairs of India, the Prime Minister posted on X;

"With enhanced features and improved functionality, the new OCI Portal marks a major step forward in boosting citizen friendly digital governance."