வணக்கம்!
பாரத் மாதா கி ஜே!
குஜராத்தின் ஆளுனர் ஆச்சாரிய தேவ்வ்ரத் அவர்களே, மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான சி.ஆர்.பாட்டீல் அவர்களே, குஜராத்தின் விளையாட்டுக்கள் துறை இணையமைச்சர் திரு.ஹர்ஷ் சிங்வி அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள் திரு.ஹஷ்முக் பாய் பட்டேல், திரு.நர்ஹரி அமீன், அகமதாபாத் மேயர் திரு.கிரித் குமார் பார்மர் அவர்களே, இதர பிரமுகர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே!
ஆர்வம் மிகுந்த இளமையின் கடல் என் முன்னால் இருக்கிறது. துடிப்புமிக்க உற்சாகமுள்ள இந்த அலைகள் குஜராத்தின் இளைஞர்கள் அனைவரும் வானத்தைத் தொடுவதற்கு தயாராகி விட்டார்கள் என்பதன் தெளிவான சித்திரமாக இருக்கின்றன. இது விளையாட்டுக்களின் மகா கும்பமேளா மட்டுமல்ல, குஜராத்தின் இளையோர் சக்தியின் கும்பமேளாவாகவும் உள்ளது. 11-வது விளையாட்டுக்கள் மகா கும்பமேளாவுக்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த மாபெரும் நிகழ்வுக்காக குஜராத் அரசை குறிப்பாக முதலமைச்சர் திரு.பூபேந்திர பாய் பட்டேலை நான் பாராட்டுகிறேன். கொரோனா காரணமாக விளையாட்டுக்கள் கும்பமேளா இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பூபேந்திர பாய் தொடங்கி வைத்துள்ள இந்த மாபெரும் நிகழ்வு புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் இளம் விளையாட்டு வீரர்களால் நிறைந்துள்ளது.
நண்பர்களே,
12 ஆண்டுகளுக்கு முன் 2010-ல் நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது விளையாட்டுக்கள் மகா கும்பமேளா தொடங்கப்பட்டது இன்னமும் நினைவில் உள்ளது. அந்த விதை இப்போது மிகப் பெரிய ஆலமரமாக வடிவம் பெற்றிருப்பதை நான் காண்கிறேன். முதலாவது விளையாட்டுக்கள் கும்ப மேளா 16 விளையாட்டுக்களில் 13 லட்சம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்புடன் தொடங்கியது. 2019-ல் இந்த எண்ணிக்கை 36 விளையாட்டுக்கள் மற்றும் 26 பாரா விளையாட்டுக்களில் 40 லட்சம் பேர் என அதிகரித்தது. கபடி முதல் யோகாசனம் வரை, டென்னிஸ் முதல் வாள்வீச்சு வரை தற்போது 40 லட்சம் என்பது 55 லட்சத்தை அடைந்துள்ளது.
நண்பர்களே,
உக்ரைனின் போர்க்களத்திலிருந்து நாடு திரும்பியிருக்கும் இளைஞர்கள் வெடிகுண்டுகளிலிருந்தும், துப்பாக்கிச்சூடுகளிலிருந்தும் தப்பித்து வந்திருக்கிறார்கள். நாடு திரும்பியப் பின் அவர்கள் கூறியது என்ன? “மூவர்ணக் கொடியின் பெருமை என்ன என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். உக்ரைனில் அதனை நாங்கள் உணர்ந்தோம்” என்று அவர்கள் கூறினர். ஆனால் நண்பர்களே, இன்னொரு விஷயத்தை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். பதக்கங்கள் வென்ற பின் நமது விளையாட்டு வீரர்கள் மேடையில் நிற்கும்போது மூவர்ணக்கொடி அசைக்கப்படும்போது இந்தியாவின் தேசியகீதம் இசைக்கப்படும்போது நீங்கள் தொலைக்காட்சியைக் கண்டிருக்க வேண்டும். நமது விளையாட்டு வீரர்களின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீரும், பெருமிதமும் வெளிபடும். இதுதான் தேசபக்தி.
நண்பர்களே,
இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் இந்தியா போன்ற இளைய தேசத்திற்கு வழிகாட்டுவதில் மிகப் பெரிய பங்களிப்பு செய்திருக்கிறீர்கள். இளைஞர்கள் மட்டுமே எதிர்காலத்தை உருவாக்க முடியும். இதற்காக உறுதி எடுத்து அர்ப்பணிப்புடன் ஈடுபடும்போது அதனைக் கட்டமைக்க முடியும். இந்த விளையாட்டுக்கள் மகாகும்பமேளாவுக்கு கிராமங்கள், சிறு நகரங்கள், பெரு நகரங்கள் என குஜராத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் கனவுகளில் உங்கள் பகுதியின் எதிர்காலத்தை நான் காண்கிறேன். உங்கள் மாவட்டத்தின் எதிர்காலத்தை நான் காண்கிறேன். உங்கள் கனவுகளின் ஒட்டு மொத்த குஜராத்தின் நாட்டின் எதிர்காலத்தை நான் காண்கிறேன். புதிய தொழில் இந்தியாவிலிருந்து உயர்ந்து நிற்கும் இந்தியா வரை, இந்தியாவில் உற்பத்தி என்பதிலிருந்து தற்சார்பு இந்தியா மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்பது வரை புதிய இந்தியாவின் ஒவ்வொரு இயக்கத்திற்கும் இந்திய இளைஞர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்தியாவின் ஆற்றல் என்ன என்பதை நமது இளைஞர்கள் காண்பிக்கின்றனர்.
நண்பர்களே,
நீங்கள் விளையாடும் போது உடல் தகுதியோடு இருங்கள். ஆரோக்கியத்தோடு இருங்கள். அப்போதுதான் நாட்டின் ஆற்றலுடன் உங்களை இணைத்துக் கொள்ள முடியும். அப்போதுதான் நாட்டின் சக்திக்கு மதிப்பை கூட்டுபவராக நீங்கள் இருக்க முடியும். அப்போதுதான் தேசக் கட்டுமானத்திற்குப் பங்களிப்பு செய்ய முடியும். உங்களைப் போன்ற நட்சத்திரங்கள் உங்களுக்குப் பொருத்தமான துறைகளில் மிளிர்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்க நான் விரும்புகிறேன். காலம் நிறைய மாறி விட்டது. ஒரு ஆண் அல்லது பெண் குழந்தையை நீங்கள் கொண்டிருந்தால் அவர்களுக்கு விளையாட்டுக்களில் ஆர்வமிருந்தால் அவர்களின் திறமையையும், ஆர்வத்தையும் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். மேலும் முன்னேற ஊக்கமளியுங்கள். குஜராத்தின் விளையாட்டு வீரர்கள் இந்தியாவின் விளையாட்டு வீரர்களுடன் இணைவார்கள். இந்த எதிர்பார்ப்போடு பூபேந்திர பாய் அவர்களையும், அவரது ஒட்டு மொத்த குழுவையும் நான் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். இளைஞர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு சேர்ந்து உரக்க முழங்குங்கள்.

உங்களுக்கு மிக்க நன்றி!