“பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற போராட்டம், இந்தியர்களாகிய நமது கூட்டு வலிமையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உணரச் செய்தது”
“சீருடைப் பணியாளர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்து உருவாகியிருந்தது ஆனால் அந்த கருத்து தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது சீருடைப் பணியாளர்களை காணும் மக்கள், அவர்களிடமிருந்து உதவிக்கான உத்தரவாதத்தை பெறுகின்றனர்”
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த மனஅழுத்தம் இல்லாத பயிற்சி முறைகள் அவசியம்”

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் மற்றும் பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற தண்டி யாத்திரை போராட்டம்,  இந்த நாளில் தான் நடந்தது. இந்தியர்களாகிய நமது கூட்டு வலிமையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உணரச் செய்தது.

முன்பு காலனி ஆதிக்க ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு என்பது காலனி ஆதிக்கத்தின் நிர்வாகிகளை சாந்தப்படுத்துவதற்காக மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. அதே போன்று, தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பெருமளவு முன்னேற்றம் அடைந்த போதிலும், முந்தைய ஆட்சிக் காலங்களில் பாதுகாப்பு படையினரின் நிலைமை பெருமளவு மாறுபட்டதாக இருந்தது. ஆனால் ஜனநாயக காலகட்டத்திற்கேற்ப செயல்படத் தேவையான பேச்சு வார்த்தை மற்றும் இதர மென்மையான திறன்கள் தற்போதைய காவல்துறையினருக்கு தேவைப்படுகிறது.

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் மீதான எண்ணத்தை மாற்ற வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் பிரபலமான கலாச்சாரத்தில் காவல்துறையினரை சித்தரிப்பது உதவிகரமாக இருந்ததில்லை. பெருந்தொற்று காலத்தில் காவல்துறை பணியாளர்கள் மனிதநேயத்துடன் பணியாற்றியதை  அனைவரும் அறிவோம். சுதந்திரத்திற்கு பிறகு, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளில் சீர்திருத்தம் செய்திருக்க வேண்டும். சீருடைப் பணியாளர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்து உருவாகியிருந்தது ஆனால் அந்த கருத்து தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது சீருடைப் பணியாளர்களை காணும் மக்கள், அவர்களிடமிருந்து உதவிக்கான உத்தரவாதத்தை பெறுகின்றனர்.

நண்பர்களே, பணிச்சுமையால் ஏற்படும் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள, காவல்துறையினருக்கான கூட்டுக்குடும்ப கட்டமைப்பின் ஆதரவு குறைந்து வருவதை அனைவரும் அறிவோம். மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்ய யோகா நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள் பாதுகாப்பு படைகளில் இருக்க வேண்டியதன் அவசியமாகும். நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த மனஅழுத்தம் இல்லாத பயிற்சி முறைகள் அவசியம்.

குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், அவர்களை பிடிப்பதற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளும் இந்தத் துறைக்கு பங்களிப்பை வழங்க வகை செய்யும்.

நண்பர்களே,

காந்திநகரில் தேசிய சட்டப்பல்கலைக்கழகம், பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தடய அறிவியல் பல்கலைக்கழகம் போன்றவை செயல்படுகின்றன. இந்த அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது அவசியம். இந்த துறைகளில் முழுமையான கல்வியை உருவாக்க இந்த அமைப்புகள் அவ்வப்போது ஒருங்கிணைந்து நடத்துவது அவசியம். இந்தப் பல்கலைக்கழகத்தை காவலர் பல்கலைக்கழகமாக கருதக்கூடிய தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம். இது, நாட்டின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகும். கும்பல் மற்றும் கூட்ட உளவியல், பேச்சு வார்த்தைகள், ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்பம் போன்ற பாடப்பிரிவுகளில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.

நண்பர்களே, இங்கு பயிலும் மாணவர்கள் தங்களது சீருடையும், மனித நேய பண்புகளும் ஒன்றிணைந்தவை என்பதை எப்போதும் மனதில் கொள்வதுடன், அவர்களது முயற்சிகளில் சேவை உணர்வு குறைவு ஏற்பட அனுமதிக்கக்கூடாது. பாதுகாப்பு துறையில் இளம் பெண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பு துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். அறிவியல், கல்வி அல்லது பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும் பெண்கள் தான் முன்னணியில் நின்று வழிநடத்துகின்றனர்.

நாடு 100வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் போது நாம் வலிமையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நம்பிக்கையுடன் அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian Markets Outperformed With Positive Returns For 9th Consecutive Year In 2024

Media Coverage

Indian Markets Outperformed With Positive Returns For 9th Consecutive Year In 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister remembers Pandit Madan Mohan Malaviya on his birth anniversary
December 25, 2024

The Prime Minister, Shri Narendra Modi, remembered Mahamana Pandit Madan Mohan Malaviya on his birth anniversary today.

The Prime Minister posted on X:

"महामना पंडित मदन मोहन मालवीय जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। वे एक सक्रिय स्वतंत्रता सेनानी होने के साथ-साथ जीवनपर्यंत भारत में शिक्षा के अग्रदूत बने रहे। देश के लिए उनका अतुलनीय योगदान हमेशा प्रेरणास्रोत बना रहेगा"