பிரதமர் திரு நரேந்திர மோடியும், பூடான் பிரதமர் திரு லியான்சென் டாக்டர் லோட்டே ஷெரிங்கும் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார்கள்.
சமீபத்திய கொவிட்-19 பெருந்தொற்றின் அலையில் இந்திய அரசும், மக்களும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக பூடான் பிரதமர் தெரிவித்தார். பூடான் நாட்டு மக்கள் மற்றும் அரசின் ஆதரவிற்கும், நல்வாழ்த்துகளுக்கும் பிரதமர் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பெருந்தொற்றுக்கு எதிரான பூடானின் போராட்டத்தைக் கையாளும் பேரரசரின் தலைமைப் பண்பை அவர் பாராட்டியதோடு, நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட திரு லியான்சென்சுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதை, பகிர்ந்து கொள்ளப்பட்ட கலாச்சார பாரம்பரியம், மக்களிடையேயான வலுவான இணைப்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியா மற்றும் பூடான் இடையேயான சிறப்பான நட்புணர்வை தற்போதைய நெருக்கடியான சூழல், மேலும் வலுப்படுத்துவதாகத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.