பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர் அஷ்ரப் கனியுடன் தொலைபேசியில் உரையாடினார். இரு தலைவர்களும் தங்களின் பக்ரீத் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவு மற்றும் மருத்துவ உதவிகளை சரியான நேரத்தில் வழங்கிய பிரதமர் மோடிக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் கனி நன்றி தெரிவித்தார். அமைதியான, வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆப்கானிஸ்தானுக்கான தேடலில் ஆப்கானிஸ்தான் மக்களுடன் இந்தியா என்றும் துணை நிற்கும் என்ற உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இரு தலைவர்களும் பிராந்திய பகுதியில் அதிகரித்து வரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் இருதரப்பிற்கும் நன்மை பயக்கும் பிற துறைகள் குறித்த தங்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.