பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.08.2022) நார்வே பிரதமர் மேன்மைதங்கிய திரு. ஜோனாஸ் கர் ஸ்டோருடன் தொலைபேசியில் உரையாடினார்.
வளரும் நாடுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு பருவநிலை நிதியைத் திரட்டுவதற்கான முன்முயற்சிகள் உட்பட, பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து இந்தத் தலைவர்கள் விவாதித்தனர். வளரும் நாடுகளுக்கு சமமான, சரியான நேரத்தில் மற்றும் போதுமான அளவில் பருவநிலை நிதியை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதில் மேன்மைதங்கிய ஸ்டோரின் உறுதிப்பாட்டை அவர் பாராட்டினார்.
நீலப் பொருளாதாரத்திற்கான பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகளை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பசுமை ஹைட்ரஜன், கப்பல் போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி போன்ற துறைகளில் இந்தியா-நார்வே ஒத்துழைப்பு அதிகரித்து வருவது குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.