இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இங்கிலாந்தில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரதமராக திரு ஜான்சன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அவர் மீதும், அவரது கன்சர்வேடிவ் கட்சி மீதும் இங்கிலாந்து மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்திய மக்கள் சார்பிலும், தமது சார்பிலும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர், போரிஸ் ஜான்சனின் திறமை மிக்க தலைமையின்கீழ், இந்தியா – இங்கிலாந்து இடையிலான ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
பிரதமரின் நல்வாழ்த்துகளுக்காக அவருக்கு திரு போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது என்ற தமது உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
விரைவில் இந்தியா வருமாறு திரு ஜான்சனுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டார்.