தொழில்நுட்பம், வாழ்வில் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்குவதற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தின் ஷேர்காவோன் கிராமத்தில் ஒரே ஒரு செல்பேசி வழங்கும் நிறுவனமே இயங்கியதாக மாநிலங்களவை உறுப்பினர் திரு நபம் ரெபியா வெளியிட்டிருந்த தொடர் ட்விட்டர் பதிவிற்கு திரு மோடி பதிலளித்தார்.
மேலும் அவசரகால மருத்துவத் தேவைக்கு இந்த கிராம மக்கள் சாலை வழியாக இட்டாநகருக்கு பயணம் செய்து, மருத்துவரை தங்களது கிராமத்திற்கு அழித்து வரும் நிலை இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது. இன்று, காணொளி அழைப்பு மூலம் மருத்துவரை உடனடியாகத் தொடர்பு கொண்டு அவரது வழிகாட்டுதலின் பேரில் தகுந்த சிகிச்சையை 30 நிமிடங்களுக்குள் வழங்க முடிகிறது. மேலும் அருணாச்சலப் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு இ-சஞ்சீவனி தளம், ஒரு வரப் பிரசாதமாக மாறி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரின் பதிவுகளுக்கு பதிலளித்து பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“தொழில்நுட்பம், வாழ்வில் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தி, குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.”
Technology is positively impacting lives and empowering citizens. https://t.co/UvEK4z1XY0
— Narendra Modi (@narendramodi) March 6, 2023