நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், உலக அளவில் வாழ்க்கைக்கு அதிகாரம் அளிக்கவும் தொழில்நுட்பம் அளப்பரிய ஆற்றலைக் கொண்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி கிறிஸ்டலினா ஜார்ஜீவாவின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி பின்வருமாறு கூறியிருக்கிறார்:
"நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பம் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. பிரகாசமான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக மனிதகுலம் அதை ஒன்றிணைக்கட்டும். @KGeorgieva"
Technology holds immense potential for driving progress on the SDGs and empowering lives globally. May humanity harness it together for a brighter and better future. @KGeorgieva https://t.co/phRuev1jXR
— Narendra Modi (@narendramodi) November 19, 2024