செளத் ஏசியன் கோப்பரேஷன் வலுவான தாக்கத்தை பெற்ற தினமான 5 மே 2017 அன்று வரலாற்றில் பதிவானது. அன்றைய தினம் தான், இந்தியா இரண்டு வருடங்களுக்கு முன்பு உறுதி செய்த அர்ப்பணிப்பை, செளத் ஏசியா சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
செளத் ஏசியா சாட்டிலைட் உடன், செளத் ஏசியன் தேசங்கள் தங்கள் ஒத்துழைப்பை விண்வெளியிலும் நீட்டித்தன!
வரலாற்றின் உருவாக்கத்தை காண, இந்தியா, அஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, நேபாள் மற்றும் ஸ்ரீ லங்கா நாடுகளை சேர்ந்த தலைவர்கள், வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செளத் ஆசியன் சாட்டிலைட் ஆற்றலின் முழு செயல்திறனை அடையமுடியும் என்றார்.
சாட்டிலைட் உடைய மேலான ஆளுமை, கிராமப்புறங்களில், திறனுள்ள தகவல் தொடர்பு, மேலான வங்கி சேவை மற்றும் கல்வியை வழங்குவதை உறுதி செய்யும். மேலான சிகிச்சைக்கு, துல்லியமான பருவ நிலை கணிப்பு மற்றும் மக்களை தொலைதூர மருத்துவத்துடன் இணைப்பது போன்றவற்றிற்கு உதவும்.
“நாம் கைகளை இணைத்து, பரஸ்பரம் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சியை, பகிர்ந்து கொண்டால், நாம் மேம்பாடு மற்றும் செழிப்பை வேகமெடுக்க வைக்க முடியும்,’ என்று ஸ்ரீ மோடி குறிப்பிட்டார்