திறன் சார்ந்த செயல்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி பேசிய பிரதமர் மோடி, இவற்றைப் பயின்றுப் பின்பற்றாவிட்டால், மனிதன் எந்திரமாகி விடுவான் என்று கூறினார். படிப்புக்கும், திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் சரியான நேர ஒதுக்கீடு தேவை என்று அவர் கூறினார்.
கவர்ச்சிகரமான பயிற்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, குழந்தைகள் உண்மையில் எதை விரும்புகிறார்களோ அவற்றை கண்டுபிடிக்க நேரம் செலவிடுமாறு பெற்றோரைப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். “குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கும் பயிற்சிகளை பெற்றோர் தங்களது சுயவிளம்பரத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திறன் சார்ந்த செயல்பாடுகள், கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒவ்வொரு குழந்தையும் என்ன விரும்புகிறதோ, அதனை செய்யட்டும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.