மாண்புமிகு பிரதமர் திரு ஸ்டீஃபன் லோஃப்வென் அவர்களே, ஊடகத் துறை நண்பர்களே!
இது எனது முதலாவது ஸ்வீடன் பயணமாகும். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஸ்வீடனில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்வீடனில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும், மரியாதைக்கும் பிரதமர் திரு லாஃப்வென்னுக்கும், ஸ்வீடன் அரசுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணத்தின் போது பிரதமர் திரு லோஃப்வென் இந்தியா உச்சிமாநாட்டிற்கு இதர நோர்டிக் நாடுகளுடன் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காகவும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்கிற எமது இயக்கத்திற்கு அதன் தொடக்கம் முதலே ஸ்வீடன் வலுவான கூட்டாளியாக செயல்பட்டு வருகிறது. 2016-ல் மும்பையில் நடைபெற்ற ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தில் பிரதமர் திரு லோஃப்வென் அவர்கள், ஒரு பெரிய வர்த்தகக் குழுவினருடன் பங்கேற்றார். வெளிநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சியும் கூட சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்வீடனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் திரு லோஃப்வென் நேரடியாக பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரிய விஷயம். இன்று எங்களிடையே நடைபெற்ற பேச்சுக்களின் முக்கியமான பொருள் இந்தியாவின் மேம்பாடு காரணமாக தோன்றியுள்ள வாய்ப்புகளில் இந்தியாவுடன் ஸ்வீடன் எவ்வாறு பங்கேற்க முடியும் என்பதுதான். இதன் பயனாக இன்று நாங்கள் இருவரும் புதுமைப்படைப்புக் கூட்டாண்மை மற்றும் கூட்டுச் செயல் திட்டத்தை உருவாக்க உடன்பட்டுள்ளோம்.
புதுமைப்படைப்பு, முதலீடுகள், தொடக்க நிலை நிறுவனங்கள், உற்பத்தித் துறை ஆகியவைதான் நமது கூட்டாண்மையின் முக்கியப் பரிமாணங்கள். இவை தவிர, புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி, நகர்ப்புற போக்குவரத்து, கழிவு மேலாண்மை போன்ற பல விஷயங்களிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். இந்த விஷயங்கள்தான் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் இணைந்த முக்கிய விஷயங்கள். வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக இன்று பிரதமர் திரு லாஃப்வென்-உடன், நான் ஸ்வீடன் நாட்டு முன்னணி நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளேன்.
நமது இருதரப்பு உறவுகளின் மற்றொரு முக்கியத்தூண் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகும். பாதுகாப்புத் துறையில் ஸ்வீடன் நீண்டகாலமாக இந்தியாவின் கூட்டாளியாக விளங்குகிறது. எதிர்காலத்திலும் இந்தத் துறையில் குறிப்பாக பாதுகாப்பு உற்பத்தித் துறையில் அநேகம் புதிய வாய்ப்புகள் நமது ஒத்துழைப்புக்காக உருவாக்கப்படும் என்று நம்புகிறேன். நமது பாதுகாப்பு ஒத்துழைப்பு, குறிப்பாக கணினிப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். ஒரு விஷயத்தில் நாங்கள் உடனடியாக ஒன்றுபட்டுள்ளோம், அதாவது, மண்டல மற்றும் உலக நிலைகளில் நமது உறவுகளின் முக்கியத்துவம் என்பதில். சர்வதேச நிலையில் நம்மிடையே நெருங்கிய ஒத்துழைப்பு நிலவுகிறது, அது மேலும் தொடர்ச்சியாக நிலை பெறும்.
ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் ஏற்பட்டு வரும் மேம்பாடுகள் குறித்து விரிவாக இன்று கருத்துப் பரிவர்த்தனை செய்து கொண்டுள்ளோம்.
நிறைவாக பிரதமர் திரு லாஃப்வென்னுக்கு எனது மனதின் அடித்தளத்திலிருந்து மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அனைவருக்கும் மிகவும் நன்றி.
यह मेरी स्वीडन की पहली यात्रा है। भारत के प्रधानमंत्री की स्वीडन यात्रा लगभग तीन दशकों के अंतराल के बाद हो रही है: PM @narendramodi at the Joint Press Meet with @SwedishPM Stefan Löfven pic.twitter.com/5WNzoLqZaT
— PMO India (@PMOIndia) April 17, 2018
भारत के @makeinindia में स्वीडन शुरू से ही मजबूत भागीदार रहा है। 2016 में मुंबई में हमारे 'Make In India' कार्यक्रम में प्रधानमंत्री लवैन स्वयं बहुत बड़े business delegation के साथ शामिल हुए थे: PM @narendramodi pic.twitter.com/bB5WH7cTM9
— PMO India (@PMOIndia) April 17, 2018
आज की हमारी बातचीत में सबसे प्रमुख थीम यही थी कि भारत के विकास से बन रहे अवसरों में स्वीडन किस प्रकार भारत के साथ 'win-win partnership' कर सकता है। इसके परिणामस्वरूप आज हमने एक Innovation Partnership और Joint Action Plan पर सहमति की है: PM @narendramodi pic.twitter.com/Hg7It6YJyi
— PMO India (@PMOIndia) April 17, 2018
हम renewable energy, urban transport, waste management जैसे विषयों पर भी ध्यान दे रहे हैं, जो भारत के लोगों की quality of life से जुड़े विषय हैं: PM @narendramodi during talks with @SwedishPM Mr. Stefan Löfven pic.twitter.com/O7N7xL1BQC
— PMO India (@PMOIndia) April 17, 2018
Trade और Investment से जुड़े विषयों पर आज प्रधानमंत्री लवैन और मैं स्वीडन के प्रमुख CEOs के साथ मिल कर भी चर्चा करेंगे: PM @narendramodi pic.twitter.com/F731HNKCcu
— PMO India (@PMOIndia) April 17, 2018