சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் கீழ் கொண்டாடப்படும் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான தொடர்பை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கருத்துடன், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் கொண்டாடப்படுவதாகப் பிரதமர் கூறினார்.
மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
சௌராஷ்டிரா சங்கமம் குஜராத், தமிழ்நாடு இடையேயான பழங்கால தொடர்பை கொண்டாடுகிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை தங்கள் மாநிலமாக நினைத்து உள்ளூர் கலாச்சாரத்தை கடைப்பிடித்தனர். தமிழ்நாட்டு மக்களும் அவர்களை திறந்த மனதுடன் வரவேற்றனர். இந்த சங்கமம் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பதை கொண்டாடுகிறது.
The #STSangamam celebrates an ancient bond between Gujarat and Tamil Nadu. Centuries ago people from Gujarat made Tamil Nadu their home and embraced the local culture. The Tamil people also welcomed them with open arms. This Sangamam celebrates ‘Ek Bharat Shreshtha Bharat.’ https://t.co/9oimjbLFLs
— Narendra Modi (@narendramodi) March 19, 2023