இந்த தலைசிறந்த நாட்டிற்கு மீண்டுமொருமுறை வருகை தந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். தெரிந்த முகங்களை சந்திப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சி.ஐ.ஐ. மற்றும் கெய்தன்ரெனுக்கு என் நன்றிகள். உங்களுடன் நான் செலவழிக்கும் நேரம் எப்போதும் மிகவும் பயனுள்ளதாகவே உணர்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளில் ஜப்பானுக்கு நான் பலமுறை வந்திருக்கிறேன். ஜப்பானிய தலைமை, அரசு, தொழிற்துறை, மக்கள் ஆகியோருடனான எனது உறவு துவங்கி கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகப்போகிறது.
நண்பர்களே,
இந்தியாவைப் பொறுத்தவரை ஜப்பான் என்ற வார்த்தையை சொன்னாலே தரம், நேர்மை, ஒற்றுமை போன்ற விஷயங்கள் தான் நினைவுக்கு வரும்,
தக்கவைத்துக் கொள்ளக்கூடிய மேம்பாட்டில் உலகிற்கே முன்னோடிகளாக ஜப்பானிய மக்கள் திகழ்கிறார்கள். அதுமட்டுமல்லாது சமூக பொறுப்புணர்வும், நேர்மையான பழக்கவழக்கமும் இங்கு அதிகம்.
உலகின் பல்வேறு பகுதிகளின், குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில், ஜப்பானின் பங்கு எவ்வளவு பெரியது என்பது நமக்குத் தெரியும்.
இந்தியாவின் அடிப்படை கொள்கைகள் நம் இருநாடுகளின் கலாச்சாரத்திலேயே ஊறிப்போன ஒன்று. குறிப்பாக உண்மை குறித்த புத்தரின் சொற்களிலும், மகாத்மா காந்தியின் சொற்களிலும் இருந்து தனது வலிமையை பெற்றுக்கொள்கிறது.
நம் இருநாடுகளின் ஜனநாயக பாரம்பரியம், வளத்துடன் இணைந்த மதிப்புருவாக்கம், ஊக்கமுயற்சி, நவீனமாகவும், வளமாகவும் பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும் என்ற உறுதி போன்றவற்றில் இருந்தே நம் கொள்கைகளுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
அதனால்தான் இணைந்து பணியாற்ற வல்ல மிகச்சரியான நாடுகள் ஜப்பானும், இந்தியாவும்.
இன்னும் சொல்லப்போனால் நம் கடந்தகாலம் நம்மை இணைந்து நிற்கச் சொல்கிறது. நம் நிகழ்காலம் நம்மை இணைந்து பணியாற்றச் சொல்கிறது.
நண்பர்களே,
இந்த 21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என நான் அடிக்கடி சொல்லிவருகிறேன். சர்வதேச பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக ஆசியா உருப்பெற்றிருக்கிறது,
தயாரிப்பு துறையிலும், சேவை துறையிலும் நல்ல வளர்ச்சிபெற்று புதிய கண்டுப்டிப்புகளின் சர்வதேச மையமாகவும் திகழ்கிறது. அதுமட்டுமல்லாது திறன்வாய்ந்த தொழிலாளர்கள் வசிக்குமிடமாகவும், உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 60% கொண்டதாகவும் திகழ்வதால் விரிவடைந்து கொண்டே இருக்கும் சந்தையாகவும் இருக்கிறது.
ஆசியாவின் வளர்ச்சியில் இந்தியாவும், ஜப்பானும் தொடர்ந்து பங்காற்ற வேண்டிய தேவை இருக்கிறது.
ஜப்பானுக்கும், இந்தியாவிற்கும் இடையில் சிறப்பு யுக்திகள் மற்றும் சர்வதேச கூட்டணியின் கீழ் ஒரே மாதிரியான கருத்துக்கள் பெருகிவருவது, உள்நாட்டு பொருளாதாரத்தை வளர்ப்பதோடு, சர்வதேச வளர்ச்சிக்கும் உதவும்.
பலமான இந்தியா- பலமான ஜப்பான், இரு நாடுகளை மட்டுமல்லாது ஆசியாவையும், உலகத்தையுமே கூட ஸ்திரப்படுத்தும் தன்மையோடு இருக்கும்,
நண்பர்களே,
இந்தியா பல்வேறு பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. பல நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் உண்மையான ஆற்றலை வெளிக்கொணரும் நிர்வாகத்தை கட்டமைத்திருக்கிறோம். அதன் பலன்கள் ஏற்கனவே வெளித்தெரிய துவங்கியுள்ளது.
பலவீனமான சர்வதேச பொருளாதார சூழலிலும், இந்தியாவில் நல்ல வளர்ச்சியும், ஏராளமான வாய்ப்புகளும் உள்ளது என்ற செய்தியை உங்களுக்கு தருகிறேன். மிக அருமையான வாய்ப்புகளையும், இந்தியாவின் நம்பகத்தன்மை வாய்ந்த கொள்கைகளையும் பற்றிய செய்தி அது.
2015ல் மிகப்பெரிய பொருளாதாரங்களையெல்லாம் விட இந்திய பொருளாதாராம் வேகமாக வளர்ந்தது. உலக வங்கியும், IMFம் இந்த வளர்ச்சி தொடரும் என கணக்கிட்டது. குறைவாக கூலி, மிகப்பெரிய உள்ளூர் சந்தை, பொருளாதார ஸ்திரத்தன்மை போன விஷயங்கள் எல்லாம் இணைந்து முதலீடு செய்ய அருமையானதொரு இடமாக இந்தியாவை மாற்றியிருக்கிறது.
கடந்து இரண்டு நிதி ஆண்டுகளில், 55பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீடாக இந்தியா வந்திருக்கிறது. இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய அந்நிய முதலீடு மட்டுமல்ல, அந்நிய முதலீட்டு வளர்ச்சியும் இதுவே.
இன்று எல்லாம் சர்வதேச நிறுவனங்களும் இந்தியாவுக்கென்று சிறப்பு யுக்திகளை வைத்திருக்கின்றன. அதற்கு ஜப்பானிய நிறுவனங்கள் விதிவிலக்கல்ல. இன்று இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் ஜப்பான் நான்காவது இடம் வகிப்பதும் ஆச்சரியமான விஷயம் அல்ல.
ஜப்பானிய முதலீடுகள் க்ரீன்-ஃபீல்ட், பிரவுன்-ஃபீல்ட்
திட்டங்களில் மட்டுமல்லாது, தயாரிப்பு, சேவைகள், உட்கட்டமைப்பு, காப்பீடு, ஈ-வணிகம், பங்குச்சந்தை என பல துறைகளிலும் உள்ளது.
எங்கள் தரப்பில் கேட்டால், நிச்சயம் இன்னும் அதிகமான ஜப்பானிய முதலீடு வேண்டும் என்றே கேட்போம். அதற்கு ஏற்ப உங்கள் சந்தேகங்கள், பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கும் வண்ணம் ஆர்வத்துடன் இருக்கிறோம்.
மேலும் ஜப்பானிய தொழிற்நகரங்கள் உள்ளிட்ட சிறப்பு செயல்பாடுகளை பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டுவோம்.
பத்தாண்டுகால தொழில் விசா, ஈ-சுற்றுலா விசா, வந்திறங்கியபின் வழங்கப்படும் விசா ஆகியவை இப்போது ஜப்பானிய பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. அவற்றை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜப்பானுடனான சமூக பாதுகாப்பு ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டுள்ள செய்தி இருதரப்பிலும் பெருகி வரும் தொழிற்சார் ஊழியர்களுக்கு நல்ல செய்தி Friends,
நண்பர்களே,
இந்தியாவின் வளர்ச்சிக்கான தேவைகள் என்பது பிரம்மாண்டமானது. மேம்பாட்டை பொறுத்தவரை மிக விரைவான வளர்ச்சியை காண விளைகிறோம். அதே நேரம் அது சுற்றுச்சூழலை கெடுக்காமல் இருக்கவேண்டும் என்பதிலும் எங்களுக்கு அக்கறை உண்டு.
• சாலைகள், ரயில்பாதைகள் விரைவாக அமைக்க வேண்டும்.
• தாதுக்கள், ஹைட்ரோகார்பன்களை பசுமையான முறையில் ஆய்வு செய்யவேண்டும்.
• வீடுகள், சமுதாய கட்டிடங்களை பசுமையான முறையில் ஏற்படுத்த வேண்டும்.
• ஆற்றலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் உற்பத்திசெய்ய வேண்டும்.
மேலும் வருங்காலத்தை மனதில்கொண்ட இரண்டாம்கட்ட உட்கட்டமைப்பு திட்டங்களும் உள்ளது. பிரத்யேக சரக்கு பாதை, தொழிற்சாலை பாதைகள், அதிவேக ரயில்கள், ஸ்மார்ட் நகரங்கள், கடற்கரை பகுதிகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் ஆகியன அவற்றில் அடங்கும்.
இவையனைத்தும் ஜப்பானிய தொழிற்சாலைகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றவை. இந்தியாவின் தயாரிப்புகளும், ஜப்பானிய தயாரிப்புகள் ஏற்கனவே இணையும் சூழல் உருவாகிவிட்டது.
ஜப்பானிய கார் தயாரிப்பாளர்களின் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பானில் விற்பனை ஆகின்றன. இப்படி இந்தியாவில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாய்ப்புகளை ஆய்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் வண்ணம் எங்கள் கொள்கைகளையும், நடைமுறைகளையும் மேலும் மெருகேத்தி வழங்குவோம் என உறுதிகூறுகிறேன்.
நண்பர்களே,
வணிகத்திற்கு ஏதுவான ஒரு சூழலை ஏற்படுத்தி முதலீடுகளை ஈர்ப்பது என்பது என் முக்கியமான கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. நிலையான, கணிக்கத்தக்க, வெளிப்படையான நடைமுறைகள் இந்தியாவில் தொழில் செய்தற்கான சூழலை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறது.
இணைய நிர்வாகம் என்பது இனி வெறும் வார்த்தையல்ல. சாத்தியப்பட்டுவிட்ட ஒன்று. சரக்கு மற்றும் சேவை வரி சார்ந்த GST எனும் புதிய சட்டத்தை அமலாக்கிறோம்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட கையறவு நிலை, திவால் நிலை சட்டம் முதலீட்டாளர்கள் சுலபமாக வெளியேறவும் வழி செய்கிறது. வணிக நீதிமன்றங்கள், வணிகப்பிரிவுகள் பிரத்யேகமாக அமைத்து வணிகம் சார்ந்த பிரச்சினைகளை சீக்கிரமாக தீர்க்க வழிவகை செய்துள்ளோம்.
நடுவர் தீர்ப்பாயத்தின் வேலைகள் இனி நடுவர் தீர்ப்பாய சட்டத்தை திருத்தியதன் பலனாக விரைவாக நடக்கும். இந்த ஆண்டின் ஜூன் மாதம் அந்நிய முதலீடு குறித்த நடைமுறைகளை மேலும் தளர்த்தியுள்ளோம். அதுமட்டுமல்லாது புதிய அறிவுசார் சொத்துரிமை கொள்கையையும் அறிவித்துள்ளோம்.
இது எல்லாமே புதியதொரு திசையை நோக்கி இந்தியாவின் பொருளாதாரத்தை அழைத்துச் செல்வன. உலகிலேயே மிகவும் வெளிப்படையாக பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவேண்டும் என்பதுதான் எனது கொள்கை.
• உள்வரும் அந்நிய முதலீடு கடந்த இரண்டு ஆண்டுகளில் 52% வளர்ச்சி கண்டுள்ளது
• உலக வங்கி கொண்டு வந்த 2016க்கான உலக லாஜிஸ்டிக்ஸ் செயல்பாட்டு அட்டவணையில் இந்தியா 19 இடங்கள் முன்னேறியுள்ளது.
• இரண்டு ஆண்டுகளில் சர்வதேச போட்டித்தன்மை நிறைந்த நாடுகளின் அட்டவணையில் இந்தியா 32 இடங்கள் முன்னேறியுள்ளது. 2015 உலக முதலீட்டு அறிக்கையின்படி அந்நிய முதலீடு நிறைந்த முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது.
நண்பர்களே,
இந்தியாவுக்கு அளவுகோல், வேகம், திறன் வேண்டும் என எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். இந்த மூன்றிலுமே ஜப்பானால் பங்காற்ற முடியும்.
ஜப்பானின் பங்கு உள்ள எங்களது திட்டங்களான பிரத்யேக சரக்கு பாதைகள், டில்லி-மும்பை தொழில் பாதைகள், மெட்ரோ ரயில் மற்றும் அதிவேக ரயில் திட்டங்கள் ஆகியன அளவுகோலையும், வேகத்தையும் வெளிப்படுத்துகின்றன.
திறன் வளர்ப்புக்கென பிரத்யேக முன்னெடுப்புகள் ஏற்கனவே செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமான இந்த துறையிலும் நம் ஒத்துழைப்பு நீள்கிறது. இங்கே வீற்றிருக்கும் ஜப்பானிய வணிக மற்றும் தொழிற்சாலை தலைவர்கள், ஜப்பானிய தொழில்நுட்பமும் இந்தியாவின் மனித வளமும் சேரும்போது அது இருதரப்புக்குமே வெற்றியை பெற்றுத்தரும் என்ற எனது கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்.
நான் முன்னரே சொன்னதைப் போல உங்கள் மென்பொருளும், எங்கள் வன்பொருளும் இணையும்போது அதன் மதிப்பே தனி. இருநாடுகளுக்கும் அது நன்மை பயக்கும்.
நாம் இன்னும் உறுதியாக கரங்களை இறுகப்பற்றி செயல்படுவோம். இன்னும் பல பெரிய, ஒளிமயமான வாய்ப்புகளை நோக்கி முன்னேறிச்செல்வோம்.
நன்றி.
The very word "Japan" in India symbolizes quality, excellence, honesty and integrity: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 11, 2016
Our past has desired us to stand together. Our present is encouraging us to work together: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 11, 2016
Asia has emerged as the new centre of global growth. This is because of its competitive manufacturing, and expanding markets: PM
— PMO India (@PMOIndia) November 11, 2016
I have also been saying that India and Japan will play a major role in Asia’s emergence: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 11, 2016
Strong India-strong Japan will also be a stabilising factor in Asia and the world: PM @narendramodi while interacting with business leaders pic.twitter.com/nVSTPlaUrK
— PMO India (@PMOIndia) November 11, 2016
The news is not only about India’s Incredible opportunities, but also about its Credible Policies: PM @narendramodi pic.twitter.com/h50xy1dlGq
— PMO India (@PMOIndia) November 11, 2016
Japan has emerged as the 4th largest source of FDI and that too in various fields: PM @narendramodi talking of India-Japan economic ties
— PMO India (@PMOIndia) November 11, 2016
'Made in India' and 'Made by Japan' combination has started working wonderfully: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 11, 2016
Want to make India the most open economy in the world: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 11, 2016
Let us march forward and explore bigger potentials and brighter prospects: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 11, 2016