நேபாளத்தின் லும்பினியில் உள்ள லும்பினி மடாலய மண்டலத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தை கட்டமைப்பதற்கான பூமி பூஜையை நேபாள பிரதமர் மேதகு ஷேர் பகதூர் தூபாவுடன் இணைந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டார்.
2. மார்ச் 2022 இல் சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கும் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளைக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளை, சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கு ஒதுக்கியுள்ள இடத்தில், புதுதில்லியின் சர்வதேச புத்த கூட்டமைப்பால் இந்த மையம் அமைக்கப்படும்.
3. தேராவாடா, மஹாயானா மற்றும் வஜ்ராயானா ஆகிய மூன்று முக்கிய புத்த பாரம்பரியங்களைச் சேர்ந்து துறவிகளால் பூமிபூஜை மேற்கொள்ளப்பட்ட பிறகு, மையத்தின் மாதிரியை இரு நாடுகளின் பிரதமர்களும் திறந்து வைத்தனர்.
4. புத்த ஆன்மீக அம்சங்களை உலகம் முழுவதும் உள்ள யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் பெறுவதற்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த வசதிகளை, கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்த மையம் வழங்கும். நவீன கட்டிடமாக, எரிசக்தி, தண்ணீர் மற்றும் கழிவுகளைக் கையாள்வதில் நிகர பூஜ்ஜிய தன்மை வாய்ந்ததாக விளங்குவதுடன், பிரார்த்தனை அரங்குகள், தியான மையங்கள், நூலகம், கண்காட்சி அரங்கம், உணவகம், அலுவலகம் மற்றும் இதர வசதிகளையும் இந்த மையம் உள்ளடக்கியிருக்கும்.