பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேசியக் குடியரசு நாட்டில் 2018, மே 29, 30 ஆகிய நாட்களில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்தோனேசிய அதிபர் மேதகு திரு. ஜோகோ விடோடோவும் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் இந்திய பசிபிக் கடல் மண்டலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான தொலைநோக்கைப் பகிர்ந்துகொண்டனர். இதன் முக்கியமான அம்சங்கள்:
இந்தோனேசியாவின் அப்போதைய அதிபர் ஜோகோவி இந்தியாவில் 2016ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பயணம் மேற்கொண்டபோது, கடல்சார் ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளும் உருவாக்கிய கூட்டறிக்கை நினைவுகூரப்படுகிறது.
இந்தியாவும் இந்தோனேசியாவும் கடல்சார் அண்டை நாடுகளாக உள்ளன. இரு தரப்பு உறவுகளும் கடல்வழியாக அமைந்த நாகரிகத் தொடர்புகள் கொண்டதாக அமைந்துள்ளன. மண்டல அளவிலும் உலக அளவிலும் கடல்சார் நடவடிக்கைகளுக்கு உகந்த சூழலை உருவாக்குவது குறித்த ஒரே மாதிரியான பார்வைகள் கொண்டவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்திய – பசிபிக் மண்டலத்தில் அமைதி, நிலைத்தன்மை, வலுவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம தெரிவிக்கப்படுகிறது.
இந்திய – பசிபிக் மண்டலத்தில் 7,500 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதிகளையும் 1,380 தீவுகளையும், இருபது லட்சம் சதுர கி.மீ. தனித்துவம் உடைய பொருளாதார மண்டலத்தையும் கொண்டதாக இந்தியா உள்ளது. இந்தோனேசியா உலகில் மிகப் பெரிய தொன்மை நிலை கொண்ட நாடாகத் திகழ்கிறது. 1,08,000 கி.மீ. கடலோரப் பகுதிகள், 17,504 தீவுகள், 64,00,000 சதுர கி.மீ. கடற்பரப்பு கொண்டதாக உள்ளது. இதுதான் இரு நாடுகளையும் இந்திய பசிபிக் கடல் பகுதிகளில் ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த இரு கடல்கள் இணைந்த கடல் மண்டலம் உலக அளவில் கடல்சார் தொழில் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியம் என ஏற்கப்படுகிறது.
கடல்சார் சட்டம் குறித்து 1982ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. மாநாட்டின் கொண்டுவரப்பட்ட ஐக்கிய நாடுகள் சாசனம் (UN Convention on the Law of Sea – UNCLOS), 1976ல் உருவான தென்கிழக்கு ஆசியாவில் இணக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை (Treaty of Amity and Cooperation in Southeast Asia – TAC) உள்ளிட்ட சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிக்க இசைவு தெரிவிக்கப்படுகிறது.
இந்திய – பசிபிக் மண்டலம் உள்ளடக்கிய பகுதியில் தாராளமான, திறந்த, வெளிப்படைத்தன்மையான, அமைதியான, வளம் ஆகியவற்றை அடையவும், இறையாண்மை, மண்டல ஒருமைப்பாடு, சர்வதேச சட்டம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சாசனம் (UNCLOS), சுதந்திரமான கடல் மற்றும் வான்வழிப் பயணம், பரஸ்பர பலனுள்ள வர்த்தகம், முதலீட்டு நடைமுறை ஆகியவற்றை மீட்டுறுதி செய்யும் முடிவெடுக்கப்படுகிறது.
ஐநா சாசனம் (UNCLOS) மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் இந்திய பசிபிக் மண்டலத்தில் கடல்சார் பாதுகாப்பைப் பராமரித்தல், அமைதிக்கான பாதுகாப்பு நடவடிக்கை, நிலைத்தன்மை, நீடித்த பொருளாதார வளர்ச்சி, கடல்சார் மேம்பாடு ஆகிய தேவைகளை ஒப்பேற்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை ஒருங்கிணைந்த ராஜீய கூட்டாண்மையாக உயர்த்துவது, இரு தரப்பு பாதுகாப்பு விவாதம், முத்தரப்பு விவாதம் ஆகிய புதிய நடைமுறைகளை உருவாக்குதல், அமைதிக்கான வெளிகளைக் கண்டறிதல், அவற்றைப் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பு உடன்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திடுவது வரவேற்கப்படுகிறது.
இந்தியக் கடல்மண்டல நாட்டு அமைப்பின் (IORA) 20வது ஆண்டு விழா ஜகார்த்தாவில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. அதையொட்டி நடைபெற்ற உச்சி மாநாட்டில் பல தீர்மானங்கள் முடிவுகள் எட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஜகார்த்தா கூட்டத் தீர்மானமும் இந்தியப் பெருங்கடல் மண்டல நாட்டு அமைப்பின் (Indian Ocean Rim Association – IORA) செயல் திட்டமும் கொண்டுவரப்பட்டன. அவற்றின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மூலம் அமைதி, நிலையான, வளர்ச்சிமிக்க இந்தியக் கடல் மண்டலத்தை உருவாக்குவதில் இந்தியக் கடல்மண்டல நாட்டு அமைப்பின் (IORA) முன்னாள் தலைவர்கள் என்ற முறையில் இந்தியாவும் இந்தோனேசியாவும் ஆற்றிய பங்களிப்பு பாராட்டப்படுகிறது.
இந்த மண்டலத்திலும் சர்வதேச அளவிலும் அமைதி, நிலைத்தன்மை, வளம் நிலவும் வகையில் ஐக்கிய நாடுகள் சாசனம் (UNCLOS) பிறப்பித்த ஒழுங்குமுறைகளின்படி சுதந்திரமான, திறந்த கடல்பகுதி அமைந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது.
ஆள் கடத்தல், ஆயுதம், போதைப் பொருள் கள்ளப் பணம் கடத்துதல், சட்டவிரோத, கண்டறியப்படாத மீன்பிடித் தொழில், பயங்கரவாதிகளின் நடமாட்டம் ஆகியவை உள்பட இந்திய பசிபிக் மண்டலத்தில் அதிகரித்துவரும் பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
தகவல் தொடர்பை மேம்படுத்துவதன் மூலம் இந்திய பசிபிக் மண்டலத்தின் வளமைக்காக நமது ஒருமித்த நலன்கள் வலியுறுத்தப்படுகின்றன.
இது சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு, நல்ல ஆளுகை, சட்டம், திறந்தநிலை, வெளிப்படைத்தன்மை, சமத்துவம் மற்றும் பரஸ்பர இறையாண்மை, மண்டல ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். இதன்படி ஆசியான் – இந்தியா கடல்போக்குவரத்து ஒப்பந்தத்தில் (ASEAN-India Maritime Transport Agreement) இறுதி செய்யப்பட்டவை விரைவாகச் செயலுக்கு வருவது எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், இந்த மண்டலத்தில் இந்தியாவின் கீழைசார் சட்டமான “அனைத்து மண்டலத்துக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) மற்றும் இந்தோனேசிய கடல் கொள்கை மற்றும் உலகளாவிய கடல்சார் தொலைநோக்கு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைப்புகளுக்கான வழிகள் கண்டறியப்படுகின்றன.
இம்மண்டலத்தில் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமையும் கடல்சார் வளத்தைக் குறிக்கும் நீலப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
மேற்கண்டவற்றின் தொடர்ச்சியாக இருவரும் ஒருங்கிணைந்து சவால்களை எதிர்கொள்ளவும், இரு நாட்டுத் தலைவர்களும் இந்திய பசிபிக் மண்டலத்தின் கடல்சார் ஒத்துழைப்பு குறித்த தங்களது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர். அதையொட்டி கீழ்க்கண்ட முடிவுகளுக்கு இசைவு தெரிவித்தனர்.
அ.
வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்:
இரு நாடுகளுக்கு இடையிலும் மண்டல அளவிலும் மேம்பாட்டையும் பொருளாதார நீடித்த தன்மையை எய்துவதற்காக சரக்குகள், சேவைகள், முதலீடு, தொழில்நுட்பம் ஆகியவை தடையின்றி பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல்.
தொழில், வர்த்தகம் தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கும் இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதிகளுக்கும் இடையில் நேரடி மற்றும் டிஜிட்டல் முறையில், நிறுவன மற்றும் தனி நபர் இடையில் இணைப்பை மேம்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்; அதைப் போல் அந்தமான் சுமத்ரா இடையில் தொழில் வர்த்தகத் தொடர்பை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுத்தல்.
இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் மனித ஆற்றல் மேம்பாட்டுக்காக பாடுபடுதல், கடல்சார் பாதுகாப்பு, மீன்பிடி தொழிலை மேம்படுத்துதல், கடல்வள மேலாண்மை ஆகியவற்றை தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் வல்லுநர் பரிமாற்றம், கருவிகளை அளித்தல், நிதி உதவி அளித்தல்.
மீன்வளத் தொழில், கப்பல் கட்டும் தொழில் உள்பட கடல்சார் கட்டுமானத்தையும் கடல்சார் தொழில்களையும் மேம்படுத்துதல்.
ஆ, கடல்சார் வளத்தின் நீடித்த மேம்பாடு:
அறிவியல் அடிப்படையிலான மேலாண்மையையும் கடல்வாழ் உயிரின வளங்களையும் மேம்படுத்துதல்,
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளத்தை உறுதி செய்தல்.
சட்டவிரோத, விதிகளை மீறிய, கண்டறியப்படாத (IUU) மீன்பிடி தொழில்களை எதிர்கொண்டு, தடுத்து, ஒழித்தல். உலக கடல்வளத்துக்கும் கடல்சார் சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் மீன்பிடித்தலில் முறைகேடாகச் செய்யப்படும் குற்றச் செயல்களைக் கண்டறிதல்.
பொருளாதார மேம்பாட்டுக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவுவதால் நீலப் பொருளாதாரத்தை (கடல்சார் பொருளாதாரம்) மேம்படுத்துதல்.
கடலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கப் பாடுபடுதல்.
இ. பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்:
மண்டலத்தில் பேரிடர் ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில் தயார்நிலையை வலுப்படுத்துதல், பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல்.
புவியியல் சார் புள்ளி விவரங்களைப் பகிர்வது, வழிமுறைகள், கட்டுமானம், ஆகியவற்றை மேம்படுத்துதல், மேலும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு, பேரிடர் குறித்த ஆபத்தை அறிவித்தல் ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல்.
பேரிடர் மேலாண்மையில் உரிய முகமைகளின் மூலமாக தொடர்ந்து கூட்டான நடவடிக்கைகள் மேற்கொள்வது, களத்தில் இருப்போருக்குப் பயிற்சி அளித்தல், மனித நேய உதவிகளை அளித்தல் உள்ளிட்ட பல விஷயங்களில் இரு தரப்பு ஒத்துழைப்பைப் புதுப்பித்தல்.
ஈ. சுற்றுலா மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை ஊக்குவித்தல்:
மண்டல பொருளாதார முன்னேற்றத்துக்காக மக்களுக்கு இடையில் தொடர்பை அதிகரிக்கச் செய்தல்.
பொது சுற்றுலா மற்றும் சூழல்சார் சுற்றுலா ஆகியவற்றில் நீடித்த மேம்பாட்டை ஊக்குவித்தல்.
சபாங் தீவுக்கும் போர்ட்ப்ளேருக்கும் இடையில் தொடர்பை வலுப்படுத்தி, அந்தமான் கடல் சுற்றுலாவையும், ஹவ்லோக் தீவுக்கும் அந்தமான் தீவுக்கும் இடையிலும் தொடர்பை ஏற்படுத்தி கடல்சார் விளையாட்டுகள், சாகச நிகழ்வுகள், சுற்றுலாவையும் உருவாக்குதல்.
இந்தோனேசியா, பிர்யேன் நகரில் உள்ள அல்-முஸ்லிம் பல்கலைக்கழகம், லோக்ஸ்யெமாவே, மாலிகுஸ்லே பல்கலைக்கழகம், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் கல்வித் தொடர்பை ஏற்படுத்துதல். மேலும் அல் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இந்திய – இந்தோனேசிய ஆய்வு மையத்தை போர்ட்ப்ளேரில் உரிய கல்விநிறுவனத்தில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல்.
உ. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல்:
இந்திய பசிபிக் மண்டலத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துதல்
சம்பந்தப்பட்ட அனைத்து மண்டலத்திலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தை அடையும் நோக்கத்தில் திறந்தநிலை, உள்ளடக்கிய மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்ட ஒத்துழைப்பை உருவாக்குதல்.
கடற்படை அளவில் 2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட இருதரப்பு ரோந்து உள்பட தற்போதுள்ள கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொடர்ச்சியான பயிற்சியை மேற்கொள்ளுதல்.
இந்திய பசிபிக் மண்டலத்தில் கடல்சார் பாதுகாப்புக்காக தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துதல், பரிமாறிக் கொள்ளுதல்.
தற்போதுள்ள கடல்எல்லை குறித்த உடன்பாடுகளை நீடிக்கச் செய்தல், அது சார்ந்த தொழில்நுட்ப கூட்டங்களை நடத்த உறுதி செய்தல், ஐநா சாசனத்துக்கு உட்பட்டு எல்லைகள் குறித்த இரு தரப்பும் ஏற்கும் வகையில் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்துதல்.
கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றில் ராஜீய தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வழிகளைக் காண வல்லுநர்களைப் பரிமாறிக் கொள்ளுதல், கடல்சார் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்துதல்.
இரு தரப்பு ஒத்துழைப்பை நீர்நிலையியல் (Hydrography) மற்றும் கடல்சார் நிலவரைபடவியல் (Marine Ccartography) ஆகிய துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பைத் தொடருதல்.
தேடல், மீட்பு, மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பில் தொழில்நுட்ப உதவியுடன் கட்டமைப்பு மேம்பாட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
திறன்மேம்பாட்டின் மூலம் இரு நாட்டுக் கடலோரக் காவல் படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், நேரடித் தொலைத் தொடர்பு (ஹாட்லைன்) அமைத்தல், கூட்டுப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்காக இந்திய இந்தியப் பெருங்கடல் மண்டல நாட்டு அமைப்பின் (IORA) வரம்புக்கு உட்பட்டு ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்துதல்.
எ. அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு:
சுற்றுச்சூழலைக் கண்காணிக்கவும் விண்வெளியிலிருந்து புவியில் ஆய்வு, தொலையுணர்வுப் பணி மேற்கொள்ளவும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கும் (ISRO) இந்தோனேசியாவின் தேசிய விண்வெளி மற்றும் விமான ஆய்வு நிறுவனத்திற்கும் (LAPAN) இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
ஆய்வுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ளுதல், ஆய்வு, கல்வித் திட்டங்களைப் பரிமாறிக் கொள்ளுதல்.